Monday, December 6, 2021

நத்தம் நிலவரித் திட்டத்தில் தனி வட்டாட்சியரின் பணிகள்

 நத்தம் நில அளவை குறித்த கிராம ஆவணங்கள் நில அளவைக் பிரிவில் இருந்து பட்டா வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நத்தம் நிலவரித் திட்ட தனி வட்ட ஆட்சியரிடம் கீழ்க்கண்ட ஆவணங்கள் ஒப்படைக்க வேண்டும்.

  1. தூய நிலப்பதிவேடு(நத்தம் பகுதிக்கு மட்டும்)
  2. தூய நிலப்பதிவேடு (வேளாண்மை அல்லா பிறப்பயன்பாட்டிலுள்ள வேளாண்மை நிலங்களுக்கு)
  3. புல இடத்தைக் காணும் பணியில் தயார் செய்யப்பட்ட தோராய வரைபடம்
  4. ஒப்புகை தொடர்புப் பட்டியல்
  5. தோராய பரப்புப் பட்டியல்
  6. ஆக்கிரமண பட்டியல் மற்றும் வரைபடம்
  7. சார்-பதிவாளர் அலுவலக புள்ளி விவரப் பதிவேடு
  8. ஊராட்சி வீட்டு வரி பதிவேட்டின் நகல்
  9. புலப்படச் சுவடி

இவைகள் வரப்பெற்றவுடன் தனி வட்டாட்சியர் மேற்படி ஆவணங்களை தம்மிடம் பணிபுரியும் அலுவலர்களிடம் கொடுத்து எஸ்.எப்.10 என்ற முக்கியமான பதிவேட்டினை தயார் செய்து அலுவலர்களிடம் கொடுத்து எஸ்.எப்.10 என்ற முக்கியமான பதிவேட்டினை தயார் செய்து கொள்கிறார். எஸ்.எப்.10 ல் நத்தம், நஞ்சை, புஞ்சை வாரியாக மனையாகவுள்ள உட்பிரிவு செய்யப்பட்ட இனங்கள் வரிசையாக பதியப்பட்டு ஒரு பதிவேடாக தயாரிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு கிராமத்திற்கும் விசாரணை மேற்கொள்வதற்காக படிவம் 1,2ஐ விளம்பரம் செய்தும், பணியாளர்கள் நியமனம் செய்தும் அவர்கள் மூலம் அக்கிராமத்தில் உள்ள அனைத்து மனை பட்டாதாரர்களிடமும், சம்பந்தப்பட்ட மனை தனக்குரியது என்பதற்கு ஆதாரமாக பத்திர நகல், வீட்டுவரி ரசீது, மின் இணைப்பு ரசீது மற்றும் அனுபவதாரரின் மனுவுடன் இணைந்த வாக்குமூலம் பெறப்படுகிறது. பின் தனி வட்டாட்சியர் நிலவரி திட்ட முறைப்படி ஒவ்வொரு மனுதாரர் அனுபவம் செய்யும் இடத்தையும் பார்வையிட்டு தன் கருத்துக்களை எஸ்.எப்.10 பதிவு செய்கிறார்.(உட்பிரிவு எந்த நிலமாக உபயோகிக்கப்படுகிறது, அதாவது வீடு, காலிமனை, கொட்டகை போன்ற விவரங்கள்) மேலும், அப்பதிவேட்டிலேயே தன் உத்திரவினையும் பதிவு செய்கிறார். தனி நபர் அனுபவத்தில் இருப்பதை அவர் பெயருக்கு பட்டா வாங்கவும், பாதை, வாய்க்கால், குளம், கோவில், பள்ளிக்கூடம் போன்ற அரசுக்கு சொந்தமான இடங்கள் அதன் பெயரில் அரசு மனையாகவும் மாற்றி உத்திரவினை பதிவு செய்கிறார்.  தனி நபர் பெயரில் பட்டா வழங்கும் நத்தம் பகுதியை இரயத்து மனை என்றும், நஞ்சை மனை என்றும் வகைபாடு செய்து உத்திரவிடப்படுகிறது. பின் மனை பட்டாவாக வழங்க தகுதியான நபர்களுக்கு அகர வரிசைப்பட்டியல் தயார் செய்து தோராய சிட்டா முதலில் தயார் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் படிவம் 3 என்ற மனைப்பட்டா உத்திரவு வழங்கப்படுகிறது. பின்னர் படிவம் 4 என்ற தோராய பட்டா வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் சம்பந்தப்பட்ட மனைதாரரின் உட்பிரிவுக்கு தோராய வரைபடமும் வரையப்பட்டிருக்கும். தோராய பட்டா வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஆட்சேபனை ஏதும் இருந்தால் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டிய விவரமும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும். ஆட்சேபனை வரப்பெற்றால் அதன்மீது விசாரணை செய்து தக்க முடிவு எடுக்கப்படுகிறது. அத்துடன் அக்கிராமத்திற்கு நத்தம் மனைப் பதிவேடு என்ற நிலவரித்திட்ட அ-பதிவேடு, தூய அடங்கல் இரு நகல்களுடன் தூய சிட்டா இரு நகல்களும், தனி வட்டாட்சியர் பிரிவில் தயார் செய்யப்பட்டு நில அளவை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து இரு நகல்கள் புலப்படச் சுவடியும் பெற்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு பராமரிப்புக்காக வழங்கப்படுகிறது. அத்துடன் அந்த கிராம நத்தத்திலுள்ள அரசு இடங்களை எஸ்.எப்.7 என்ற பதிவேட்டில் பதிந்து அரசு நிலங்களிலுள்ள ஆக்கிரமணங்களை எஸ்.எப்.8லும் பதிந்து மரப்பட்டா பட்டியல் இட்டு பதிவேடு ஆகியவை தலா இரு நகல்களும், தயார் செய்து வட்ட ஆட்சியரிடம் பராமரிப்புக்காக வழங்கப்படுகிறன.

No comments:

Post a Comment