ஆன்லைனில் ஆர்டிஐ தகவல் கட்டணம் செலுத்துவது
முதலில் இந்த தளத்தில்நுழையுங்கள்.
எந்த பயனர் பெயரும் கடவுச்சொல்லும் தேவையே இல்லை.
இந்த படிவத்தில் சிவப்பு * கட்டாயமாக தரப்பட வேண்டிய தகவல். அதில் முதலில் தங்கள் பெயர், அலைபேசி எண், முகவரி, ஊர், அஞ்சல் பின்கோடு, மின்னஞ்ச்சல் முதலியவற்றை நிரப்பிக் கொள்ளுங்கள்.
Period details என்பதில் from date மற்றும் to date இரண்டும் ஒன்று தான். பணம் செலுத்தும் நாளையே குறிப்பிடுங்கள்.
Department Details - துறை விவரங்கள் என்பதில்
District மாவட்டம் : PAO (chennai Secretariat)
Department receiving receipts- துறையின் பெயர் : 03501 - Personnel and Administrative Reforms Department - Secretariat
DDO name அலுவலக பெயர் : 44010053 - Finanacial Adviser and chief accounts officer - Tamilnadu State Information Commission Chennai
இவற்றை தேர்வு செய்து விட்டு, Generate OTP பட்டனை அழுத்துங்கள். இப்போது நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணுக்கு ஒரு OTP code வந்திருக்கும் அதை கொடுத்து பட்டனை அழுத்துங்கள். OTP validated successfully என்று திரையில் செய்தி காட்டும்.
அடுத்து Service Details பகுதியில்,
Receipt Type - வரவின் வகை : Right To Information (fees) rules 2005
Sub Type - துணை வகை : Right To Information (fees) rules 2005
இவற்றை கொடுத்ததுமே இப்போது தகவல் கட்டணங்களை செலுத்த வேண்டிய Acct Code கணக்கு தலைப்பு 007060118AA22739 என்பதை காட்டி விடும். இந்த கணக்கு தலைப்பு வந்து விட்டால் நீங்கள் சரியான தேர்வினை செய்துள்ளீர்கள். இப்போது செலுத்த வேண்டிய நகல்கள் கட்டணத்தை அடுத்த கட்டத்தில் உள்ளிடுங்கள்.
அடுத்து இருக்கும் துறையின் குறிப்பு எண் என்பதில் உங்களுக்கு பணம் செலுத்த வந்த கடிதம் எண் குறிப்பிடலாம். குறிப்புகள் பகுதியில் எந்த அலுவலகம் எதற்காக பணம் செலுத்துகிறீர்கள் என தெளிவாகும் படி சுருக்கமாக கொடுங்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால், கருவூலம் ஆன்லைன் பணம் செலுத்துதல் குறித்து இன்னமும் தெளிவான வழிகாட்டுதல் அரசு ஊழியர்களுக்கு தரப்படவில்லை. ஆதலால், இதை சந்தேகமாகவே பார்க்கிறார்கள். ஆனால், ரசீதில் வரும் Barcode Scan செய்வதின் மூலம், அல்லது challan number மூலமாக பணம் செலுத்திய விவரத்தை யாரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள முடியும். இருந்தாலும் வீண் சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க இந்த குறிப்பு பகுதியை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
payment details ல்
Payment Gateway : State bank, baroda bank, indian overseas bank இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொண்டு ( நான் State Bank of India தான் தேர்வு செய்தேன். வழக்கமாக அந்த வங்கியின் கிளையில் தான் கருவூலசெலுத்து சீட்டு மூலமாக பணம் கட்ட சொல்கிறார்கள் என்பதால்)
Payment Method : online என்பதை அடுத்து தேர்ந்தெடுங்கள்.
Submit கொடுங்கள். இப்போது வரும் பக்கத்தில் கீழே கடைசியில் other payment modes என்று இருப்பதில், vpa தேர்வு செய்யுங்கள். vpa code கேட்டு ஒரு கட்டம் வரும். அதில் உங்களின் PAYTM - PHONEPAY - GPAY - BHIM ஏதேனும் ஒன்றின் UPI ID யை குறிப்பிடுங்கள்.
அடுத்து இரண்டு முறை confirm - confirm பொத்தானை அழுத்த வேண்டி இருக்கும்.
இப்போது 3 நிமிடங்களுக்குள் உங்கள் அலைபேசியின் Paytm அல்லது Gpay அல்லது வேறு எந்த UPI id கொடுத்தீர்களோ அந்த application திறந்து பார்த்தால், SBImops என்ற பெயரில் பணம் செலுத்த காட்டும். உங்கள் upi pinகொடுத்து பணத்தை செலுத்திவிட்டால் போதும், கருவூல தளத்தில் Transaction Success என்று திரையில் காட்டும் அதுவரை ஒரு இருபது வினாடிகள் பொறுமையாக இருங்கள். அடுத்த பத்து வினாடிகளில் Download Challan என்று திரையில் காட்டும். அதை print செய்து தகவல் கட்டணத்திற்கான பணம் செலுத்திய ரசீதாக அனுப்பி வையுங்கள்.
QR code option கூட தேர்வு செய்யலாம். திரையில் தெரியும் QR Code உங்கள் அலைபேசியில் Paytm QR code scanner மூலமாக scan செய்து பணம் செலுத்த முடியும்.
இனி 4 ரூபாய் தகவல் கட்டணத்திற்கு நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு ஸ்டேட் பேங்க் தேடி வரிசையில் காத்திருந்து செலுத்த அவசியமில்லை.
நன்றி.
இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென கருதினால், இந்த பதிவின் இணைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment