Wednesday, January 27, 2021

பிறப்பு இறப்பு சான்றிதழ்.

 இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு இறப்பு சான்றிதழ். ஆம் பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ் உங்களிடம் இருக்கிறதா. சில பேரிடம் இறந்த சான்றிதழ் தொலைத்திருக்க வாய்ப்புன்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை.

இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பி டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் வேண்டும் போது பிரின்ட் அவுட் செய்து கொள்ளலாம். அது போக பரிமாற்றம் செய்ய அப்படியே ஈமெயிலில் பறி மாறிக்கொள்ளலாம்.
இதை நம்மூர் அட்களுக்கும் வெளியூர் அட்களும் இதனால் பலன் அடையலாம். அது போக உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒரே விஷயம் தான். அது தான் பிறந்த தேதி மட்டும் அல்லது இறந்த தேதி மட்டும் போதும். இது இருந்தால் உடனே அந்த நாளில் பிறந்த இறந்த அத்தனை ஆட்களின் பெயரும் ஏ - இசட் ஆல்ஃபபட் முறையில் வரும் அதில் உங்களுக்கு வேன்டிய பெயரை கிளிக் பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளுங்கள் அல்லது சேவ் பன்ணி கொள்ளுங்கள்.
அது போக பிறந்த இறந்த சட்டிஃபிக்கட்டில் ஏதேனும் தவறு இருந்தால் இங்கேயே திருத்தும் வசதி உள்ளது. ஒவ்வொரு சர்டிஃபிக்கடுக்கும் ஒரு யுனிக் நம்பர் உண்டு.
அதனால் சொத்து வாரிசு சான்றிதழ் கூட இதை வைத்து தான் வழங்கப்படும் அதனால் வீட்டில் இருந்தே பெற்று கொள்ளுங்கள் டோன்ட் வேஸ்ட் யூவர் டைம் அன்ட் மனி.
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் பெற -
உங்கள் பிறப்பு சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/.../birthCertificate...
உங்களுக்கு தேவையான இறப்பு சான்றிதழ் பெற - http://www.chennaicorporation.gov.in/.../deathCertificate...
உங்கள் இறப்பு சான்றிதழை திருத்தி கொள்ள - http://www.chennaicorporation.gov.in/.../deathCertificate...
இது சென்னை,மதுரை, கோயம்பத்தூர் , திருச்சி, மாநகராட்சியில் வசிக்கும் ஆட்களுக்கு மிச்சம் உள்ள ஊருகளுக்கு வருகிறது கூடிய சீக்கிரம்........
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Birth https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content...
கோயம்புத்தூர் ஆட்களுக்கு - Death - https://www.ccmc.gov.in/ccmc/index.php?option=com_content...
மதுரை ஆட்களுக்கு - http://203.101.40.168/newmducorp/birthfront.htm (NO DNS so use the same format)
திருச்சி ஆட்களுக்கு - https://www.trichycorporation.gov.in/birth_search.php#menu
திருநெல்வேலி ஆட்களுக்கு பாரம் மட்டும் - http://tirunelvelicorp.tn.gov.in/download.html
~~~~~~~~~~~~~~~

1)- உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது.

 1)- உயிலை நிரூபிப்பதற்கு, உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது.

(AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481)
2)- உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு நிலைகள் சந்தேகத்தை ஏற்படுத்தாது. சாதாரண முரண்பாடுகள் எல்லாம் சந்தேக சூழ்நிலைகளை ஏற்படுத்தாது.
(AIR-1997-SC-127)
3)- உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை, உயில் எழுதி வைத்தவர் பார்க்கவில்லை. அதேபோன்று உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்களை உயிலை தயாரித்தவரும் பார்க்கவில்லை. அதனால் உயிலில் சாட்சி கையெழுத்து போட்டது நிரூபிக்கப்படவில்லை.
(AIR-1998-M. P - 46)
4)- உயிலானது, உயிலை எழுதி வைத்தவரின் சுதந்திரமான போக்கில் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் திருப்தியடைந்திருத்தல் வேண்டும்.
(1998-2-MLJ-SC-128)
5)- ஒரே ஒரு சாட்சியை மட்டும் உயிலை நிரூபிக்க விசாரித்தது போதுமானதாகும். (ஆனால் மனநிறைவு அடையாவிட்டால் வெறும் ஒரு சாட்சியை விசாரித்தது மட்டுமே போதுமானதாகாது)
(AIR-2003-SC-761)
6)- உயில் பதிவு செய்யப்பட்டது என்ற காரணத்தால் மட்டுமே அந்த உயிலின் மீதான சந்தேக சூழ்நிலைகள் அகன்று விடாது. பதிவு செய்யப்பட்ட உயில் என்றாலும் அதனை சாட்சிகளை கொண்டு நிரூபிக்கவேண்டும்.
