கிராமத்தில் பலவித காரணங்களினால் பூமியில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. அவைகளை எல்லாம் கண்காணித்து வருவாய் மற்றும் சர்வே ஆவணங்கள் பதிவு செய்யும் பொருட்டு வட்ட அலுவலகத்தில் கீழ்க்கண்ட கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.
வட்ட கணக்கு எண்.4
தரிசு என்று அ.பதிவேட்டில் பதியப்பட்டுள்ள சர்வே புலங்களை நில ஒப்படை செய்யகோரி வரும் விண்ணப்பங்களை இந்த 4ம் எண்.பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தர்காஸ்து என்று பெயர். இது பசலி ஆண்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
வட்ட கணக்கு எண்.5
ஏதோ ஒரு காரணத்தினால் தன் நிலத்தின் மீது தனக்குள்ள உரிமையை தானமாக விட்டுவிடுகிறேன் என கோரி வரும் விண்ணப்பங்களை இந்த பதிவேட்டில் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.(உ.ம்) வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட நிலத்தின் உரிமையை விட்டுவிடல். இது பசலி ஆண்டில் பராமரிக்கப்பட வேண்டும்.
வட்ட கணக்கு எண்.6
இது ஏப்ரல்-மார்ச் முடிய பராமரிக்கப்படுகிறது. இது 6(1),6(2) என இரு பகுதிகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட வேண்டும். 6(1) சார்பதிவாளர்அலுவலகத்திலிருந்து பெறப்படும் பட்டா மாறுதல் நமுனாக்கள் நேரடியாக பதிந்து நடவடிக்கை தொடர வேண்டும். 6(2) நேரடியாக பட்டாதாரர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை பதிந்து நடவடிக்கை தொடர வேண்டும்.
வட்ட கணக்கு எண்.7
சர்வே புலத்தின் வகைப்பாடு மற்றும் தொடர்பாக இந்த பதிவேட்டில் பதியப்படுகிறது. இது பசலி ஆண்டில் பராமரிக்கப்பட வேண்டும். தன்பதிவேட்டில் வகை மாற்றத்திற்கு நடவடிக்கை எடுத்து உத்திரவு பெற்ற பின்தான் இந்த 7ம் எண்.பதிவேட்டில் குறித்து கிராம வட்ட கணக்குகளில் மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்ட கணக்கு எண்.8ஏ இது பசலி ஆண்டில் பராமரிக்க வேண்டும். இது ஒரு முக்கயமான பதிவேடாகும். 4,5,6,7 நேரடியாக பதிந்து நடவடிக்கை தொடரலாம் ஆனால் இதில் அப்படியும் முடியாது. முழுபுலம், முழு உட்பிரிவு சம்மந்தமாக 4,5,6,7ல் பதிந்து கிராம வட்டக் கணக்கில் உரிய மாறுதல் செய்து நடவடிக்கை தொடரலாம். ஆனால் இதில் அப்படி முடியாது. முழு புலம், முழு உட்பிரிவு சம்பந்தமாக 4,5,6,7ல் பதிந்து கிராம வட்டக் கணக்கில் உரிய மாறுதல் செய்து நடவடிக்கை தொடரலாம். ஆனால் புதிய புலம், புதிய உட்பிரிவு விஷயத்தில் அந்த உட்பிரிவு ஆவணங்களை 8ஏ-க்கு மாற்றி பதிந்து 8ஏ-எண் கொடுத்த பின்தான் கிராம, வட்ட கணக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 6ம் எண் பதிவேடு எண் மூலம் வரும் பட்டா மாற்றம் 8ஏ கோப்பினை தவிர இதர 8ஏ கோப்புக்களை கிராம, வட்ட கணக்குகளில் மாறுதல் செய்தபின் சம்பந்தப்பட்ட 4,5,7 பிரிவிலேயே திரும்பக் கொடுத்துவிட வேண்டும். இந்த 8ஏ கோப்பினை 4,5,7 பகுதிக்கு ஒன்றுடன் ஒன்று இணைத்து வைக்க வேண்டும். 6ம் எண் பதிவேடு மூலம் வரும் 8ஏ கோப்பினை 8ஏ பிரிவிலேயே முடிவு செய்ய வேண்டும். பிரதி மாதம் இப்பட்டியலில் குறிப்பிட்டுள்ள காலத்தினை நகல் எடுத்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment