Tuesday, October 19, 2021

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்

 

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்...

தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்...

நடத்தை விதிகள் என்றால் என்ன?

அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள நடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.

இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) &  (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.

தந்தை / வளர்ப்பு தந்தை

தாய் / வளர்ப்பு தாய்

கணவன்

மனைவி

மகன் / வளர்ப்பு மகன்

மகள் / வளர்ப்பு மகள்

சகோதரன்

சகோதரி

மனைவியின் தாய் மற்றும் தந்தை

கணவரின் தாய் மற்றும் தந்தை

சகோதரனின் மனைவி

சகோதரியின் கணவர்

மகளின் கணவர்

மகனின் மனைவி

இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.

உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :

தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.

அரசாணை எண்  Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.

அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P &  A. R, dt - 22.9.1983 மற்றும்  Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.

தனியாக வகுப்பு நடத்துதல் :

எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution  நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).

விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :

அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).

அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :

அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).

அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).

மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).

அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).

இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).

வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).

Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். ( Rule 7(9).

கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.

A Group Employees may Purchase upto Rs. 80,000/-

B Group Employees may Purchase upto Rs. 60,000/-

C Group Employees may Purchase upto Rs. 40,000/-

D Group Employees may Purchase upto Rs. 20,000/-

அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).

அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :

அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No  9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).

அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).

Sunday, September 26, 2021

தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ் புகார் மனுவின் மாதிரி படிவம்



தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 18(1)-ன் கீழ்

புகார் மனுவின் மாதிரி படிவம் 

1) முதல் பாராவை தேவைக்கேற்ப கீழ்கண்டவாறு மாற்றிக்கொள்ளுங்கள்.

(கோரிய தகவல்கள் தனிப்பட்ட நபரின் தகவல்கள் என்று எனக்கு தகவலை வழங்க மறுக்கின்றார்)

(பொது தகவல் அலுவலரானவர் எனது மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டார்)

(பொது தகவல் அலுவலரானவர் எனது மனுவிற்கு 30 நாட்கள் கடந்தும் பதில் அளிக்கவில்லை)

(பொது தகவல் அலுவலரானவர் நான் கோரிய தகவலுக்கு, ஆவணங்களுக்கு நியாயமான கட்டணத்தைவிட அதிகமான தொகை கோருகின்றார்)

(பொது தகவல் அலுவலரானவர் பொய்யான, உண்மைக்கு புறம்பான தகவலை அளித்துள்ளார்)

(பொது தகவல் அலுவலரின் அலுவலகத்தில் ஆய்வு செய்ய சென்றால், ஆய்வு செய்வதற்கான அனுமதியை மறுக்கின்றார்)

2. கோரிய தகவல்கள் பிரிவு 4(1)(b)-ல் அடங்கும் தகவல்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அந்த பிரிவில் அடங்காத தகவல்கள் என்றால், மேற்கூறிய மாதிரி படிவத்தில் பாரா 2-யை நீக்கிவிடவும். என்னை பொறுத்த வரையில் கோரும் தகவல்கள் ஏதாவது ஒரு வகையில் மேற்படி பிரிவில் அடங்கும். அல்லது, அவ்வாறு அடங்கும் வகையில் உங்கள் தகவலை கோர முயற்சியுங்கள்.

3. இந்த புகார் மனுவில் எந்த இடத்திலும் கோரிய தகவலை வழங்கவோ, அல்லது தகவல் வழங்காதற்கு இழப்பீடோ கோரக்கூடாது. அவ்வாறு கோரினால், புகாரை பெற்றுக்கொண்ட தகவல ஆணையமானது, முதல் முறையீடு இன்றி இரண்டாம் முறையீடானது தகவல் ஆணையத்திற்கு தகவல் கோரி நேரடியாக புகாராக மனு செய்யப்பட்டுள்ளது என்று காரணம் காட்டி, புகார் மனுவானது நிரகாரிக்கப்படலாம். நினைவில் கொள்ளுங்கள், தகவல் மற்றும் இழப்பீடு கோரினால், முதல் மேல் முறையீட்டினை முடித்துவிட்டு, பின்னர் பிரிவு 19(3)-ன் கீழ் இரண்டாம் மேல் முறையீடுதான் செய்ய வேண்டும்.

4. புகார் என்பது மேல் முறையீடு அல்ல. அது பொது தகவல் அலுவலர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆகும். ஆகவே, புகார் செய்வதற்கு போதுமான முகாந்தரம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். தண்டனை பிரிவுகள் 20(1) மற்றும் பிரிவு 20(2) ஆகியவைகள், பிரிவு 18(1) மற்றும் 19(3) ஆகியவைகளுக்கு பொருந்தும்.

5. உதாரணமாக மனுதாரர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர்களின் விபரங்களை கேட்கின்றார். இதை பொது தகவல் அலுவலரானவர் தனிப்பட்ட நபர் தகவல் என்று மறுத்தால் தாரளமாக புகார் செய்யலாம் ஏனெனில் பிரிவு 4(1)(b)(ix)-ன்படி அந்த அலுவலகம் தானகவே முன் வந்து அவர்களது இணையதளத்திலும் நோட்டிஸ்போர்டிலும் வெளியிடப்படவேண்டி தகவல்கள் ஆகும். தானாக வெளியிடப்படவேண்டியதை, மனுதாரருக்கு வழங்க மறுக்கின்றார் என்றால் அதற்காக புகார் செய்யலாம்.

6. சட்டத்தின் விதிகளின்படி 30 நாட்களுக்குள் பொது தகவல் அலுவலரானவர் தகவலை வழங்க வேண்டும். அதற்காக 31 வது நாள் புகார் செய்யாமல், 40 நாட்கள் வரை காத்திருந்து புகார் செய்யலாம்.

7.பொது தகவல் அலுவலர், மனுதாரரின் மனுவை திருப்பி அனுப்பிவிட்டாலோ, ஆவணங்கள் வழங்க நியாமற்ற கட்டணத்தை கோரினாலோ மற்றும் பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டாலோ, உடனே புகார் செய்யலாம்.

8.புகாரின் நகலை பொது தகவல் அலுவலருக்கு கட்டாயம் அனுப்புங்கள்.

9. புகாரை தொடர்ந்து, முதல் மேல் முறையீட்டினை வழக்கம்போல தனியாக செய்யுங்கள்.












தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?.

 தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI)


தகவல் அறியும் உரிமைச் சட்டம் Right to information act RTI



தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 (Right to Information Act, சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம்  டிசம்பர் மாதம் 2004, ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005, மக்களவையிலும், மே 12, 2005 ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவியழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள்.

நோக்கம்

அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும்.

தகவல் கொடுக்கும் கடமை

அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்கு கொடுக்க வேண்டும். குறிப்பாக தகவல்களை பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது.

தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?. 
( What type questions can be asked in RTI act 2005 )
1) பதிவேடுகள் (Records), 

2) ஆவணங்கள் (Documents), 
3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள்.( Memo Office Tips),
4) கருத்துரைகள் (Comments), 
5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள், 
6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes),
7) சுற்றறிக்கைகள் (Circulars), 
8) ஆவணகள் (Documentation), 
9) ஒப்பந்தங்கள் (Agreements),
10) கடிதங்கள் (Letters), 
11) முன்வடிவங்கள் (Model), 
12) மாதிரிகள் (Models),.
13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer), 
14) மின்னஞ்சல்கள் (Emails).
15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well),
16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,
(The right to review relevant documents and records),
17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox)
ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன.

ஆவணங்கள், குறிப்பாணைகள், மின்னஞ்சல்கள், கருத்துரைகள், அறிவுரைகள், செய்தி வெளியீடுகள், சுற்றறிக்கைகள், ஆணைகள், நாள்விவரக் குறிப்பேடுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், தாள்கள், மாதிரிகள், மாதிரிப் படிவங்கள், மின்னியக்க வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளத் தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள வேறு சட்டத்தின் கீழ் அரசு அலுவலர்கள் (அதிகாரிகள்) மேற்பார்வையிடும் அதிகார வரம்புக்குள் வரும் எவ்விதமான தனியார் குழும்மாக இருந்தாலும் அவைத் தொடர்பான செய்திகளும், தகவல்களும் இதில் அடங்கும்.

