Sunday, September 26, 2021

தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனுவின் மாதிரி படிவம்



தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ்

புகார் மனுவின் மாதிரி படிவம் 

1) முதல் பாராவை தேவைக்கேற்ப கீழ்கண்டவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.

(கோரிய தகவல்கள் தனிப்பட்ட நபரின் தகவல்கள் என்று எனக்கு தகவலை வழங்க மறுக்கின்றார்)

(பொது தகவல் அலுவலரானவர் எனது மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்)

(பொது தகவல் அலுவலரானவர் எனது மனுவிற்கு 30 நாட்கள் கடந்தும் பதில் அளிக்கவில்லை)

(பொது தகவல் அலுவலரானவர் நான் கோரிய தகவலுக்கு, ஆவணங்களுக்கு நியாயமான கட்டணத்தைவிட அதிகமான தொகை கோருகின்றார்)

(பொது தகவல் அலுவலரானவர் பொய்யான, உண்மைக்கு புறம்பான தகவலை அளித்துள்ளார்)

(பொது தகவல் அலுவலரின் அலுவலகத்தில் ஆய்வு செய்ய சென்றால், ஆய்வு செய்வதற்கான அனுமதியை மறுக்கின்றார்)

2. கோரிய தகவல்கள் பிரிவு 4(1)(b)-ல் அடங்கும் தகவல்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த பிரிவில் அடங்காத தகவல்கள் என்றால், மேற்கூறிய மாதிரி படிவத்தில் பாரா 2-யை நீக்கிவிடவும். என்னை பொறுத்த வரையில் கோரும் தகவல்கள் ஏதாவது ஒரு வகையில் மேற்படி பிரிவில் அடங்கும். அல்லது, அவ்வாறு அடங்கும் வகையில் உங்கள் தகவலை கோர முயற்சியுங்கள்.

3. இந்த புகார் மனுவில் எந்த இடத்திலும் கோரிய தகவலை வழங்கவோ, அல்லது தகவல் வழங்காதற்கு இழப்பீடோ கோரக்கூடாது. அவ்வாறு கோரினால், புகாரை பெற்றுக்கொண்ட தகவல ஆணையமானது, முதல் முறையீடு இன்றி இரண்டாம் முறையீடானது தகவல் ஆணையத்திற்கு தகவல் கோரி நேரடியாக புகாராக மனு செய்யப்பட்டுள்ளது என்று காரணம் காட்டி, புகார் மனுவானது நிரகாரிக்கப்படலாம். நினைவில் கொள்ளுங்கள், தகவல் மற்றும் இழப்பீடு கோரினால், முதல் மேல் முறையீட்டினை முடித்துவிட்டு, பின்னர் பிரிவு 19(3)-ன் கீழ் இரண்டாம் மேல் முறையீடுதான் செய்ய வேண்டும்.

4. புகார் என்பது மேல் முறையீடு அல்ல. அது பொது தகவல் அலுவலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும். ஆகவே, புகார் செய்வதற்கு போதுமான முகாந்தரம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்டனை பிரிவுகள் 20(1) மற்றும் பிரிவு 20(2) ஆகியவைகள், பிரிவு 18(1) மற்றும் 19(3) ஆகியவைகளுக்கு பொருந்தும்.

5. உதாரணமாக மனுதாரர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் விபரங்களை கேட்கின்றார். இதை பொது தகவல் அலுவலரானவர் தனிப்பட்ட நபர் தகவல் என்று மறுத்தால் தாரளமாக புகார் செய்யலாம் ஏனெனில் பிரிவு 4(1)(b)(ix)-ன்படி அந்த அலுவலகம் தானகவே முன் வந்து அவர்களது இணையதளத்திலும் நோட்டிஸ்போர்டிலும் வெளியிடப்படவேண்டி தகவல்கள் ஆகும். தானாக வெளியிடப்படவேண்டியதை, மனுதாரருக்கு வழங்க மறுக்கின்றார் என்றால் அதற்காக புகார் செய்யலாம்.

6. சட்டத்தின் விதிகளின்படி 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலரானவர் தகவலை வழங்க வேண்டும். அதற்காக 31 வது நாள் புகார் செய்யாமல், 40 நாட்கள் வரை காத்திருந்து புகார் செய்யலாம்.

7.பொது தகவல் அலுவலர், மனுதாரரின் மனுவை திருப்பி அனுப்பிவிட்டாலோ, ஆவணங்கள் வழங்க நியாமற்ற கட்டணத்தை கோரினாலோ மற்றும் பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டாலோ, உடனே புகார் செய்யலாம்.

8.புகாரின் நகலை பொது தகவல் அலுவலருக்கு கட்டாயம் அனுப்புங்கள்.

9. புகாரை தொடர்ந்து, முதல் மேல் முறையீட்டினை வழக்கம்போல தனியாக செய்யுங்கள்.












தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?.

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)


தகவல் அறியும் உரிமைச் சட்டம் Right to information act RTI



தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம்  டிசம்பர் மாதம் 2004, ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005, மக்களவையிலும், மே 12, 2005 ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.