(1999-2-MLJ-609)
7)- Indian Evidence Act - sec 68 - உயிலை எழுதி வைத்தவர் உயிலில் கண்ட சொத்து விவரத்தின் கீழ் கையொப்பமிட்டார். மற்றபடி ஒரு பக்கத்தை தவிர மற்ற பக்கங்களில் கையொப்பம் செய்திருந்தார். எனவே இந்த உயில் செல்லக்கூடியதாகும்.
(AIR-1999-KER-274)
8)- உயிலை எழுதி வைத்தவர் உயிலில் பெருவிரல் ரேகையைப் பதித்திருந்தார். உயிலை எழுதி வைத்தவருக்கு கையெழுத்து போட தெரியும். எனினும் கையெழுத்து போடததற்கு என்ன காரணம் என்று உயிலில் குறிப்பிடப்படவில்லை . அதற்கான காரணத்தை அறிய சார்பதிவாளர் விசாரிக்கப்பட்டார். ஆனால் அது போதுமானதாக இல்லை. உயில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
(1999-3-MLJ-608)
9)- அசல் உயில் ஒப்படைக்கப்படவில்லை. உயிலின் சான்றிட்ட நகல் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது. அது இரண்டாம் நிலை சாட்சியமாகும். அது சான்றாவணமாக அனுமதிக்கப்பட்டது. அசல் உயிலை ஒப்படைக்காதது பாதிப்பை ஏற்படுத்தாது.
(1999-3-MLJ-651)
10)- உயில் எழுதப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. உயிலில் சாட்சி கையெழுத்து போட்டவர்கள் மற்றும் உயிலை தயாரித்தவர் என அனைவரும் இறந்து விட்டார்கள். இந்த உயிலில் சந்தேகம் எதுவும் இல்லை. இந்த உயிலை உண்மையானது என்று ஊகிக்கலாம்.
(AIR-2002-A. P - 164-NOC)
(1999-3-MLJ-577)... Courtesy...
5
2 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

முதல் தகவல் அறிக்கை - பதிவு செய்வது எப்படி

 முதல் தகவல் அறிக்கை -

பதிவு செய்வது எப்படி
(FIR): நடவடிக்கை எடுக்க வேண்டிய வழக்குகளில், நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல்துறையின் வரையறைக்குள் வராத வழக்குகளில் தேவையில்லாமல் நடவடிக்கை எடுப்பதும், அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதும், காவல்துறையினர் மீது தொடர்ச்சியாக இருந்து வரும் குற்றச்சாட்டுகள் ஆகும்.
வழக்குகளை பதிவுசெய்வதில் சில எளிய முறைகளை பின்பற்றுதல், காவல் துறையினருக்கு உள்ள கடமைகள், நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவற்றை தெரிந்து கொண்டு உரிய முறையில் அணுகுதல் ஆகியவை மேற்கண்ட பிரச்சனைகளில் இருந்து பாதிக்கபட்டோர் விடுபட உதவும்.
முதலில் ஒரு குற்றச்சாட்டின் பல்வேறு தன்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பொதுவாக குற்றங்களை:
உரிமையியல் வழக்குகள் (Civil Cases)
குற்றவியல் வழக்குகள் (Criminal Cases)என இருவகையாக பிரிக்கலாம்.
இதில் உரிமையியல் சார்ந்த வழக்குகளில் காவல் துறையினர் தன்னிச்சையாக செயல்பட எந்தவித சட்ட உரிமையும் இல்லை.
பொதுவாக இரண்டு தனிப்பட்ட தரப்பினருக்கு இடைப்பட்ட சொத்து மற்றும் அனுபவத்தின் மீதுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரச்னைகளை உரிமையியல் வழக்குகள் என்கிறோம்.
இந்த உரிமையியல் பிரசனைகளில் கூட அடிதடி தகராறுகள், ஆவணங்களை போலியாக உருவாக்குதல், அத்துமீறி நுழைதல், நம்பிக்கை மோசடி ஆகிவற்றோடு வரும்போது அந்த செயல்களை பொறுத்த வரை குற்றவியல் தன்மை பெறுகின்றன.
குற்றவியல் வழக்குகளை பொறுத்தவரை அவை இரண்டு தனிப்பட்ட மனிதர்களுக்கு இடையே ஏற்பட்டாலும், சமுதாயத்திற்கெதிராக ஏற்பட்டாலும், அவை அரசுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாக கருதப்படுவதுடன் காவல்துறையினரின் விசாரணை, கைது போன்றவற்றிற்கும் வழிவகுக்கின்றன.