விண்ணப்பம்

விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்தியப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லது மாநிலப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அல்லதுமத்திய உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ(அதிகாரிக்கோ) அல்லது மாநில உதவிப் பொதுத் தகவல் அலுவலருக்கோ (அதிகாரிக்கோ) அனுப்பலாம். குறிப்பு-;  தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை.

காலக்கெடு-; விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். குறிப்பு-; அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும்.

அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமை சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது Onlineல் விண்ணப்பம் செய்ய முடியும்.
கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து 




விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டிய சட்ட விதிகள்

தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் பெற வேண்டும்.
யாருக்கு தகவல் அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லையா ?
எந்த துறைக்கு (Department) அனுப்ப வேண்டும் என்று தெரியவில்லையா?
கவலை வேண்டாம்.

வழிமுறை 

உங்களுக்கு அருகில் உள்ள கலக்டர் ஆபிஸ் முகவரிக்கு அனுப்பவும்.
(உதாரணம்)
பொது தகவல் அலுவலர்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை ரோடு,
தேனி மாவட்டம் 625605.
விளக்கம்:
1) முகவரியில் "பொது தகவல் அலுவலர்" என்ற வார்த்தை முக்கியமாக எழுத வேண்டும். காரணம் 2005 ஆம் வருடத்திலேயே ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு "பொது தகவல் அலுவல் அதிகாரி" ஏற்க்கனவே நியமிக்கப்பட்டு உள்ளார்.
2) எந்த அரசு பொது தகவல் அதிகாரியின் கடமை என்னவெனில், உங்களது "தகவல் கேட்டு விண்ணப்பித்த மனுவை" சம்பத்த பட்ட அரசு அலுவலகத்துக்கு அவர்களே அனுப்பி வைக்க வேண்டும் என்று தகவல் அறியும் சட்டம் 2005 கூறுகிறது.
3) எனவே நீங்கள் கோரிய தகவல் எந்த மாவட்டமாக இருந்தாலும் முதல் 15 நாட்களுக்குள் சென்றுவிடும். பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரி பதில் அளிக்க 15 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் ஆக மொத்தம் 30 நாட்களுக்குள் உங்களுக்கு பதில் வந்தடையும்.

தகவல் அறியும் சட்ட(RTI ACT)ப்படி தகவல் அறிய சமர்ப்பிக்க மனு தயார் செய்வது எப்படி?



1.முதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது?

பொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத் தை நிராகரிக்கும்போது.நீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது 30 நாள்களுக்குள் தராத போது!




துணை பொதுதகவல் அதிகாரியி னை பணியமர்த்தாத போது/ பொது த்தகவல் அதிகாரி உங்களது விண் ணப்பத்தினை பெற்றுக் கொள்ளாத போது அல்லது நீங்கள் கேட்கும் தகவலைத் தராத போது.துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தை நிராக ரித்து அதனை பொதுத்தகவல் அதி காரிக்கு அனுப்ப மறுக்கும் போது.பொதுத்தகவல் அதிகாரியின் தீர்ப்பு குறித்து நீங்கள திருப்தியடையாத போது உங்களுக்காகத் தரப்பட்ட தகவல் போதுமானதாக (அ) தவறா னதாக (அ) தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக இருக் கும்போது.




தகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணும் போது


2.முதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தினை அனுப்ப உள்ள கால அவகாசம்

காலாவதியாகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது மாநிலபொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுகோள் நிரா கரிப்பு) பின், (SPIO) அல்லது மத்தி யப் பொது தகவல் அதிகாரியிட மிருந்துத் தகவல் பெற்றபின் (CPIO).

மேல்முறையீடு (Appellate) தொட ர்பான அதிகாரி, மேல் முறையீட் டாளர் தனது மனுவினைப் பதிவு செய்யமுடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால், மேல் முறை யீட்டாளரின் மனுவினை 30 நாட் கள் கடந்த பின்னரும் பெற்றுக் கொள் ளலாம்.


3.முதல் மேல்முறையீட்டு மனுவினை எழுதுதல்




விண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதலாம் அல்லது விண்ணப்பம் கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பம் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண் டும்.

தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தர வேண் டும்.

சுய ஒப்பமிட்ட (self attested) விண்ணப்பத்தின் நகலையும் விண் ணப்பத்திற்கான கட்டணம் தரப்பட்ட சான்றையும், பொது த்தகவல் அதி காரியிடம் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான ரசீதையும், தீர்ப் பின் நகலையும் விண்ணப்பத்துடன்/மனுவுடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனை த்து ஆவணங்களின் நகலையும் வைத்துக்கொள்ளவும்.

4.எங்கு முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பது?




பொதுத்தகவல் அதிகாரி இருக்கும் அதே அலுவலகத்திலுள்ளமுதன்மை மேல் முறையீட்டு அதிகாரி (First Appellate Authority) இடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவன நிலை முறை ப்படி (hierarchy) முதன் மை மேல் முறையீட்டு அதிகாரி பொதுத்தகவல் அதிகாரியைவிட உயர் பதவியிலிருப் பவராவார். எனவே, மேல் முறையீட்டு விண்ண ப்பத்தினைப் பெறவும், தேவைப்படும் விவரங்களைத் தரவும் அல்லது மேல் முறையீட்டினை நிராகரிக்கவும் அவருக்கு உரிமையுள்ளது.

முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கும் முன், முதன் மை மேல் முறையீட்டு அதிகாரியின் பெயரையும், குறிப்பிடப் பட்டுள்ள கட்டணத்தையும் கட்டணம் செலுத்துவதற்குரிய முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். (சில மாநிலங் களில் முதல் மேல் முறையீட்டு மனுவுக்கென கட்டணம் வசூலிக்காதபோதும், சில மாநிலங்களில் முதல் மேல் முறை யீட்டு மனுவை இலவசமாகவே பெற்றுக்கொள்கின்றன.)


5.முதல் மேல் முறையீட்டு மனுவை எவ்வாறு அனுப்புவது?

பூர்த்தி செய்யப்பட்ட மனுவை நேரடியாகவோ அல்லது அஞ் சல் மூலமாகவோ தரலாம்.

அஞ்சல் மூலம் மனுவை அனு ப்ப நேரிட்டால் பதிவுத்தபாலில் அனுப்பவும். கூரியர் தபாலைத் (courier service) தவிர்க்கவும்.

நேரடியாகக் கொடுத்தாலும், அஞ்சல் மூலம் அனுப்பினாலும் இரண்டிற்கு ரசீதினைப் பெற்று க்கொள்ளவும்.

6.தகவல் பெறக்கூடிய கால அவகாசம்

பொதுவாக சாதாரண வழக்குகளில் 30 நாட்களிலும், விதி விலக்காக உள்ள வழக்குகளுக்கான மனுக்களுக்கான பதிலை 45 நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority (FAA)), மேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து நேரம்/காலம் கணக்கிடப்படும்.


விதிவிலக்கு அளிக்கப்பட்ட தகவல்கள்

இந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.
(1) இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,(2) நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.(3) நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.(4) வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.(5) ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.(6) வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.(7) ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.(8) புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.(9) அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.குறிப்பு-;அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.(10) பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.

அபராதம்

இச்சட்டத்தின்படி தவறு செய்யும் தகவல் அலுவலர்கள் (அதிகாரி) மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும் தலா 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் தகவல் ஆலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கவும் இச்சட்டம் வழிகோலுகின்றது. 

Wednesday, September 22, 2021

வருவாய் கோட்டாட்ச்சியருக்கான அதிகாரங்கள்

 *வருவாய் கோட்டாட்ச்சியருக்கான அதிகாரங்கள்*

*1. வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்ட அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்புத் திட்ட பணியாளர்கள் ஆகியோரது பல்வேறு பணிகளை மேற்பார்வை செய்தல்.* *2. வட்ட அலுவலகங்களை தணிக்கை செய்தல்.* **3. கோட்டத்திலுள்ள களப்பணியாளர்களது நாட்குறிப்புகளை ஆய்வு செய்தல்.* *4. வட்ட அலுவலகங்களில் கடன் பிரிவுகளை அரையாண்டுக்கு ஒருமுறை தணிக்கையிடல்.* *5. முதல் வகுப்பு நிருவாக நீதிபதியாக செயல்பட்டு கோட்டத்தில், சட்டம் ஒழுங்கினை நிருவகித்தல்*. *6. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 107 முதல் 110 வரையுள்ள பிரிவுகளின்படி விசாரணை நடத்தி ஆணை பிறப்பித்தல்.* *7. காவல் நிலை ஆணை எண் பிரிவு 145-ன்படி விசாரணை செய்தல்.* *8. குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 142 மற்றும் 145-ன்படி விசாரணை செய்து ஆணைகள் பிறப்பித்தல்.* *9. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நியமனம், மாறுதல் மற்றும் தண்டனை வழங்குதல்.* *10. கிராம உதவியாளர்கள் நியமனம் மற்றும் தண்டனை தொடர்பான வட்டாட்சியரின் ஆணையின் மீதான மேல் முறையீட்டு மனுக்களில் விசாரணை செய்தல்*. *11. நூலக வரி, அரசுக் கடன்கள், நில அளவைக் கட்டணங்கள், பிற அரசுத் துறைகளுக்கு சேரவேண்டிய பாக்கிகள், வேளாண் வருமான வரி, நகர்ப்புற நிலவரி, நீதிமன்ற வழக்குக் கட்டணம், வறியவர் வழக்கு கட்டணம் உள்ளிட்ட அரசுக்குச் சேரவேண்டிய பாக்கிகளை வசூலித்திட வசூல் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வசூல் பணியைத் துரிதப்படுத்துதல், வருவாய் வசூல் சட்டத்தின் மூலம் அரசுக்கு சேர வேண்டிய பாக்கியை வசூலித்தல்.* *12. நில ஒப்படைப்பு மற்றும் பராதீனம் ஆகிய இனங்களைத் தணிக்கை செய்தல்.* *13. ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மேல்முறையீடுகள் ஆகியவைகளில் நடவடிக்கை மேற்கொண்டு பொது இடங்களை ஆக்கிரமிப்பு தாரர்களிடமிருந்து மீட்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.* *14. நிலமாற்ற முன்மொழிவுகளின் மீது தணிக்கை செய்தல்.* *15. ஆதீன ஒழிப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட இனங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுத்தல்.* *16. 1960-ம் ஆண்டு நிலப்பயன்பாட்டு ஆணையினை செயல்படுத்துதல்*. *17. நிலச் சீர்திருத்த சட்டங்கள் மற்றும் குத்தகைச் சட்டங்கள் ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்.* *18. மேம்பாட்டு வரி விதிப்பின் மீது வரும் மேல்முறையீடுகளை முடிவு செய்தல்.* *19. சிறப்பு சிறுபாசனத் திட்ட பணிகளை பார்வையிடுவதுடன் தண்ணீர் தீர்வை எவ்வளவு விதிக்க வேண்டும் என்பதை நிர்ணயித்திடுதல்.* *20. ரூ.25000-க்கும் அதிகமாக இழப்பீடு தர வேண்டிய நில எடுப்பு அலுவலராக பணியாற்றல்*. *21. வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது நிலவரி தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று வட்டாட்சியரால் பரிந்துரைக்கப்படும் பட்சத்தில் தொடர்புடைய இடங்களை பார்வையிட்டு நிலவரி தள்ளுபடி செய்திட நடவடிக்கை எடுத்தல்.* *22. இந்திய முத்திரைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செயல்படுத்துதல்*. *23. கிராமக் கணக்குகளைத் தணிக்கை செய்தல் மற்றும் பயிர் மேலாய்வு செய்தல்.* *24. தமிழ்நாடு இனம் (நியாயவாரம்) சட்டம் 1963 -ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.* *25. குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல், குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் வரும் முறையீடுகளை பரிசீலித்தல்.* *26. முழைமானிகள், சர்வே கற்கள், கல் டெப்போக்கள் ஆகியவற்றை தணிக்கை செய்தல்.* *27. கிராமக் கணக்குகளின் ஆண்டு தணிக்கை (வருவாய்த் தீர்வாயம்) முடித்து சரியான கேட்பினை முடிவு செய்தல்.* *28. தமிழ்நாடு விவசாயகுத்தகைச் சட்டம் 1969-ன்படி மேல் முறையீடுகளை விசாரித்தல்.* *29. மரப்பட்டா- வழங்குதல் தொடர்பான மேல் முறையீடுகளை விசாரித்தல்.* *30. அரசு நிலங்கள் குத்தகை இனங்களைப் பார்வையிடுதல்.* *31. முறையான தண்ணீர் தீர்வை நிர்ணயம் குறித்து ஆய்வு செய்தல். 31. முதியோர் உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகை வழங்கும் பணியைக் கண்காணித்தல், வட்டஅலுவலக முதியோர் உதவித் தொகை பிரிவினை காலாண்டு தோறும் தணிக்கை செய்தல்.* *32. பர்மா மற்றும் சிலோன் அகதிகள் நல்வாழ்வு திட்டங்களை செயல்படுத்துதல்.* *33. வெள்ளம், தீ விபத்து, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது காப்பு நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடல்.* *34. ஆதிதிராவிடர் குடியிருப்புகளைப் பார்வையிடுதல் மற்றும் ஆதிதிராவிடர் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.* *35. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்.* *36. விபத்து மற்றும் சாலை விபத்து நிவாரண நிதி வழங்குதல்.* *37. காப்புறுதித் திட்டங்களை ஆய்வு செய்தல்* *38. மனுநீதி திட்ட முகாம் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடத்திடல்.* *39. நியாயவிலைக் கடைகள், அரிசி ஆலைகள் தணிக்கை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் தொடர்பாக ஆய்வு செய்தல்.* *40. கொள்முதல் மையங்கள் மற்றும் கிடங்குகள் தணிக்கை அரசு உணவு தானியக் கிடங்குகள் ஆய்வு மற்றும் இருப்புகள் தணிக்கை*. *41. (சில பகுதிகளில்) குடியிருப்பு கட்டுப்பாடு அலுவலராக செயல்படுதல்.* *42. 1960ம் ஆண்டு தமிழ்நாடு கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகை ஒழுங்கு) சட்டத்தினை செயல்படுத்தல்.* *43. நிரந்தர மற்றும் தற்காலிக திரை அரங்குகளைத் தணிக்கை செய்தல்.* *44. பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவு பதிவேடுகளைத் தணிக்கை செய்தல்.* *45. வெடி மருந்துச் சட்டம், படைக்கலச் சட்டம், பெட்ரோலியம் சட்டம் ஆகியவை தொடர்பான பணிகளைச் செய்தல்.* *46. அரசு அலுவலர்கள் பிறப்பு தேதி குறித்து விசாரணை செய்தல்.* *47. எரிசாராயம் மற்றும் கரும்புப்பாகு (மொலாசஸ்) உரிய கணக்குகள் தணிக்கையிடல்.* *48. அடகுக் கடைகள் தணிக்கை மற்றும் அடகு கடைக்காரர் சட்டம் அமுல் செய்தல்.* 49. முக்கியப் பிரமுகர்கள் வருகையைக் கவனித்தல்

Monday, July 26, 2021

பொதுநல வழக்கு போடுவது எப்படி வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி ?

 பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு போடுவது எப்படி என்று பார்க்கலாம்.


                பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும்.
    இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும்.

                  அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள். அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, பிரதிவாதிகள் என்று காண்பியுங்கள். இதன் பெயர், short cause title எனப்படும்.சிவில் வழக்கில், பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன் கீழேயே தாக்கல் செய்ய முடியும். ஆகையால், இப்போது, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1 என்று, நடு மையத்தில் எழுதுங்கள்.

                                                           அதன் பின்பு, வாதிகளின் விலாசம் என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும் மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம், மற்றும், ஹிந்து என்றால், ஹிந்து என்றும், அப்பா பெயர், வயது, அதன் பின்பு, வாதியின் பெயர் என எழுதுங்கள். பல பேர் இருந்தால், வரிசையாக ஒன்று, இரண்டு என எழுதுங்கள். அதன் பின்பு, வாதிக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று எழுதுங்கள். அதன் பின்பு, பிரதிவாதிகளின் விலாசம் என்று தலைப்பிட்டு, மேலே சொன்னது போல, வாதிகளின் முகவரி போலவே, எழுதி கொள்ளுங்கள். அதன் கீழ், பிரதிவாதிகளுக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று குறிப்பிடுங்கள். இதன் பெயர் லாங் cause டைட்டில் ஆகும்.