நோக்கம்

அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.

தகவல் கொடுக்கும் கடமை

அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.

தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?. 
( What type questions can be asked in RTI act 2005 )
1) பதிவேடுகள் (Records), 

2) ஆவணங்கள் (Documents), 
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments), 
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள், 
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars), 
8) ஆவணகள் (Documentation), 
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters), 
11) முன்வடிவங்கள் (Model), 
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer), 
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox)
ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.

ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழும்மாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.

விண்ணப்பம்

விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லதுமத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ(அதிகாரிக்கோ) அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அனுப்பலாம். குறிப்பு-;  தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை.

காலக்கெடு-; விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். குறிப்பு-; அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும்.

அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது Onlineல் விண்ணப்பம் செய்ய முடியும்.
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து 




விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டிய சட்ட விதிகள்

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெற வேண்டும்.
யாருக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லையா ?
எந்த துறைக்கு (Department) அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லையா?
கவலை வேண்டாம்.

வழிமுறை 

உங்களுக்கு அருகில் உள்ள கலக்டர் ஆபிஸ் முகவரிக்கு அனுப்பவும்.
(உதாரணம்)
பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை ரோடு,
தேனி மாவட்டம் 625605.
விளக்கம்:
1) முகவரியில் "பொது தகவல் அலுவலர்" என்ற வார்த்தை முக்கியமாக எழுத வேண்டும். காரணம் 2005 ஆம் வருடத்திலேயே ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு "பொது தகவல் அலுவல் அதிகாரி" ஏற்க்கனவே நியமிக்கப்பட்டு உள்ளார்.
2) எந்த அரசு பொது தகவல் அதிகாரியின் கடமை என்னவெனில், உங்களது "தகவல் கேட்டு விண்ணப்பித்த மனுவை" சம்பத்த பட்ட அரசு அலுவலகத்துக்கு அவர்களே அனுப்பி வைக்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டம் 2005 கூறுகிறது.
3) எனவே நீங்கள் கோரிய தகவல் எந்த மாவட்டமாக இருந்தாலும் முதல் 15 நாட்களுக்குள் சென்றுவிடும். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரி பதில் அளிக்க 15 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் ஆக மொத்தம் 30 நாட்களுக்குள் உங்களுக்கு பதில் வந்தடையும்.

தகவல் அறியும் சட்ட(RTI ACT)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?



1.முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது?

பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத் தை நிராகரிக்கும்போது.நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது 30 நாள்களுக்குள் தராத போது!




துணை பொதுதகவல் அதிகாரியி னை பணியமர்த்தாத போது/ பொது த்தகவல் அதிகாரி உங்களது விண் ணப்பத்தினை பெற்றுக் கொள்ளாத போது அல்லது நீங்கள் கேட்கும் தகவலைத் தராத போது.துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தை நிராக ரித்து அதனை பொதுத்தகவல் அதி காரிக்கு அனுப்ப மறுக்கும் போது.பொதுத்தகவல் அதிகாரியின் தீர்ப்பு குறித்து நீங்கள திருப்தியடையாத போது உங்களுக்காகத் தரப்பட்ட தகவல் போதுமானதாக (அ) தவறா னதாக (அ) தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக இருக் கும்போது.




தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணும் போது


2.முதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தினை அனுப்ப உள்ள கால அவகாசம்

காலாவதியாகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது மாநிலபொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுகோள் நிரா கரிப்பு) பின், (SPIO) அல்லது மத்தி யப் பொது தகவல் அதிகாரியிட மிருந்துத் தகவல் பெற்றபின் (CPIO).

மேல்முறையீடு (Appellate) தொட ர்பான அதிகாரி, மேல் முறையீட் டாளர் தனது மனுவினைப் பதிவு செய்யமுடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால், மேல் முறை யீட்டாளரின் மனுவினை 30 நாட் கள் கடந்த பின்னரும் பெற்றுக் கொள் ளலாம்.


3.முதல் மேல்முறையீட்டு மனுவினை எழுதுதல்




விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதலாம் அல்லது விண்ணப்பம் கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண் டும்.

தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தர வேண் டும்.

சுய ஒப்பமிட்ட (self attested) விண்ணப்பத்தின் நகலையும் விண் ணப்பத்திற்கான கட்டணம் தரப்பட்ட சான்றையும், பொது த்தகவல் அதி காரியிடம் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான ரசீதையும், தீர்ப் பின் நகலையும் விண்ணப்பத்துடன்/மனுவுடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனை த்து ஆவணங்களின் நகலையும் வைத்துக்கொள்ளவும்.

4.எங்கு முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பது?




