1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
Wednesday, December 15, 2021
Monday, December 6, 2021
நத்தம் நிலவரித் திட்டத்தில் தனி வட்டாட்சியரின் பணிகள்
நத்தம் நில அளவை குறித்த கிராம ஆவணங்கள் நில அளவைக் பிரிவில் இருந்து பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நத்தம் நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியரிடம் கீழ்க்கண்ட ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டும்.
- தூய நிலப்பதிவேடு(நத்தம் பகுதிக்கு மட்டும்)
- தூய நிலப்பதிவேடு (வேளாண்மை அல்லா பிறப்பயன்பாட்டிலுள்ள வேளாண்மை நிலங்களுக்கு)
- புல இடத்தைக் காணும் பணியில் தயார் செய்யப்பட்ட தோராய வரைபடம்
- ஒப்புகை தொடர்புப் பட்டியல்
- தோராய பரப்புப் பட்டியல்
- ஆக்கிரமண பட்டியல் மற்றும் வரைபடம்
- சார்-பதிவாளர் அலுவலக புள்ளி விவரப் பதிவேடு
- ஊராட்சி வீட்டு வரி பதிவேட்டின் நகல்
- புலப்படச் சுவடி
இவைகள் வரப்பெற்றவுடன் தனி வட்டாட்சியர் மேற்படி ஆவணங்களை தம்மிடம் பணிபுரியும் அலுவலர்களிடம் கொடுத்து எஸ்.எப்.10 என்ற முக்கியமான பதிவேட்டினை தயார் செய்து அலுவலர்களிடம் கொடுத்து எஸ்.எப்.10 என்ற முக்கியமான பதிவேட்டினை தயார் செய்து கொள்கிறார். எஸ்.எப்.10 ல் நத்தம், நஞ்சை, புஞ்சை வாரியாக மனையாகவுள்ள உட்பிரிவு செய்யப்பட்ட இனங்கள் வரிசையாக பதியப்பட்டு ஒரு பதிவேடாக தயாரிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் விசாரணை மேற்கொள்வதற்காக படிவம் 1,2ஐ விளம்பரம் செய்தும், பணியாளர்கள் நியமனம் செய்தும் அவர்கள் மூலம் அக்கிராமத்தில் உள்ள அனைத்து மனை பட்டாதாரர்களிடமும், சம்பந்தப்பட்ட மனை தனக்குரியது என்பதற்கு ஆதாரமாக பத்திர நகல், வீட்டுவரி ரசீது, மின் இணைப்பு ரசீது மற்றும் அனுபவதாரரின் மனுவுடன் இணைந்த வாக்குமூலம் பெறப்படுகிறது. பின் தனி வட்டாட்சியர் நிலவரி திட்ட முறைப்படி ஒவ்வொரு மனுதாரர் அனுபவம் செய்யும் இடத்தையும் பார்வையிட்டு தன் கருத்துக்களை எஸ்.எப்.10 பதிவு செய்கிறார்.(உட்பிரிவு எந்த நிலமாக உபயோகிக்கப்படுகிறது, அதாவது வீடு, காலிமனை, கொட்டகை போன்ற விவரங்கள்) மேலும், அப்பதிவேட்டிலேயே தன் உத்திரவினையும் பதிவு செய்கிறார். தனி நபர் அனுபவத்தில் இருப்பதை அவர் பெயருக்கு பட்டா வாங்கவும், பாதை, வாய்க்கால், குளம், கோவில், பள்ளிக்கூடம் போன்ற அரசுக்கு சொந்தமான இடங்கள் அதன் பெயரில் அரசு மனையாகவும் மாற்றி உத்திரவினை பதிவு செய்கிறார். தனி நபர் பெயரில் பட்டா வழங்கும் நத்தம் பகுதியை இரயத்து மனை என்றும், நஞ்சை மனை என்றும் வகைபாடு செய்து உத்திரவிடப்படுகிறது. பின் மனை பட்டாவாக வழங்க தகுதியான நபர்களுக்கு அகர வரிசைப்பட்டியல் தயார் செய்து தோராய சிட்டா முதலில் தயார் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் படிவம் 3 என்ற மனைப்பட்டா உத்திரவு வழங்கப்படுகிறது. பின்னர் படிவம் 4 என்ற தோராய