                             இப்போது, அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும். நீங்கள் வழக்கு போடும் ஊர், தாவா நீதிமன்ற எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு இங்கு தாக்கல் செய்யபடுகிறது என்று எழுதுங்கள். ஒவ்வொன்றும் ஒரு பாரா ஆகும். இப்போது மூன்று பாரா முடிந்திர்க்கும். . வழக்கு போடுபவர், வாதி என்று நினைவில் வைத்து கொள்ளுங்கள். வழக்கின் எதிராளி, பிரதிவாதி ஆவார். யார் மேல் பரிகாரம் கோருகிறீர்களோ, அவர்கள் அனைவரையும் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும்.

                அடுத்த பாரா, வழக்கு விவரங்களை ஆரம்பியுங்கள். வாதியானவர், இந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இப்படி, வழக்கின் சாராம்சத்தை, சுருக்கமாக, பல பாராக்களாக பிரித்து எழுதுங்கள். உதாரணமாக, பொது பாதை, இவ்வளவு நாளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது, இன்ன நபர், அதை ஆக்கிரமித்துள்ளார். இதனை தெரிவித்து, எதிர் மனுதாருக்கு, இந்த தேதியில் வாதியால் மனு, பதிவு தபாலில் அனுப்ப பட்டது.

 அதை பெற்று கொண்டு, இன்று வரை, பிரதிவாதிகள் நடவடிக்கை ஏதும் எடுக்காமல், காலம் கடத்தி வருகின்றனர். இவ்வாறாக, உங்கள் கரு பொருளை மையபடுத்தி, பிராது விவரங்களை சொல்லுங்கள். நீங்கள் அனுப்பிய மனுவின் நகலை தாக்கல் செய்தால், ஒன்றாம் பிரதிவாதிக்கு அனுப்பிய மனு, தபால் ரசீது ஆகியவை வாதி தரப்பு ஒன்றாவது சான்றாவணம் ஆகும் என்று குறிப்பிடுங்கள். சட்ட பாயிண்ட் களையும், குறிப்பிடுங்கள். அதன் பின்பு, அடுத்த பாராவாக, உங்கள் வழக்கின் வியாச்சிய மூலத்தை எழுதுங்கள்.

                   அதாவது, எந்த தேதியில் ஆக்கிரமிப்புதாரர் ஆக்கிரமித்தார், எப்போது பிரதிவாதிகளுக்கு மனு செய்யப்பட்டது, இன்று வரை பிரதிவாதிகள் வீண் காலம் கடத்தி வருகிறார்கள், மற்றும், வாதி இருக்கும் ஊர், பிரதிவாதி இருக்கும் ஊர், வழக்கு சொத்து இருக்கும் ஊர் ஆகியவற்றை சொல்லி, இதில் உற்பத்தி என்று காண்பியுங்கள். இது தனி பாரா. அடுத்து, வாதி, நீதிமன்ற கட்டணமாக TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள்.

                                                 அதன் பின்பு, prayer. இதில், நீங்கள் என்ன பரிகாரம் கூறுகிறீர்கள், யார் மீது கூறுகிறீர்கள் என்று சொல்லுங்கள். உதாரணமாக, ஒன்றாம் பிரதிவாதி, பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தால், ஒன்றாம் பிரதிவாதியை, இரண்டு, மூன்று பிரதிவாதிகள் தாவா பொது இடத்தில் இருந்து அகற்ற, உத்தரவிடும் படிக்கும். அதன் பின்பு, வாதிக்கு, பிரதிவாதிகள் வழக்கிடை செலவை தரும்படிக்கும், மற்றும், நீதிமன்றம் கருதும் இன்ன பிற பரிகாரங்களை வழங்கும்படிக்கும், பிரார்திக்கபடுகிறது என்று முடியுங்கள். இதில், அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதால், பிரிவு என்பது, சிவில் procedure code படி, வழக்கு தொடுப்பதற்கு தொண்ணூறு நாட்களுக்கு முன் அறிக்கை அனுப்ப வேண்டும். அவசரமாக,
                               
                           இந்த வழக்கை தாக்கல் செய்தால், exemption மனு, பிரிவு, 80(2), civil procedure code படி, தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனு, இந்த பிராதுடன் தாக்கல் செய்திருப்பதாக, பிராதில், சொல்லுங்கள். இப்போது, இடது பக்கம் வழக்கறிஞர் கையொப்பமும், வலது பக்கம் வாதிகள் கையொப்பமும் போட வேண்டும். அதன் பின்பு, பிராதை எப்படி மதிப்பிடுகிறீர்கள் என்று, particulars ஒப் valuation என்று தலைப்பிட்டு, சொத்து மார்க்கெட் மதிப்பு காட்டுங்கள். அதன் பின்பு,TAMILNADU COURT FEES AND SUITS VALUATION ACT பிரிவு, இன் படி, இவ்வளவு பணம் செலுத்துகிறார் என்று எழுதுங்கள்.

                  அதன் பின்பு, சரி பார்த்தல் என்று தலைப்பிட்டு, மேலே கண்ட சங்கதிகள் எல்லாம் என் அறிவிற்கு எட்டிய வரை உண்மை என சொல்லி, மதுரையில் வைத்து, தேதியில் கை எழுத்திட்டேன் என சொல்லுங்கள். அதன் பின்பு, சொத்து விவரம் எழுதுங்கள். கிரைய பத்திரத்தில் சொத்து விவரம் கொடுத்திருப்பார்களே, அந்த மாதிரி. அதன் பின்பு, மீண்டும், சரி பார்த்தல் என்று மேலே சொன்னவாறு, எழுதுங்கள். அதன் பின்பு, மேலே சொன்ன short cause title எழுதி, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும் ஆவணங்கள், ஆர்டர் ஏழு, விதி பதினான்கின் படி என்று தலைப்பிட்டு, நான்கு column கட்டமிட்டு கொள்ளுங்கள் முதல் column இல், வரிசை என், அடுத்த column இல் ஆவன தேதி, அடுத்த column இல் ஆவன விவரம், அடுத்த column இல் ஆவன தன்மை, அது நகலா அல்லது அசலா என்று காண்பியுங்கள். இப்போது, உங்கள் கைவசம் உள்ளல ஆவனங்களை, வரிசையாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள்.
                                 
                                 அதன் கீழ், இடது பக்கம், ஊர், தேதியும், வலது பக்கம், வழக்கறிஞர் என்று காண்பியுங்கள். வழக்கறிஞர் இல்லாவிட்டால், வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அசல் ஆவநங்கள் அனைத்தையும் தாக்கல் செய்யுங்கள். அது முடியாவிட்டால், சான்றிட்ட நகல் தாக்கல் செய்யலாம். அதுவும் இல்லாவிட்டால், நகலை தாக்கல் செய்யலாம். ஆனால், விசாரணை வரும்போது, அசல் அல்லது சான்றிட்ட நகலைத்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதை, பின்பு கொடுப்பதாக குறிப்பில் காண்பிக்கலாம். இந்த ஆவண பட்டியல் தனி தாளில் தயார் செய்து, பிராதுடன் இணைக்கலாம். இப்போது பிராது தயார். இதனுடன், நீங்கள் வழக்கறிஞர் வைத்தால், வக்காலத்து வைக்க வேண்டும். அதன் பின்பு, ஆவணங்களை, ஒரு தனி தாளில் டாக்கட் போட்டு, தைத்து, அசல ஆவணங்கள தவிர, மற்றவற்றிற்கு, ஐந்து ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டி கொடுங்கள். பிராதின், முதல் பக்கத்தில், valuation சீட் வைக்க வேண்டும். அதன் பின்பு, நீதிமன்ற ஸ்டாம்ப் பேப்பர், அதன் கீழ் பிராது வைத்து தைத்து கொள்ளுங்கள்.

                                         உள்ளே, வக்காலத்து, ஆவணங்கள் ஆகியவற்றை வைக்க வேண்டும். சில நீதிமன்றத்தில், வாதி, பிரதிவாதி விலாசம் தனி தாளில் அடித்து வைக்க வேண்டி உள்ளது. முன்பே சொன்னது போல, short cause title எழுதி, STATEMENT U/O. VI, RULE 14-A என்று, தலைப்பிட்டு அதன் கீழ், வாதி, பிரதிவாதி விலாசங்கள் எழுத வேண்டும். அதன் பின்பு, supporting affidavit. இதுவும், short cause title எழுதி, SUPPORTING AFFIDAVIT FILED BY THE 1st PLAINTIFF ABOVENAMED U/O VI, R. 15(4) OF C.P.C. என்று தலைப்பிட்டு, அதன் கீழ், வாதியின் விலாசத்தை தலை கீழாக எழுதி, பிராதில் வாதியின் விலாசம் எழுதுவீர்களே, அது போல, ஆகிய நான், சத்திய பிரமாணத்தின் பேரில் எழுதி வைத்த அப்பிடவிட் என்று எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, நான் வழக்கின் வாதி ஆவேன். எனக்கு வழக்கு விவரங்கள் பூராவும் நன்கு தெரியும் என்று சொல்லி, அடுத்த பாராவில், சுருக்கமாக பிராதின் விவரத்தை சொல்லுங்கள். பல வாதிகள் இருந்தால், பிற வாதிகளுக்காக, இந்த அப்பிடவிட் தை தாக்கல் செய்வதாக கூறி கொள்ளுங்கள்.
                                     