பொதுத்தகவல் அதிகாரி இருக்கும் அதே அலுவலகத்திலுள்ளமுதன்மை மேல் முறையீட்டு அதிகாரி (First Appellate Authority) இடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவன நிலை முறை ப்படி (hierarchy) முதன் மை மேல் முறையீட்டு அதிகாரி பொதுத்தகவல் அதிகாரியைவிட உயர் பதவியிலிருப் பவராவார். எனவே, மேல் முறையீட்டு விண்ண ப்பத்தினைப் பெறவும், தேவைப்படும் விவரங்களைத் தரவும் அல்லது மேல் முறையீட்டினை நிராகரிக்கவும் அவருக்கு உரிமையுள்ளது.

முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கும் முன், முதன் மை மேல் முறையீட்டு அதிகாரியின் பெயரையும், குறிப்பிடப் பட்டுள்ள கட்டணத்தையும் கட்டணம் செலுத்துவதற்குரிய முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். (சில மாநிலங் களில் முதல் மேல் முறையீட்டு மனுவுக்கென கட்டணம் வசூலிக்காதபோதும், சில மாநிலங்களில் முதல் மேல் முறை யீட்டு மனுவை இலவசமாகவே பெற்றுக்கொள்கின்றன.)


5.முதல் மேல் முறையீட்டு மனுவை எவ்வாறு அனுப்புவது?

பூர்த்தி செய்யப்பட்ட மனுவை நேரடியாகவோ அல்லது அஞ் சல் மூலமாகவோ தரலாம்.

அஞ்சல் மூலம் மனுவை அனு ப்ப நேரிட்டால் பதிவுத்தபாலில் அனுப்பவும். கூரியர் தபாலைத் (courier service) தவிர்க்கவும்.

நேரடியாகக் கொடுத்தாலும், அஞ்சல் மூலம் அனுப்பினாலும் இரண்டிற்கு ரசீதினைப் பெற்று க்கொள்ளவும்.

6.தகவல் பெறக்கூடிய கால அவகாசம்

பொதுவாக சாதாரண வழக்குகளில் 30 நாட்களிலும், விதி விலக்காக உள்ள வழக்குகளுக்கான மனுக்களுக்கான பதிலை 45 நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority (FAA)), மேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து நேரம்/காலம் கணக்கிடப்படும்.


விதிவிலக்கு அளிக்கப்பட்ட தகவல்கள்

இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.
(1) இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,(2) நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.(3) நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.(4) வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.(5) ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.(6) வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.(7) ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.(8) புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.(9) அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.குறிப்பு-;அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.(10) பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.

அபராதம்

இச்சட்டத்தின்படி தவறு செய்யும் தகவல் அலுவலர்கள் (அதிகாரி) மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும் தலா 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் தகவல் ஆலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கவும் இச்சட்டம் வழிகோலுகின்றது. 

Wednesday, September 22, 2021

வருவாய் கோட்டாட்ச்சியருக்கான அதிகாரங்கள்

 *வருவாய் கோட்டாட்ச்சியருக்கான அதிகாரங்கள்*

*1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்புத் திட்ட பணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.* *2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.* **3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.* *4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.* *5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில், சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்*. *6. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.* *7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.* *8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 மற்றும் 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.* *9. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நியமனம், மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.* *10. கிராம உதவியாளர்கள் நியமனம் மற்றும் தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்*. *11. நூலக வரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசுத் துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைத் துரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.* *12. நில ஒப்படைப்பு மற்றும் பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.* *13. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.* *14. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.* *15. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.* *16. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்*. *17. நிலச் சீர்திருத்த சட்டங்கள் மற்றும் குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.* *18. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.* *19. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.* *20. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்*. *21. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.* *22. இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்*. *23. கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்தல் மற்றும் பயிர் மேலாய்வு செய்தல்.* *24. தமிழ்நாடு இனம் (நியாயவாரம்) சட்டம் 1963 -ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.* *25. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல், குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.* *26. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.* *27. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை (வருவாய்த் தீர்வாயம்) முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.* *28. தமிழ்நாடு விவசாயகுத்தகைச் சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.* *29. மரப்பட்டா- வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.* *30. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.* *31. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல். 31. முதியோர் உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகை வழங்கும் பணியைக் கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.* *32. பர்மா மற்றும் சிலோன் அகதிகள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.* *33. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.* *34. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் மற்றும் ஆதிதிராவிடர் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.* *35. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.* *36. விபத்து மற்றும் சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.* *37. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்* *38. மனுநீதி திட்ட முகாம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.* *39. நியாயவிலைக் கடைகள், அரிசி ஆலைகள் தணிக்கை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.* *40. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை*. *41. (சில பகுதிகளில்) குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.* *42. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு) சட்டத்தினை செயல்படுத்தல்.* *43. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.* *44. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.* *45. வெடி மருந்துச் சட்டம், படைக்கலச் சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளைச் செய்தல்.* *46. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல்.* *47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு (மொலாசஸ்) உரிய கணக்குகள் தணிக்கையிடல்.* *48. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரர் சட்டம் அமுல் செய்தல்.* 49. முக்கியப் பிரமுகர்கள் வருகையைக் கவனித்தல்