பட்டா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் சம்பந்தப்பட்ட மனைதாரரின் உட்பிரிவுக்கு தோராய வரைபடமும் வரையப்பட்டிருக்கும். தோராய பட்டா வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஆட்சேபனை ஏதும் இருந்தால் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டிய விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆட்சேபனை வரப்பெற்றால் அதன்மீது விசாரணை செய்து தக்க முடிவு எடுக்கப்படுகிறது. அத்துடன் அக்கிராமத்திற்கு நத்தம் மனைப் பதிவேடு என்ற நிலவரித்திட்ட அ-பதிவேடு, தூய அடங்கல் இரு நகல்களுடன் தூய சிட்டா இரு நகல்களும், தனி வட்டாட்சியர் பிரிவில் தயார் செய்யப்பட்டு நில அளவை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து இரு நகல்கள் புலப்படச் சுவடியும் பெற்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு பராமரிப்புக்காக வழங்கப்படுகிறது. அத்துடன் அந்த கிராம நத்தத்திலுள்ள அரசு இடங்களை எஸ்.எப்.7 என்ற பதிவேட்டில் பதிந்து அரசு நிலங்களிலுள்ள ஆக்கிரமணங்களை எஸ்.எப்.8லும் பதிந்து மரப்பட்டா பட்டியல் இட்டு பதிவேடு ஆகியவை தலா இரு நகல்களும், தயார் செய்து வட்ட ஆட்சியரிடம் பராமரிப்புக்காக வழங்கப்படுகிறன.
வட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வட்ட கணக்கு எண். 4, 5, 6, 7 மற்றும் 8ஏ இவைகளைப் பற்றிய குறிப்புகள்
கிராமத்தில் பலவித காரணங்களினால் பூமியில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவைகளை எல்லாம் கண்காணித்து வருவாய் மற்றும் சர்வே ஆவணங்கள் பதிவு செய்யும் பொருட்டு வட்ட அலுவலகத்தில் கீழ்க்கண்ட கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.
வட்ட கணக்கு எண்.4
தரிசு என்று அ.பதிவேட்டில் பதியப்பட்டுள்ள சர்வே புலங்களை நில ஒப்படை செய்யகோரி வரும் விண்ணப்பங்களை இந்த 4ம் எண்.பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தர்காஸ்து என்று பெயர். இது பசலி ஆண்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
வட்ட கணக்கு எண்.5
ஏதோ ஒரு காரணத்தினால் தன் நிலத்தின் மீது தனக்குள்ள உரிமையை தானமாக விட்டுவிடுகிறேன் என கோரி வரும் விண்ணப்பங்களை இந்த பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.(உ.ம்) வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட நிலத்தின் உரிமையை விட்டுவிடல். இது பசலி ஆண்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
வட்ட கணக்கு எண்.6
இது ஏப்ரல்-மார்ச் முடிய பராமரிக்கப்படுகிறது. இது 6(1),6(2) என இரு பகுதிகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். 6(1) சார்பதிவாளர்அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டா மாறுதல் நமுனாக்கள் நேரடியாக பதிந்து நடவடிக்கை தொடர வேண்டும். 6(2) நேரடியாக பட்டாதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பதிந்து நடவடிக்கை தொடர வேண்டும்.