பொதுவாக அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, ஏமாற்றுதல், பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் போன்றவை குற்றவியல் வழக்குகளாக கருதப்படுகின்றன. குற்றவியல் வழக்குகளை இரண்டு முக்கியப்பிரிவுகளாக பிரிக்கலாம்.
அவை நீதிமன்றத்தின் உத்தரவோ அனுமதியோ இன்றி காவல் துறையினர் தானாக விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் (Cognizable Offences), நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லாத வழக்கு (Non Cognizable Offences)களாகும்.
அடிதடி, திருட்டு, கொலை, கொள்ளை, வெட்டு, குத்து, பெண்கள் மீதான வன்முறைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைத்தல் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல், நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தல். போன்றவை காவல் துறையினர் தானாக விரைந்து செயல்பட வேண்டிய வழக்குகளாக இருப்பதால் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளாக (Cognizable Offences) கருதப்படுகின்றன.
காவல்துறைக்கு அதிகாரமில்லாத விஷயம்:
ஒருவர் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு,
தன் மீது அவதூறு பரப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டு, அஜாக்கிரதையாக காயம் ஏற்படுத்திவிட்டார் என்ற குற்றச்சாட்டு,
பொய்யான ஆவணம் தயாரித்து விட்டார் போன்ற குற்றச்சாட்டுகளில் காவல் துறையினரின் நடவடிக்கை தேவைப்படினும் காவல்துறையினர் மிக அவசரமாக செயல்பட வேண்டிய அவசியமில்லாததாலும் அவற்றில் உரிமையியல் விஷயங்கள் சற்றுக் கூடுதலாக கலந்திருப்பதாலும் அவை நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக (Non Cognizable Offences)கருதப்படுகின்றன.
ஆனால் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளாக இருந்தாலும் ஒரே ஒரு வழக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக இருப்பினும் அவ்வழக்கு முழுமையுமே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்காக கருதப்படும். எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள்? எவையெல்லாம் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல் துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகள்? என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒவ்வொரு தண்டனைக்கு அருகிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறைக்கு அதிகாரமுள்ள வழக்கு: நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல் துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து யாரேனும் காவல்துறையினருக்கு தகவல் தந்தாலோ அல்லது காவல் துறையினரின் நேரடி கவனத்திற்கு வந்தாலோ அதன் மீது விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கட்டாயமான கடமையாகும். இதிலிருந்து தவறும் காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க காவல் துறையின் நிலையாணையின் (Police Standing Order)படியும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் படியும் வழியுள்ளது.
எனவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல்துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகள் குறித்து தகவல் தெரிந்தால் குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 154ன்படி முதல் தகவல் அறிக்கை (First Information Report) பதிவு செய்து விசாரிக்க வேண்டியது காவல்துறையினரின் கட்டாய கடமையாகும். அவ்வாறு காவல் துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குகளில் முதல் தகவலறிக்கையை காவல் அதிகாரிகள் பதிவு செய்ய மறுத்தால் நடை முறை ரீதியில் எளிமையாக அதே புகாரை பதிவுத் தபாலில் அதே காவல் நிலையத்திற்கு அனுப்பி ஆதாரத்தை வைத்துக்கொண்டால் காவல் துறையினர் தானாக வழக்கை பதிவுசெய்யவும், பாதிக்கப்பட்ட புகார்தாரர் பின்னாளில் நீதிமன்றத்தை அணுகவும் உதவியாக
மேலும் உடல் காயமடைந்த யாரேனும் ஒருவரின் புகாரை காவல்துறையினர் பதிவு செய்ய மறுத்தால் ஏதேனும் மருத்துவமனையில் அதுவும் இயன்ற வரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக காயத்திற்கான காரணத்தைச் சொல்லி சேர்ந்து கொண்டால் அங்கிருந்தே காவல் நிலையத்திற்கு தானாக தகவல் செல்லவும் அந்த மருத்துவமனைப் பதிவை புகார் பதிவிற்கு பயன்படுத்தவும் வாய்ப்புண்டு. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 154 (3)ன் கீழ் மாவட்ட கண்காணிப்பாளருக்கோ, பெருநகரங்களில் காவல்துறை ஆணையாளருக்கோ பதிவு தபாலில் அனுப்பலாம். அவ்வாறு கிடைக்கப்பெற்ற புகாரை அத்தகைய அதிகாரி தானாக விசாரிக்கலாம். அல்லது தகுதியுடைய ஒரு காவல்துறை அதிகாரியை விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம்.