                                 இறுதியாக, தனி பாராவாக, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் பிராதுபடி தீர்ப்பளிக்க வேண்டும் என்று முடியுங்கள். அதன் பின்பு, இடது பக்கம், மேலே சொன்ன சங்கதிகள் யாவும் உண்மை என சொல்லி, தேதியில், என் முன்பாக, ஊரில் வைத்து கை எழுத்திட்டார் என எழுதுங்கள். வலது பக்கம், வாதியின் கையொப்பம் இடுங்கள். அதன் நடுவில், ஒரு வழக்கறிஞரின் attestation வாங்கி கொள்ளுங்கள். இப்போது supporting அப்பிடவிட் ரெடி. பிராதின் ஒவ்வொரு பக்கத்திலும், supporting affidavit ஒவ்வொரு பக்கத்திலும், வாதி கையெழுத்து  வாங்க வேண்டும்.

                         அடுத்து, அரசு ஊழியர்கள் மேல் வழக்கு தொடுக்கும் முன், உரிய அறிவிப்பு அனுப்பாவிட்டால், அதற்கும் ஒரு அப்பிடவிட், மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கம் போல, short cause டைட்டில் எழுதுங்கள். இது தனி இடை நிலை மனு ஆகும். எனவே, லேசாக மாற்றி, நீதிமன்ற பெயர், ஊர் எழுதி, அதன் கீழ், இடைநிலை மனு எண் என எழுதி, இடம் விட்டு, பார் போட்டு, 2014 என வருடத்தை போட்டு கொள்ளுங்கள். இதில், வாதிகள் மனுதாரர்கள் ஆவார்கள். எனவே, வாதிகள் பெயரை எழுதி, மனுதார்கள் / வாதிகள் என்று காண்பித்து கொள்ளுங்கள். அதே போல, கீழே, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகள் என்று, அரசு அலுவலர்களை மட்டும் சேர்க்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் பொது நல வழக்கு போடும்போது, முதல் பார்ட்டி ஆக, ஆக்கிரமிப்புதாரரை காண்பித்து இருந்தால், இரண்டாம் பார்ட்டி ஆக, அரசு அதிகாரிகளை காண்பித்து இருப்பீர்கள்.
                       இங்கு, அரசு அலுவலர்கள் மட்டும் வருவதால், அவர்களை, இம்மனுவில், எதிர்மனுதார்களாக காண்பிக்கும்போது, வரிசையாக காண்பித்து, அவர்கள் முக்கிய வழக்கில் எந்த cadre ஒ, அந்த cadre காண்பியுங்கள். உதாரணமாக, மாவட்ட ஆட்சியர், முக்கிய வழக்கில் இரண்டாம் பிரதிவாதி என்றால், இங்கு, முதல் எதிர்மனுதாராக காண்பித்து இருந்தால், முதல் எதிர்மனுதார் / இரண்டாம் பிரதிவாதி என்று காண்பியுங்கள். இப்போது, அப்பிடவிட் க்கு வருவோம். முதல் மனுதார் / முதல் பிரதிவாதி தரப்பில் தாக்கல் செய்யும் அப்பிடவிட் என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள். அல்லது, எந்த மனுதார் வேண்டுமானாலும் அப்பிடவிட் தாக்கல் செய்யலாம். வழக்கம் போல, sworn செய்து கொள்ளுங்கள். அதாவது, விலாசத்தை தலை கீழாக எழுதி, ஆகிய நான் சமர்ப்பிக்கும் அப்பிடவிட் என்று காண்பியுங்கள்.

                                  அடுத்து. முதல் பாரா, supporting அப்பிடவிட் இல் சொன்னது போல எழுதி கொள்ளுங்கள். அதன் பின்பு, ஒவ்வொரு சிறு பாராவாக, வழக்கு இந்த அரசு அதிகாரிகள் மீது உடனே தாக்கல் செய்ய வேண்டி உள்ளதால், அவர்களுக்கு அனுப்ப வேண்டிய அறிவிப்பை, அனுப்ப முடியவில்லை என்று பொருத்தமான காரணத்தை காண்பியுங்கள். இறுதியாக, தனி பாராவில், இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு பெருத்த இழப்பு ஏற்படும். ஆனால், எதிர்மனுதாருக்கு எவ்வித ஆட்சேபனையும் இம்மனு தாக்கல் செய்ய இருக்க போவதில்லை என்று எழுதி கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள்.

                          இங்கும், supporting அப்பிடவிட் இல் இருப்பது போல முடித்து கொள்ளுங்கள். அப்பிடவிட் ரெடி. இப்போது மனு. இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட் short cause title அதே போல எழுதி கொள்ளுங்கள். மனுதார் / வாதி தரப்பு மனு பிரிவு 80(2) c.p.c. படி என்று எழுதி கொள்ளுங்கள். இத்துடன் இணைத்துள்ள அப்பிடவிட்டில் கண்டுள்ள காரநன்களால், கணம் கோர்ட்டார் அவர்கள் கிருபை செய்து, எதிர்மனுதார்கள் / பிரதிவாதிகளுக்கு அனுப்ப வேண்டிய பிரிவு 80(2) cpc அறிவிப்பை, dispense செய்ய வேணுமாய் பிரார்த்திக்கபடுகிறது என்று முடியுங்கள்.

                        அதாவது, அப்பிடவிட் prayer உம, மனு prayer உம, ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இந்த வழக்கை உடனடியாக தாக்கல் செய்ய, அரசு ஊழியர்களுக்கு உரிய அறிவிப்பை கொடுக்க exemption செய்ய முறையான காரணங்களை சொல்லாவிட்டால், நீதிமன்றம் உங்கள் வழக்கை உடனடியாக கோப்பிற்கு எடுக்காது. நோட்டீஸ் அனுப்பி விட்டு, மூன்று மாதம் கழித்து தாக்கல் செய்ய சொல்லுவார்கள். அடுத்து, லீவ் மனு. அதாவது, நீங்கள் பொது நல மனு தாக்கல் செய்ய, நீதிமன்றந்தில் லீவ் வாங்க வேண்டும். இது ஒரு விதமான், அனுமதி ஆகும். இதுவும், இடை நிலை மனுதான். இதற்கும் அப்பிடவிட், மனு வைக்க வேண்டும்.

                           அப்பிடவிட், ஒருமையில் இருக்க வேண்டும். அதாவது, நான், கேட்கிறேன் என்று வர வேண்டும். ஆனால், பிராதோ, வாதி, வாதி கோருகிறார் என்று அந்த நடையில் வர வேண்டும். ஒரு பொதுவான நலத்திற்கு எல்லா நபர்களுக்கும் ஒரே நபரே வழக்கு நடத்த, நீதிமன்றம் அனுமதி கொடுக்க வேண்டும். அதற்குதான், இந்த மனு. வழக்கம் போல, அப்பிடவிட், இதில் நீங்கள் ஏன் ஒரு நபரே இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று காரணம் கூற வேண்டும. அதே போல மனுவை, ஆர்டர் 1, விதி 8 இன் படி தாக்கல் செய்ய வேண்டும். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், இவ்வழக்கில் ஒன்றாம் வாதியே, பிற வாதிகளுக்காக, இந்த வழக்கை நடத்த, உத்தரவிட வேண்டியது, அவசியமாயும், நியாயமான்யும் உள்ளது என முடியுங்கள். ஒவ்வொரு இடை நிலை மனுவில் இரண்டு ரூபாய் நீதிமன்ற வில்லை ஒட்டுங்கள்.

                                இதன் கீழே, படி மெமோ. அதாவது, பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் வைக்க வேண்டும். பிராது copy, நோட்டீஸ், படி மெமோ, போஸ்டல் கவர் மற்றும், அஞ்சல் ஒப்புதல் அட்டை ஆகியவற்றை வைக்க வேண்டும். ஒரு எதிர்பார்ட்டி க்கு உள்ளூர் என்றால் ஐந்து ரூபாய் மற்றும் போஸ்டல் ஸ்டாம்ப் முப்பத்தைந்து ருபாய் ஒட்டுங்கள். பிரதிவாதி குடி இருப்பது வேறு நீதிமன்றம் மூலம் போகும் என்றால், கூடுதலாக பத்து ரூபாய், ஒரு நபருக்கு ஓட்டுவது நல்லது, நீதிமன்ற வில்லை. பிராதுக்கு ஒரு டாக்கட் வாங்கி வைத்து, கூடுதலாக நான்கு பச்சை காகிதங்கள் பிராதின் அடியில் வைத்து, பிராது டாக்கட், அதன் மேல் நான்கு கூடுதல் ஷீட்ஸ், அதன் மேல் பிராது, அதன் மேல் கோர்ட் பீஸ்,

                           அதன் மேல் valuation சீட் வைத்து தைத்து கொள்ளுங்கள். இப்போது, எல்லாம் தயார். இனி, இந்த வழக்கை இன்றே, நீதிமன்றம் கோப்பிற்கு எடுக்க வேண்டுமானால், emergent மனு மற்றும் அப்பிடவிட் வைக்க வேண்டும். இரண்டு ரூபாய் ஸ்டாம்ப் மனுவில் ஒட்டுங்கள். இதை மேலே வைத்து, காலை பத்து முப்பதுக்கு நீதிபதியிடம் சமர்ப்பியுங்கள். இதில், வழக்கு முடியும்வரை, உருத்து கட்டளை வேண்டும் என்றால், அதற்கு தனி அப்பிடவிட், மனு. மனு ஆர்டர் 39, விதி 1 இன் படி. அப்பிடவிட், வழக்கம் போலதான். அதில் கூடுதலாக, இம்மனுவை அனுமதிக்காது போனால், எனக்கு இழப்பு ஏற்படும். எனக்கு prima facie case and balance of convenience உள்ளது என சேர்த்து கொள்ளுங்கள். prayer, ஆகவே, கணம் நீதிபதி அவர்கள், எதிர்மனுதார் / பிரதிவாதி, வழக்கு முடியும்வரை, தாவா சொத்தை பயன்படுத்தக்கூடாது என இடைக்கால உருத்து கட்டளை வழங்கும்படிக்கும்,அதன் தொடர்ச்சியாக, இன்று, ஒரு exparte ad-interim injunction இம்மனு முடியும்வரை தரும்படிக்கும், பிரார்த்திக்கபடுகிறது. இதில் ஒவ்வொரு இடை நிலை மனுவுக்கும், படி மெமோ வைக்க வேண்டும். dispense வித் மனுவுக்கு மட்டும் தேவை இல்லை. படி, பிராதில் சொன்ன படிதான்.
                                  ஒரு நபருக்கு ஐந்து ரூபாய். முடிந்தால், ஒரு வழக்கறிஞரிடம் ரெடி செய்து வாங்கி கொள்ளுங்கள். அல்லது நீங்கள் தயார் செய்து, ஒரு வழக்கறிஞரிடம் காண்பித்து கொள்ளுங்கள். அதன் பின்பு, file செய்வது நல்லது. இது ஒரு மாதிரியே. இதில் நீங்கள் வழக்கை நன்றாக சட்டப்படி எழுதினால்தான், வழக்கு வெற்றி பெற வாய்ப்பு உண்டு. ஒரே நாளில் நம்பர் ஆகி விடும், சரியாக இருந்தால். இடைக்கால உறுத்து கட்டளையும், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. அசல் ஆவணங்களை வைத்தால், அன்றே கிடைக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு அப்பிடவிட், மனு ஆகியவற்றுக்கும் டாக்கட் போட்டு கொள்ளுங்கள்.

 வீடு/வணிகம் மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்உயர் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்குடிசை மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான வழிமறைகள்கேள்விகள்


                வீடு/வணிகம் மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

வீடு அல்லது வணிக மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம் மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தாக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5-இன் படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக் கடிதம் தர மறுத்துவிட்டால,சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர் தரவேண்டும்.

                    மேலும் படிவம்-6-இன்படியான காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து,மேலும் இயல்பான காப்புவைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்க வேண்டும்.மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான  சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்,பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்து கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.
                    
                    எல்லா அடுக்கு மாடி கட்டிடங்களிலும் எத்தனை தளங்கள் இருந்தாலும் தரைதளத்தில்தான் மின்னளவி, மின்கட்டை போன்றவைகள் பொருத்துவதற்கு இடம் கொடுக்கப்பட வேண்டும்.மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவுப்பு/கடிதம் அனுப்பப்படும்,மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் பெறப்பட்ட பிறகே மின் இணைப்பு கொடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின்கம்பங்கள் நடுவதற்கு விட வேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து,அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்,மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின், உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

                  உயர் அழுத்த மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

                            உயர் அழுத்த மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம் - 4-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும். மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்.தான் பொறுப்பேற்றுள்ள இருப்பிடத்துக்குச் சொந்தக்காரராக இல்லாமல் மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர், படிவம்-5 இன்படி சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். அப்படிப்பட்ட சொந்தக்காரர் சம்மதக்கடிதம் தர மறுத்துவிட்டாலோ, சட்டப்படி அந்த இருப்பிடத்தின் பொறுப்பேற்றுள்ளதற்கானச் சான்றை நுகர்வோர்தரவேண்டும். மேலும், படிவம்-6-இன் படி  காப்புறுதி பத்திரத்தின் வாயிலாக, உரிமதாரருக்கு, பொறுப்பாளருக்கு மின்னிணைப்பு வழங்கலால் உருவாகும் தகராறுகளால் விளையும் இழப்புக்குக் காப்புறுதி தந்து, மேலும் இயல்பான காப்பு வைப்புத் தொகையைப் போல இரட்டிப்பு மடங்குத் தொகையை வைப்புத் தொகையாகச் செலுத்தவும் உறுதியேற்கவேண்டும்.மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்.விண்ணப்பம் பதிவு செய்வதற்கு முன்பாக, மின் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை வாரியத்தின் உரிய அலுவலரால் ஒப்பளிப்பு பெற வேண்டும்.பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நரடியாகவோ அல்லது தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.விண்ணப்பத்தினை, பதிவு கட்டணம் மற்றும் காப்பு வைப்புக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவிப்பு/கடிதம் அனுப்பப்படும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான கட்டணங்களும் மற்றும் இசைவு பத்திரமும் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். உரிய காலக்கெடுவிற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் நுகர்வோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின் கம்பங்கள் நடுவதற்கு விடவேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான  வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் விலையின்றிக் கிடைக்கும் அச்சிட்ட சோதனைப் படிவத்தில்) தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து, அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, நுகர்வோர் பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின். உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.மின் இணைப்புக்கோரும் மின் நுகர்வோர், தன்னுடைய இடத்தில் அமைக்கப்பட்ட உயர் அழுத்த கட்டமைப்புகளுக்கு அரசு தலைமை மின் ஆய்வாளரின் சான்றிதழ் பெற வேண்டும்.நோட்டீஸ் கொடுக்கப்பட்ட உரிய காலத்திற்குள் மின் இணைப்பு பெற்றுக் கொள்ள வேண்டும்.

                 விவசாய மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

விவசாய மின் இணைப்புகள் வழங்குவது தொடர்பான நடைமுறைகள்:- விவசாய மின் இணைப்பு ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்கும் குறியீட்டிற்கு தகுந்தவாறு விண்ணப்பங்களின் பதிவு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய மின் இணைப்பு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட ஆவணங்களை விண்ணப்பதாரர் இணைக்கவேண்டும்.

கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் உரிமை சான்று. உரிமை சான்றில் கிணறு மற்றும் நிலம் மனுதாரருக்கு சொந்தமானது என்று கிராம நிர்வாக அலுவலர் சான்று வழங்கவேண்டும்.கிராம நிர்வாக அலுவலர் இடம் இருந்து கிணறு அமைந்துள்ள இடத்தை தெரிவிக்கும் வரைபடத்தை இணைக்க வேண்டும்.சிட்டா அடங்கல்.பட்டா / பத்திரம்கிணறு அரசுக்கு சொந்தமான கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு, ஆற்றுப்படுகையோரம் மற்றும் நீர்மின் திட்டங்களுக்கு அருகில் இருந்தால், சம்பந்தப்பட்ட துறையினரிடமிருந்து மறுப்பின்மை சான்றிதழ் பெறப்படவேண்டும்.குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்று விவசாயம் செய்ய வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறப்படவேண்டும்.விண்ணப்பத்தில் கிணற்றின் உரிமையாளர் கையெழுத்திடவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்களாக இருந்தால் அனைவரும் கையெழுத்திடவேண்டும் அல்லது ஏதேனும் ஒரு நபரின் பெயரில் மின் இணைபபு பெற மற்ற நபர்கள் மறுப்பின்மை சான்றிதழ் வழங்கவேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் மேற்கூறிய அனைத்து ஆவணங்களையும், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விவசாய விண்ணப்ப பதிவு கட்டணமாக ரூ.50/- செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டவுடன் பதிவு எண் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட உரிய ஒப்புகை அட்டை வழங்கப்படும்.

அ. விவசாய மின் இணைப்பு கீழ்க்கண்ட இனங்களுக்கு மதிப்பீட்டுத் தொகை எதுவும் பெறாமல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண வரிசை திட்டத்தில் மின் இணைப்பு பெற எல்லா பிரிவினரும் விண்ணப்பிக்கலாம்.

ஜீவன்தாரா திட்டத்தில் மின் இணைப்பு பெற, கிணறு ஜீவன்தாரா திட்டத்தில் கிணறு தோண்டப்பட்டது என்பதற்கான சான்றினை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் மேற்கண்ட இனத்தைச் சாராதவர்களும் விண்ணப்பிக்கலாம். விதவைகள், ஊனமுற்றோர், முன்னாள் ராணுவத்தினர், பழங்குடியினர் மற்றும் கலப்பு திருமணம் செய்த நபர்களுக்கு ஒவ்வொருவருடமும் 150 எண்ணிக்கைகள் சிறப்பு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அரசு கடித எண்.18.6.2010ல் பணிபுரியும் இராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரும் சேர்க்கப்பட்டு மேற்கண்ட குறியீடு 250 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு பிரிவில் மின் இணைப்பு பெற வாரியத்தில் விண்ணப்பம் பதிவு செய்து ஒரு வருடம் கழித்து உரிய விண்ணப்பம் மற்றும் ஆவணங்களுடன் (முன்னாள் இராணுவத்தினர் தவிர்த்து) மேற்பார்வை பொறியாளர்/ஊரக மின்மயமாக்கல் மற்றும் மேம்பாடு (பகிர்மானம்)/தமிழ்நாடு மின்சார வாரியம், 144, அண்ணாசாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கவும். முன்னாள் இராணுவத்தினர் தங்களது விண்ணப்பங்களை கூடுதல் இயக்குநர், முன்னாள் இராணுவத்தினர் நலப்பிரிவு, 22, இராஜா முத்தையா சாலை, சென்னை- 600 006 என்ற முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யவும். மேற்கண்ட அலுவலகத்திலிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் சிறப்பு முன்னுரிமையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் தாட்கோ மகளிர் திட்டத்தில் தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்த மகளிருக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் சிறப்புத் திட்டமான இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அரசு துறையிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டவுடன் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களுக்கு, சிறப்பு முன்னுரிமையில் இலவசமாக ஒருமுறை மட்டும் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர்களுக்கு துரிதமுறையில் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில், தாட்கோ நிறுவனம் பரிந்துரை செய்யும் ஆதிதிராவிடர்களுக்கு முன்னுரிமையில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

                 குடிசை மின் இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

குடிசை மின் இணைப்புத் திட்டம் குடிசை மின் இணைப்புத் திட்டம் குடிசை மின் இணைப்பு வேண்டுவோர் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.5/- செலுத்த வேண்டும். குடிசை மின் இணைப்பு, கிராம பஞ்சாயத்து மற்றும் சிறப்பு நிலை கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டம், தாட்கோ மற்றும் காமராஜர் ஆதிதிராவிட திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கும் குடிசை மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. குடிசை மின் இணைப்புகளுக்கு 40 வாட்ஸ் மின்பளு அளவிற்கு மட்டுமே வழங்கப்படும். குடிசை மின் இணைப்புக் கோரும் இடத்தின் பரப்பளவானது 250 சதுர அடிக்கு மிகாமலும், குடிசை, களிமண், ஓலைக் கூரை, ஓடு, சிமெண்ட் தகடு வேயப்பட்ட (ஆஸ்பெட்டாஸ்) மற்றும் தகர கூரைகளால் கட்டப்பட்ட ஒரு அறை உள்ள இடமாக இருக்கவேண்டும். படிவம் - 3 குடிசை மின்னிணைப்பு விண்ணப்பம் (விதித்தொகுப்புத் தொடர் 27(3) பார்க்க) (ஊராட்சி அமைப்புகளில் உள்ள குடிசைக்கு 40 வாட் தாழ் அழுத்த மின் ஆற்றல் வழங்குமாறு கோரும் படிவம்)

பெறுநர் உரிமதாரரின் பொறியாளர் .................................................. ... .....................................................

ஐயா,

எனது, கீழே விவரித்துள்ள குடிசைக்கு மின் ஆற்றல் வழங்கும்படி, இதனால் கேட்டுக் கொள்கிறேன்.நான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிக்கும் ஒழுங்குமுறைவிதிகளின் படியாக வேண்டப்படும், மின் ஆற்றல், மின்னிணைப்பு, மின்னளவு வாடகை மற்றும் பிற கட்டணங்களோடு காப்பு வைப்புத் தொகையும் செலுத்த இசைகிறேன்.நான் இதற்கானகட்டண வீதத்தைத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையக் கட்டணவீத ஆணை தரும் அட்டவணையில் உள்ள கட்டணவீதப்படி கட்டணம் விதிக்கப்பெற விரும்புகிறேன்.40 வாட் அளவு மின்சாரம் மட்டுமே பெறவும் அதைக் கீழே விவரித்துள்ள எனது குடிசைக்குப் பயன்படுத்துவதற்கும் இசைவதோடு, 40 வாட் மின்திறனுக்கும் மேலாக நான் மின் ஆற்றலைப் பயன்படுத்தினால் உரிய அதிகாரிகளால் மின்னிணைப்பு துண்டிக்கப்படவும் இசைகிறேன்.நான் குடிசையை விற்கவோ, வேறுவகையில் விட்டுவிலகவோ நேர்ந்தால், கால அட்டவணைப்படியான ஒரு மாதக் கால அறிவிப்பை எழுத்து மூலம் தெரிவிப்பதோடு உரிமதாரருக்குச் செலுத்த வேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளைச் செலுத்தவும் இசைகிறேன்.உரிய அதிகார அமைப்பு விதிக்கும் பாதுகாப்பு விதிகளின்படியும் விதித்தொகுப்பு விதிக்கும் விதிவகுப்புகளின்படியும் எனது குடிசையில் ஒற்றைப்புள்ளி ஒளியூட்டுவதற்கான மின்கம்பியமைப்பை அமைக்க ஏற்பாடுகளைச் செய்கிறேன். உரிமதாரரே எனது குடிசைக்கு ஒளியூட்ட ஒற்றைப் புள்ளி மின் கம்பியமைப்பைச் செய்து தர வேண்டுகிறேன். அதற்கான செலவை நான் செலுத்தி விடுகிறேன்.தன் அறிவிப்பு மின்னிணைப்புக்கு விண்ணப்பம் தரும் குடிசை எனக்குச் சொந்தமானது என்பதோடு ய) அது எனது பட்டா நிலத்தில் கட்டப்பட்டுள்ளது (நிலவரிப் பற்றுச் சீட்டு இணைக்கப்படுகிறது) என்று b) இது தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால் நிலவுரிமையாளரின் மறுப்பின்மைச் சான்றிதழும் இத்துடன் இணைக்கப்படுகிறது என்று உ) இது புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், இத்துடன் உரிய அலுவலரிடம் (துணை வட்டாட்சியர் பதவிக்குக் குறையாதவர்) பெற்ற மறுப்பின்மைச் சான்றிதழும் இத்துடன் இணைக்கப்படுகிறது என்று (தேவையற்ற விதித் தொடர்கள நீக்கிவிடலாம்) உறுதி கூறுகிறேன்.குடிசை உள்ள இடவிவரம் ய) விண்ணப்பதாரர் பெயர் b) தந்தை பெயர் உ) ஆதிதிராவிடர், பிறசாதியினர் ன) புல எண், குடிசை அடையாளம் ந) குடிசைப் பரப்பு க) குடிசை களிமண்ணால், ஓலைக் கூரையால் கட்டப்பட்டுள்ளது ப) கிராமமும், வட்டமும் h) வாடகையாளர் (பெயர்) i) விண்ணப்பத்தாரர் தொடர்பு முகவரி

தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு பெறுவதற்கான வழிமறைகள்

தாழ்வழுத்த தொழிற்சாலைக்கு மின் இணைப்பிற்கு விண்ணப்பம் படிவம்-1-ல் விண்ணப்பிக்கவும். மேற்படி விண்ணப்பம், மின்வாரிய பகுதி அலுவலகங்களில் இலவசமாக கிடைக்கும்.