வட்ட கணக்கு எண்.7
சர்வே புலத்தின் வகைப்பாடு மற்றும் தொடர்பாக இந்த பதிவேட்டில் பதியப்படுகிறது. இது பசலி ஆண்டில் பராமரிக்கப்பட வேண்டும். தன்பதிவேட்டில் வகை மாற்றத்திற்கு நடவடிக்கை எடுத்து உத்திரவு பெற்ற பின்தான் இந்த 7ம் எண்.பதிவேட்டில் குறித்து கிராம வட்ட கணக்குகளில் மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்ட கணக்கு எண்.8ஏ இது பசலி ஆண்டில் பராமரிக்க வேண்டும். இது ஒரு முக்கயமான பதிவேடாகும். 4,5,6,7 நேரடியாக பதிந்து நடவடிக்கை தொடரலாம் ஆனால் இதில் அப்படியும் முடியாது. முழுபுலம், முழு உட்பிரிவு சம்மந்தமாக 4,5,6,7ல் பதிந்து கிராம வட்டக் கணக்கில் உரிய மாறுதல் செய்து நடவடிக்கை தொடரலாம். ஆனால் இதில் அப்படி முடியாது. முழு புலம், முழு உட்பிரிவு சம்பந்தமாக 4,5,6,7ல் பதிந்து கிராம வட்டக் கணக்கில் உரிய மாறுதல் செய்து நடவடிக்கை தொடரலாம். ஆனால் புதிய புலம், புதிய உட்பிரிவு விஷயத்தில் அந்த உட்பிரிவு ஆவணங்களை 8ஏ-க்கு மாற்றி பதிந்து 8ஏ-எண் கொடுத்த பின்தான் கிராம, வட்ட கணக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6ம் எண் பதிவேடு எண் மூலம் வரும் பட்டா மாற்றம் 8ஏ கோப்பினை தவிர இதர 8ஏ கோப்புக்களை கிராம, வட்ட கணக்குகளில் மாறுதல் செய்தபின் சம்பந்தப்பட்ட 4,5,7 பிரிவிலேயே திரும்பக் கொடுத்துவிட வேண்டும். இந்த 8ஏ கோப்பினை 4,5,7 பகுதிக்கு ஒன்றுடன் ஒன்று இணைத்து வைக்க வேண்டும். 6ம் எண் பதிவேடு மூலம் வரும் 8ஏ கோப்பினை 8ஏ பிரிவிலேயே முடிவு செய்ய வேண்டும். பிரதி மாதம் இப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள காலத்தினை நகல் எடுத்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.
Saturday, December 4, 2021
ஆன்லைனில் ஆர்டிஐ தகவல் கட்டணம் செலுத்துவது
ஆன்லைனில் ஆர்டிஐ தகவல் கட்டணம் செலுத்துவது
முதலில் இந்த தளத்தில்நுழையுங்கள்.
எந்த பயனர் பெயரும் கடவுச்சொல்லும் தேவையே இல்லை.
இந்த படிவத்தில் சிவப்பு * கட்டாயமாக தரப்பட வேண்டிய தகவல். அதில் முதலில் தங்கள் பெயர், அலைபேசி எண், முகவரி, ஊர், அஞ்சல் பின்கோடு, மின்னஞ்ச்சல் முதலியவற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.
Period details என்பதில் from date மற்றும் to date இரண்டும் ஒன்று தான். பணம் செலுத்தும் நாளையே குறிப்பிடுங்கள்.
Department Details - துறை விவரங்கள் என்பதில்
District மாவட்டம் : PAO (chennai Secretariat)
Department receiving receipts- துறையின் பெயர் : 03501 - Personnel and Administrative Reforms Department - Secretariat
DDO name அலுவலக பெயர் : 44010053 - Finanacial Adviser and chief accounts officer - Tamilnadu State Information Commission Chennai
இவற்றை தேர்வு செய்து விட்டு, Generate OTP பட்டனை அழுத்துங்கள். இப்போது நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணுக்கு ஒரு OTP code வந்திருக்கும் அதை கொடுத்து பட்டனை அழுத்துங்கள். OTP validated successfully என்று திரையில் செய்தி காட்டும்.
அடுத்து Service Details பகுதியில்,
Receipt Type - வரவின் வகை : Right To Information (fees) rules 2005
Sub Type - துணை வகை : Right To Information (fees) rules 2005
இவற்றை கொடுத்ததுமே இப்போது தகவல் கட்டணங்களை செலுத்த வேண்டிய Acct Code கணக்கு தலைப்பு 007060118AA22739 என்பதை காட்டி விடும். இந்த கணக்கு தலைப்பு வந்து விட்டால் நீங்கள் சரியான தேர்வினை செய்துள்ளீர்கள். இப்போது செலுத்த வேண்டிய நகல்கள் கட்டணத்தை அடுத்த கட்டத்தில் உள்ளிடுங்கள்.