எப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுப்பது சட்டப்படி தவறு:
அவ்வாறும் புகாரானது பதிவு செய்யப்படாவிட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 156(3)ன் கீழ் அக்குற்றச்சாட்டு நடைபெற்ற எல்லையில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம். அப்புகாரில் உண்மை இருப்பதாக நீதித்துறை நடுவர் திருப்தி அடைந்தால், அவ்வழக்கை முதல் தகவலறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறையினருக்கு உத்தரவிடலாம். அவ்வாறு உத்தரவிடப்பட்டால் காவல் துறையினர் வழக்கை பதிவு செய்து விசாரிப்பதை தவிர வேறு வழியில்லை.
மேலும் வழக்கை பதிவுசெய்து விசாரிக்க ஆணையிட்ட நடுவர் நீதிமன்றம் வழக்கின் விசாரணையையும் மேற்பார்வையிடலாம். இப்பிரிவின்கீழ் நீதித்துறை நடுவரின் அதிகாரத்தை சக்கிரியா வாசு மற்றும் உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் டிவைன் ரெட்ரிட் மற்றும் கேரள மாநில அரசு ஆகிய வழக்குகளின் உத்தரவுகள் விரிவுபடுத்தியுள்ளன. மேலும் இப்பிரிவின் கீழ் ஒரு புகார்தாரர் நீதிமன்றத்தை அணுகும்போது குற்றம் சாட்டப்படுபவரை (Accused) நீதிமன்றம் விசாரிக்க வேண்டியதில்லை.
அவ்வாறு நீதிமன்றத்தை அணுக குற்றம் சாட்டப்படுபவருக்கு எந்த உரிமையும் இல்லையென்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுகின்றன.
இருப்பினும் எந்திரகதியில் அதிகாரவரம்பில்லாமல் அவ்வாறு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 156 (3)ன் கீழ் ஆணையிடப்பட்டால் அவ்வாணையையும், அவ்வாணையினால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும் குற்றவியல் சட்டப்பிரிவு 482ன் கீழ் அவ்வாணையால் பாதிக்கப்பட்டவர் கேள்விக்குள்ளாக்கி நீக்கலாம் என குருதத் பிரபு மற்றும் எம். எஸ். கிருஸ்ணாபத் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் வழக்கு குறிப்பிடுகின்றது.
எனினும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் உரிமை குறித்து தெளிவான தீர்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. குற்றச்சாட்டை பதிவு செய்வதில் உள்ள மற்றொரு முக்கியமான பிரிவு தான் தனிப்புகார் (Private Complaint) ஆகும். குற்றவியல் நடைமுறைச்சட்டப் பிரிவு 200ன் கீழ் தொடுக்கப்படும் இப்புகார், பிரிவு 190(1)ன் கீழாக புலன் கொள்ளப்பட்டு முதலில் புகார்தாரர் சத்தியபிரமானத்தின் மூலம் விசாரிக்கப்படுகிறார். அவ்வாறு விசாரிக்கப்படும் போது தேவைப்படின் சாட்சிகள் யாரேனும் இருந்தால் அவர்களையும் நீதித்துறை நடுவர் விசாரிக்கலாம். தேவைப்படின் பிரிவு 202ன் கீழ் காவல்துறை அதிகாரிகளையோ அல்லது தகுதியுள்ள பிறரையோ கூட விசாரிக்கலாம்.
அவ்வாறு விசாரித்த பின் புகாரை விசாரிப்பதற்கு சாராம்சம் இல்லையென கருதினால் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 203ன் கீழ் வழக்கை தள்ளுபடி செய்யலாம். மாறாக வழக்கை விசாரிக்க சாராம்சம் இருக்குமென கருதினால் குற்றம் சாட்டப்படுவருக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 204ன் கீழ் அழைப்பாணை அனுப்பி வழக்கை தொடர்ந்து விசாரிக்கலாம்.
இதைப் போலவே நீதிமன்றத்தின் அனுமதியின்றி விசாரணை செய்ய காவல்துறைக்கு அதிகாரமில்லாத வழக்குகளில் காவல்துறையினரை விசாரிக்க நீதித்துறை நடுவருக்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 155(3)ன் கீழ் அதிகாரமுள்ளது. அவ்வாறு நீதித்துறை நடுவரால் உத்தரவிடப்பட்டால் அவ்வழக்கை காவல்துறையினர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி காவல்துறையினர் விசாரிக்க அதிகாரமுள்ள வழக்குபோல் விசாரிக்கலாம். ஆனால் கைது செய்வது மட்டும் நீதிமன்ற ஆணையின்றி செய்ய இயலாது.
Jk 9788979971
2
3 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

 ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?

எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், கிரயப் பத்திரம், இன்ஷூரன்ஸ் பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்.
அப்படி தொலைந்து போனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.
கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்.
அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.
தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.
நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.
எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்.
சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.
தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.
அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.
யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.
கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.
நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும்.
20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.
யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).
கால வரையறை: 15 வேலை நாட்கள்.
நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.
Jk 9445952220
2
2 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்