விண்ணப்ப படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கவும், மின் இணைப்பு தேவைப்படும்இடத்திற்கான சட்டப்படி உரிமைதாரர் என்பதற்கான உரிய ஆவணம் கொடுக்க வேண்டும்,

மின் இணைப்பு கோருவோர் மாநில அரசின் இதர சட்டங்களுக்கு உட்பட்டு கட்டுமானம், மாற்றங்கள் அல்லது சரி செய்யும் பணிகள் கட்டிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் போது அல்லது இதர நிறுவனங்களுக்கு அல்லது புதிய தொழிற்சாலை நிறுவப்படும் போது பெறப்பட வேண்டிய ஒப்புதல் அல்லது ஒப்பளிப்பு அல்லது அனுமதி அல்லது இசைவு ஆகியவற்றினை உரிய அரசு அதிகாரியிடமிருந்து பெறுதல் மற்றும் மின் இணைப்பு கோருவோர் மின்னிணைப்பு பெறுவதற்கான  சிவில் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆணையினை கடைபிடிக்க வேண்டும்.

               விண்ணப்பம் பின்வரும் ஆவணங்களோடு தரப்பட வேண்டும் :

உரிமைச் சான்று (விண்ணப்பப் பத்திரம், தண்ணீர் அல்லது வடிகால் வரியின் பற்றுச் சீட்டு.விண்ணப்பதாரர் மின்னிணைப்பு கோரும் இடத்தின் உரிமை அல்லாதவராக இருப்பின் -  உரிமையாளரது சம்மதக் கடிதம் அல்லது இருப்பிட உரிமைச் சான்றிதழ் (அல்லது குத்தகைப் பத்திரம்) மற்றும் காப்புறுதி பத்திரமும் இருமடங்கு   காப்பு வைப்பு தொகை செலுத்த சம்மதக் கடிதம்.ஆர்வமுள்ள நுகர்வோரால் மின் வழங்கல் கோரப்படும் கட்டுமானம், மாற்றிமைத்தல் அல்லது கட்டிடங்கள் பழுதுபார்த்தல் அல்லது புதிய தொழிற்சாலைகள் அல்லது தொழிற்கூடங்கள் அல்லது பிற நிறுவனங்கள் நிறுவுதல் குறித்து தமிழ்நாடு மாநிலத்தின் சட்டங்களில் சொல்லப்பட்டவாறு உரிய அதிகார அமைப்புகளிடமிருந்து அனுமதி அல்லது ஒப்புதலளிப்பு அல்லது ஒப்பளிப்பு அல்லது இசைவு பெறுவதுதொடர்பாக அத்தகைய சட்டங்களுக்கு ஆர்வமுள்ள நுகர்வோர் இணங்கி நடத்தல்.உயர்நீதிமன்ற ஆணை 23-08-2006 ன் படி, சென்னை பெருநகர் பகுதியிலுள்ள சிறப்பு வகை மற்றும் பல மாடி கட்டிடங்களுக்கு, மின் இணைப்புக்கான படிவத்துடன் உரிய அதிகார அமைப்பிடமிருந்து பெறப்பட்ட திட்ட அனுமதி சமர்ப்பிக்கப்பட வேண்டும். மின் இணைப்பு பெறுவதற்கு முன்பு பணி முடிவுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பகுதி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது   தபால் மூலம் கொடுத்து உரிய ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.விண்ணப்பித்தனை பதிவு கட்டணம் மற்றும் காப்புறுதி கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.மின் இணைப்புக்கான விண்ணப்பத்தினை பெறப்பட்டவுடன், மின் இணைப்பு கோருவோருக்கு அப்பகுதி பொறியாளர்களை அணுகி எளிதாக ஆய்வு செய்ய ஏதுவாக உள்ள தரைதளத்தில் இணைப்பு கொடுக்க வேண்டிய இடத்தினை/மின்னளவி பொருத்துவதற்கான இடத்தை முடிவு செய்துக் கொள்ள ஒரு நோட்டீஸ் அனுப்பப்படும்.மின் இணைப்புக் கோருவோர் அதற்குண்டான கட்டணங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டி கட்டணம் செலுத்துவதற்கான சீட்டு/அறிவிப்பு/கடிதம் அனுப்பப்படும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான அனைத்து கட்டணங்களும் மற்றும் இசைவு பத்திரமும் பெறப்பட்ட பிறகே மின் நீட்டிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்,மின் இணைப்பு கோருவோர், தன்னுடைய இடத்தில் இலவசமாக மின் வாரியத்திற்கு மின் கம்பங்கள் நடுவதற்கு விடவேண்டும். மற்றும் மின் இணைப்பு கோருவோரே தன்னுடைய சொந்த செலவிலேயே மின் கம்பங்கள், கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழி தடத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும்.தங்களுடைய கட்டிடத்தில் அனைத்து வயரிங்குகளையும் உரிய அரசு அங்கிகாரம் பெற்றவர்களால் செய்து முடிக்கப்பட வேண்டும். மின் கம்பியமைப்பு பணி முடிந்ததும், கோரும் நுகர்வோர் (உரிமதாரர் மின் வாரிய அலுவலகங்களில் விலையின்றிக் கிடைக்கும் அச்சிட்ட சோதனைப் படிவத்தில்)  தனது நிறுவல் அமைப்பின் பணிமுடிந்து சோதனையும் செய்து, அது மேலும் பொறியாளரது ஆய்வு மற்றும் சோதனைக்காக ஆயத்தமாக உள்ளதை, பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின் உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக் கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

கேள்விகள்

1. என் மின் இணைப்பின் மின் கட்டணத்தை (White Meter Card) வெள்ளை அட்டையை தவிர்த்து) எவ்வாறு தெரிந்து கொள்ளலாம்?

தங்கள் பிரிவு அலுவலகத்தில் வருவாய் மேற்பார்வையாளர்/வருவாய் ஆய்வாளர்/கணக்கீட்டாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தளத்தில் (web) www.tneb.in Consumer servicesல் உள்ள மெனுவில் (Bill Status) மூலமாக தெரிந்து கொள்ளலாம்.முன்னதாக தாங்கள் எந்த மண்டலத்தில் (Region)எந்த வட்டத்தில் வருகிறீர்கள் என்று தெரிந்திருக்க வேண்டும்.

2. நான் மின் கட்டணத்தை முன் பணமாக கட்டலாமா? கட்டிய பணம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

ஆம்,நீங்கள் முன் பணமாக மின் கட்டணத்தை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் கணக்கிட்டு ஆய்வாளர் வருவாய் மேற்பார்வையாளரிடம் கட்டலாம். கட்டிய முன் பணம், அடுத்தடுத்து வரும் கணக்கீட்டு மாதங்களில், சரி செய்யப்படும்.

3. தற்காலிக மின் இணைப்பு பெற என்ன விதிமுறைகள்?

தங்கள் பிரிவின் அலுவலரை சந்தித்து தற்காலிக மின் இணைப்பு பெறலாம். முன்னதாக மின் இணைப்பிற்கான ஒயரிங் செய்திருக்க வேண்டும்,

4. மின் கட்டணத்தை ECS மூலம் பணம் செலுத்த நான் என்ன செய்யவேண்டும்?

முதலில் பிரிவு அலுவலரை சந்தித்து ECS விண்ணப்பம் பெற்று அந்தந்த வட்டத்திற்கு உட்பட்ட துணை நிதி கட்டுபாட்டு அலுவலரிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.இது இன்னமும் முழுமையாக அனைத்து அலுவலகங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.