அடுத்து இருக்கும் துறையின் குறிப்பு எண் என்பதில் உங்களுக்கு பணம் செலுத்த வந்த கடிதம் எண் குறிப்பிடலாம். குறிப்புகள் பகுதியில் எந்த அலுவலகம் எதற்காக பணம் செலுத்துகிறீர்கள் என தெளிவாகும் படி சுருக்கமாக கொடுங்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், கருவூலம் ஆன்லைன் பணம் செலுத்துதல் குறித்து இன்னமும் தெளிவான வழிகாட்டுதல் அரசு ஊழியர்களுக்கு தரப்படவில்லை. ஆதலால், இதை சந்தேகமாகவே பார்க்கிறார்கள். ஆனால், ரசீதில் வரும் Barcode Scan செய்வதின் மூலம், அல்லது challan number மூலமாக பணம் செலுத்திய விவரத்தை யாரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள முடியும். இருந்தாலும் வீண் சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க இந்த குறிப்பு பகுதியை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
payment details ல்
Payment Gateway : State bank, baroda bank, indian overseas bank இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொண்டு ( நான் State Bank of India தான் தேர்வு செய்தேன். வழக்கமாக அந்த வங்கியின் கிளையில் தான் கருவூலசெலுத்து சீட்டு மூலமாக பணம் கட்ட சொல்கிறார்கள் என்பதால்)
Payment Method : online என்பதை அடுத்து தேர்ந்தெடுங்கள்.
Submit கொடுங்கள். இப்போது வரும் பக்கத்தில் கீழே கடைசியில் other payment modes என்று இருப்பதில், vpa தேர்வு செய்யுங்கள். vpa code கேட்டு ஒரு கட்டம் வரும். அதில் உங்களின் PAYTM - PHONEPAY - GPAY - BHIM ஏதேனும் ஒன்றின் UPI ID யை குறிப்பிடுங்கள்.
அடுத்து இரண்டு முறை confirm - confirm பொத்தானை அழுத்த வேண்டி இருக்கும்.
இப்போது 3 நிமிடங்களுக்குள் உங்கள் அலைபேசியின் Paytm அல்லது Gpay அல்லது வேறு எந்த UPI id கொடுத்தீர்களோ அந்த application திறந்து பார்த்தால், SBImops என்ற பெயரில் பணம் செலுத்த காட்டும். உங்கள் upi pinகொடுத்து பணத்தை செலுத்திவிட்டால் போதும், கருவூல தளத்தில் Transaction Success என்று திரையில் காட்டும் அதுவரை ஒரு இருபது வினாடிகள் பொறுமையாக இருங்கள். அடுத்த பத்து வினாடிகளில் Download Challan என்று திரையில் காட்டும். அதை print செய்து தகவல் கட்டணத்திற்கான பணம் செலுத்திய ரசீதாக அனுப்பி வையுங்கள்.
QR code option கூட தேர்வு செய்யலாம். திரையில் தெரியும் QR Code உங்கள் அலைபேசியில் Paytm QR code scanner மூலமாக scan செய்து பணம் செலுத்த முடியும்.
இனி 4 ரூபாய் தகவல் கட்டணத்திற்கு நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ஸ்டேட் பேங்க் தேடி வரிசையில் காத்திருந்து செலுத்த அவசியமில்லை.
நன்றி.
இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென கருதினால், இந்த பதிவின் இணைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
Thursday, November 25, 2021
அரசாணை எண்: 318, நாள்:30.08.2019
அரசாணை எண்: 318, நாள்:30.08.2019
- ஆட்சேபகரமற்ற புறம்போக்கு இடங்களில் 5 ஆண்டுக்கு மேலாக குடியிருப்போருக்கு அந்த இடத்தையே வரன்முறை செய்து பட்டா வழங்க வேண்டும்.
- கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை குடும்பங்களின் நலன்கருதி, அவற்றை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கிட வேண்டும்..
- நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற இடங்களில் குடியிருப்போருக்கு மாற்று இடம் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைத்துத்தர வேண்டும்.
- மேய்கால், மந்தைவெளி உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகைமாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்கிட வேண்டும்.
- முதலில் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்துவிதமான புறம்போக்கு நிலங்களிலும் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகம் அரசு நிலப்பதிவேட்டில் பதிவு செய்த விவரங்களின் அடிப்படையில் தொகுத்து கணினியில் பதிவு செய்ய வேண்டும்.
- அதன் அடிப்படையிலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை கணக்கெடுப்பு முடிக்காமல் இருந்தால் 31.8.2019-க்குள் ஆக்கிரமிப்பு விவரங்களை தொகுத்து கணினியில் பதிவு செய்துவிட வேண்டும்.
- சென்னை மாநகர், காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் சென்னை மாநகர் சுற்றியுள்ள பகுதிகளிலும், இதர மாநகராட்சி பகுதிகளிலும் ஆட்சேபனைக்குரிய மற்றும் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களை மாவட்ட நிர்வாகமானது தங்களிடம் உள்ள அரசு நிலப்பதிவேடு மற்றும் புலத்தணிக்கை ஆகியவற்றின் மூலமாக விவரங்களை சேகரித்து கணினியில் பதிவு செய்து கொள்கை முடிவு எடுக்கும் பொருட்டு, நில நிர்வாக ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.
- மேலே குறிப்பிட்ட பகுதிகளில் தடையாணை பதிவு செய்யப்பட்டுள்ள இனங்களில் அதை தளர்வு செய்வது குறித்து அரசே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு வருவாய் நிலை ஆணை எண்.21-ன் கீழ் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வரன்முறை செய்ய வேண்டும்.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்புவிக்கப்பட்ட நிலங்களில் ஆட்சேபனையற்ற நிலங்களான தோப்பு, களம் போன்ற இனங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தீர்மானத்தை பெற்று அதன் அடிப்படையில் வரன்முறை செய்ய வேண்டும்.
- கோவில் நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகள் அதில் குடியிருப்பவர்கள் நலன் கருதி விதிமுறைகளுக்கு உட்பட்டு, தகுதியான நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வரன்முறைப்படுத்த அந்த நிலங்களை உரிய வகையில் கையகப்படுத்த வேண்டும்.
- அந்த நிலங்களின் மதிப்பைநிர்ணயம் செய்வதற்கு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைய துறை வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
- இதற்கான முன்மொழிவுகள் மாவட்ட வாரியாக நில உரிமை பெற்றுள்ள கோவில் வாரியாக அரசுக்கு அனுப்பி, அரசின் ஆணைப்பெற்று அதன் அடிப்படையில் வரன்முறைப்படுத்தவேண்டும்.
- மேய்க்கால், மந்தைவெளி போன்றவையும் ஆட்சேபனைக்குரிய ஆக்கிரமிப்புகளாக இருந்தபோதிலும் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பொதுநலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
- அவை நீண்ட கால ஆக்கிரமிப்புகளாக இருந்தால் அதையும் கருத்தில் கொண்டும் கால்நடைத்துறையின் அனுமதி பெற்று மாவட்ட நிர்வாகம் உரிய விதிமுறைகளுக்குட்பட்டு முன்மொழிவுகளை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
- அதனை ஆய்வு செய்து பிறப்பிக்கப்படும் அரசு ஆணையின்படி வகை மாற்றம் செய்யப்பட்டு, குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறைப்படுத்த வேண்டும்.
- நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்புகளை முதலில் அப்புறப்படுத்தி அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் பொருட்டு அத்தகைய குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை செய்துள்ள ஏழைகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
- அத்தகைய தகுதியான பயனாளிகளுக்கு மாற்று புலமாக தகுதியுள்ள ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம் அதே கிராமத்தில் இல்லாத நிலையில், தனியார் பட்டா நிலங்களை வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்த வேண்டும்.
- அல்லது பேச்சுவார்த்தை மூலம் விலைக்கு நிலத்தை பெற்றோ மறுகுடியமர்வு செய்யும் வகையில் வீட்டுமனை பட்டா அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- நிலமதிப்பு அதிகம் உள்ள நகர் சார்ந்த பகுதிகளில் தனிப்பட்டா அளிக்காமல், அதற்கு மாற்றாக தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்றுவாரியம் மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர வழிவகை செய்ய வேண்டும்.
- ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்குகளில் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறை படுத்தும்போதும், ஆட்சேபனையுள்ள புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளுக்கு மாற்று இடம் வழங்கும்போதும் நகர்ப்புறத்திலும், கிராமப்புறத்திலும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
- ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் உள்ள பயனாளிகளுக்கு அரசு நடை முறையில் உள்ள விதிமுறைகளின்படி நிலமதிப்பு வழிகாட்டி பதிவேட்டின் படியான மதிப்பின் படி வசூல் செய்து கொண்டு, அதன் அடிப்படையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும்.
- இந்த வரன்முறை திட்டங்களில் பேரூராட்சி, நகராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் விஸ்தீர்ணம் 25 சென்டுக்கு அதிகமாகாமல் இருந்து போதுமான இடம் இருந்தால் ஒரு குடும்பத்திற்கு தலா 2 சென்டுக்கு அதிகமாகாமலும், கிராமப்புறங்களில் 3 சென்டுக்கு அதிகமாகாமலும் வீட்டுமனை பட்டா வழங்கலாம்.
- நகர்ப்புற பகுதிகளில் நில மதிப்பை கருத்தில் கொண்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் விஸ்தீரணம் 25 சென்ட்டுக்கு கூடுதலாக இருந்தால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட ஏதுவாக அந்த நிலத்தை முதலில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
- அதன்பிறகு அந்த நிலத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இந்த சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டங்களின் கீழ் நிலமதிப்பு அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நிதி அதிகார வரம்பு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் வரையிலும், வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரையிலும், மாவட்ட கலெக்டருக்கு ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், நில நிர்வாக ஆணையருக்கு ரூ.5 லட்சத்திற்கு மேல் என்று நிதி அதிகார வரம்பு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அந்தப் பகுதியின் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வட்ட தலைமை நில அளவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் சரிபார்க்கப்பட்டு வரன்முறைப்படுத்தப்பட்டு பட்டா வழங்கப்பட வேண்டும்.
- மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட அளவிலான குழு, நில நிர்வாக ஆணையர் மற்றும் அரசு அனுமதி தேவையில்லாத இனங்களில் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்யலாம்.
- மாவட்ட அளவிலான குழுவினால் ஆக்கிரமிப்புகள் வரன்முறை செய்ய இயலாத நேர்வுகளில் சம்பந்தப்பட்ட புலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலருடன் கூட்டுத்தணிக்கை செய்ய வேண்டும்,
- அந்த தணிக்கையின் அடிப்படையில், முன்மொழிவினை வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர், நில நிர்வாக ஆணையர், நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட மாநில குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
- அதன் மூலம் உரிய விலக்களிப்பு ஆணை பெற்றபின் தகுதியுள்ள பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
- தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய் கோட்ட அலுவலர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலரால் பதியப்பட்டிருந்தால், அதனை மாவட்ட கலெக்டர் விலக்களித்து தகுதியுள்ள நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம்.
- தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாவட்ட கலெக்டரால் பதியப்பட்டிருப்பின் மாவட்ட கலெக்டர் தலைமையில் உள்ள குழுவால் விலக்களிக்கப்பட வேண்டும்.
- தடையாணை புத்தகத்தில் பதியப்பட்டுள்ள நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து நில நிர்வாக ஆணையராலோ அல்லது அரசளவிலோ பதிவு செய்யப்பட்டிருந்தால் உரிய முன்மொழிவினை பெற்று மாநில குழுவால் விலக்களிக்கப்பட வேண்டும்.
- இச்சிறப்பு வரன்முறை திட்டங்கள் ஓராண்டு காலத்திற்கு செயல்படுத்தப்பட வேண்டும்.
- இந்த விலக்களிப்பு அதிகாரங்கள் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படும் காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.
- இந்த அரசாணைப்படி தக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கணினியில் பதியப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் மாதாந்திர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
- மாவட்ட கலெக்டர் மாதாந்திர ஆய்வு அறிக்கையை நில நிர்வாக ஆணையருக்கு 5-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
- இத்திட்டம் சிறப்பாக செயல்முறைப் படுத்தப்படுகிறதா என்பதை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது நில நிர்வாக ஆணையர் மாதம் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்.
Tuesday, October 19, 2021
தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்
தமிழக அரசு அலுவலர்களுக்கான சட்ட விதிமுறைகள், அரசாணைகளுடன்...
நடத்தை விதிகள் என்றால் என்ன?
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள நடைமுறைகள் மற்றும் விதிகளை அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சொத்து வாங்குதல், விற்றல், நிதி ஆதாரங்கள் உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசுக்கு முறைப்படி தெரிவித்த பின்னரே மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கைகளை பணிபுரிபவர்கள் கடைபிடிப்பதற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள், 1976 உருவாக்கப்பட்டது.
இந்த விதிகள் அரசுப் பணியில் இருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தும். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதி 2(5) & (6) ன் கீழ்க்கண்டவர்கள் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படுவார்கள்.
தந்தை / வளர்ப்பு தந்தை
தாய் / வளர்ப்பு தாய்
கணவன்
மனைவி
மகன் / வளர்ப்பு மகன்
மகள் / வளர்ப்பு மகள்
சகோதரன்
சகோதரி
மனைவியின் தாய் மற்றும் தந்தை
கணவரின் தாய் மற்றும் தந்தை
சகோதரனின் மனைவி
சகோதரியின் கணவர்
மகளின் கணவர்
மகனின் மனைவி
இந்த உறவுமுறைகள் அனைத்தும் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியரின் குடும்ப உறுப்பினர்களாகவே கருதப்படுவர்.
உயர்கல்வி பெறுவது தொடர்பான அரசாணை :
தொலைதூரக் கல்வி, மாலைநேரக் கல்லூரி மற்றும் தனியாக படிக்க அரசு ஊழியர், தன் துறை தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். அனுமதி விண்ணப்பம் கிடைத்த 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அந்த விவரங்கள் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். 15 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசு ஊழியர் கருதிக் கொள்ளலாம்.
அரசாணை எண் Ms. No - 200, P & A. R, dt - 19.401996 ன்படி அரசுப் பணியை தவிர எந்த பணியையும் அரசு ஊழியர் ஏற்கக்கூடாது.
அரசு ஊழியர் எவரும் பகுதி நேர வேலை எதையும் செய்யக்கூடாது. ( G. O. Ms - 893,P & A. R, dt - 22.9.1983 மற்றும் Rule 8(1)(aa)).ஆனால் Provision 6 under Rule 8(1)(a) ல் கண்டுள்ள விலக்களிப்பின்படி அரசு ஊழியர் ஒருவர் கல்வி நிலையங்களில் விரிவுரையாற்றி அதற்கென மதிப்பூதியம் பெறலாம்.
தனியாக வகுப்பு நடத்துதல் :
எந்த ஆசிரியரும் தனிவகுப்பு(Tution) நடத்தக்கூடாது. Tution நடத்தும் எண்ணத்துடன் மாணவரிடமோ, அவருடைய பெற்றோரிடமோ அல்லது பாதுகாவலரிடமோ எந்த உறவையும் ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. இருப்பினும் பணம் எதுவும் பெறாமல் மாணவர்களுக்கு Tution எடுக்க தடை ஏதும் இல்லை. (Rule 6(17)).
விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்பு :
அலுவலக வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் ஒருவர் விஞ்ஞானம், அறிவியல், இலக்கியம், கலை போன்ற பணிகளில் பங்கேற்கலாம். ஆனால் இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அலுவலகத் தலைவர் அறிவுறுத்தினால் அதுபோன்ற
வேலைகளில் ஈடுபடக்கூடாது. (Provision 1 under rule 8(1)(a)).
அசையாச் சொத்து தொடர்பான விதிகள் :
அரசு ஊழியரின் குடும்ப உறுப்பினர்கள் அவர்களின் சொந்த வருவாயிலிருந்து ஒரு சொத்தை கையகப்படுத்துவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ எவருடைய அனுமதியும் பெறத் தேவையில்லை. ஆனால் அரசு ஊழியரே குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரு சொத்தை கிரையமாக பெற்றால் அதற்கு துறைத் தலைவரின் அனுமதியை பெற வேண்டும். ( G. O. Ms - 3158, Public (service - A) Dept, dt - 27.9.1974).
அரசு வேலையில் இருக்கின்ற கணவன், மனைவி இரு சேர்ந்து ஒரு சொத்தை கிரையம் வாங்கினால் அதன் விவரத்தை துறைத் தலைவருக்கு இருவரும் தனித்தனியாக தெரிவிக்க வேண்டும். ( Govt. Lr. No. 29546/80-4 P & A. R, dt - 22.10.1980).
மூதாதையர் சொத்து ஒன்று வாரிசுரிமையின் படி இறங்குரிமையின் மூலம் கிடைக்கும் தருவாயில் அந்த நிகழ்வை துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டாம். சொத்து அறிக்கையில் மட்டும் காட்ட வேண்டும். (Rule 7(3).
அரசு ஊழியர் பணிபுரியும் மாவட்டத்தில் எந்த சொத்தையும் கையகப்படுத்தக்கூடாது. முன்னர் பணிபுரிந்த மாவட்டமாக இருந்தால் இடம் மாறுதல் பெற்று 2 ஆண்டுகள் கடந்த பின்னர் தான் சொத்து ஒன்றினை கையகப்படுத்த வேண்டும் . ( Rule 7(14).
இருப்பினும் வீடு அல்லது வீட்டுமனை ஒன்றினை பணிபுரியும் அல்லது பணிபுரிந்த மாவட்டத்தில் வாங்கவே அல்லது விற்கவோ தடையில்லை. (Provision under rule 7(14)(a).
வருவாய்த்துறை அல்லது நிதித்துறையில் பணிபுரிபவர்கள் அத்துறையில் நடத்தப்படும் அசையும் அல்லது அசையா சொத்துக்களை பொது ஏலத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையகப்படுத்தக்கூடாது. (Rule 7(16).
Record Sheet அல்லது Personal File - ஐ பராமரித்து வரும் அதிகாரி ஊழியர்களின் சொத்து விவரங்களையும் ஒரு பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும். ( Rule 7(9).
கீழே குறிப்பிட்டுள்ள தொகைக்கும் அதிகமாக சொத்து வாங்கினாலோ அல்லது விற்பனை செய்தாலோ துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த Rule 7(2) as amended in G. O. Ms. No - 39, P & A. R. dt - 9.3.2010.
A Group Employees may Purchase upto Rs. 80,000/-
B Group Employees may Purchase upto Rs. 60,000/-
C Group Employees may Purchase upto Rs. 40,000/-
D Group Employees may Purchase upto Rs. 20,000/-
அரசு ஊழியர்கள் ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒருமுறை, 5 ஆண்டுகள் முடிவில் சொத்து அறிக்கை ஒன்றை துறைத் தலைவரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ( Rule 7(3).
அரசு ஊழியரின் அரசியல் செல்வாக்கு :
அரசு ஊழியர்கள் பொதுவாக அரசியல் செல்வாக்கு கொண்டு வருதல் அல்லது அமைச்சர்களிடம் முறையிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அரசு ஊழியர் எவரேனும் அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அவரை அலுவலகத் தலைவர் கூப்பிட்டு தவறு என்று அறிவுறுத்த வேண்டும். அந்த அறிவுரையை பொருட்படுத்தாமல் இரண்டாவது முறையாக ஒரு அரசு ஊழியர் திரும்பவும் அரசியல் செல்வாக்கை கொண்டு வந்தால் அவரை துறைத் தலைவர் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதற்கு பின்னரும் அரசு ஊழியர் தொடர அரசியல் செல்வாக்கு கொண்டு வந்தால் அந்த அலுவலர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். (Govt. Letter No 9637/A/95-1,P & A. R. (A) Dept, dt - 24.4.1995).
அலுவலக பிரச்சினை தொடர்பாக அரசு ஊழியர் ஒருவர் அமைச்சரை நேரில் சந்தித்து முறையீடு செய்யலாம். பின்னர் அந்த முறையீடு விவரத்தை அலுவலகத் தலைவர் வழியாக துறைத் தலைவருக்கு தெரிவிக்க வேண்டும். (G. O. Ms. No - 9, P & A. R (A) Dept, dt - 2.10.1985).