Tuesday, December 17, 2019

மத்திய அரசு - முக்கிய இணையதள முகவரிகள்

மத்திய அரசு - முக்கிய இணையதள முகவரிகள் :-
02.   www.pfdra.org.in  (National Pension Scheme NPS)
04.   www.mhrd.gov.in   (Ministry of Human Resource Development)
05.   www.nrega.nic.in        (Mahatma Gandhi  National Rural Employment Guarantee Act)
06.   www.nios.ac.in   (The National Institute of Open Schooling (NIOS) )
07.   www.nujs.edu  (National  University of Juridical Science (NUJS) )
08. www .khanacademy .org  (NGO Organisation )
09. www.pmgdisha.in (Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan)
10. www.cybergramyojana.in (CyberGram Yojana)
11. www.nielit.gov.in (National Institute of Electronics & Information Technology (NIELIT) )
12. 

Wednesday, December 11, 2019

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..
.
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம்.
அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு.
இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு.
ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்.
சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.
அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம்.
அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும்.
இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.
அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
பா.வெ.
ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp
திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp
சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp
www.tnreginet.net

நில ஆக்கிரமிப்பு சட்டம் - ஒரு அலசல் :-

நில ஆக்கிரமிப்பு சட்டம் - ஒரு அலசல் :-
அரசாங்கத்திற்கு உரிய நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டால் 7 வகையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
(1)- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905
(2)- தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
(3)தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் 2007
(4)- தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994
(5)- தமிழ்நாடு பொதுக் கட்டடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975
(6)- தமிழ்நாடு ஊராட்சி சட்டம் 1958
(7)- தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் சட்டம் 2001.
ஒருவர் அரசாங்க நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்பதற்காக அவரை அடாவடியாக காலி செய்ய அரசால் முடியாது. அதற்கென சில விதிகள் உள்ளது.
முதலில் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுப்பார்கள். அந்த நோட்டீஸில் அவர் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தின் அளவை குறிப்பிட்டிருப்பார்கள்.
இந்த நிலத்துக்கு ஏதாவது வரி விதிக்கப்படுகிறதா? என ஆராய்ந்து, வரி விதிக்கப்பட்டிருந்தால் முழு வரியையும் வசூல் செய்ய நடவடிக்கை எடுப்பார்கள்.
வரி விதிக்கப்படாத நிலமாக இருப்பின் அதற்குரிய தண்டத் தீர்வையையும் அதாவது அபராதத்துடன் வரியையும் சேர்த்து ஆக்கிரமிப்பாளரிடம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவுறுத்துவார்கள்.
ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள பயிர் விளைச்சல், உபகரணங்கள், கட்டுமானங்கள் ஆகியவற்றை ஏன் பறிமுதல் செய்யக்கூடாது என காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவார்கள்.
அரசாங்க நிலத்தில் கட்டடம், பயிர் விளைச்சல்கள் என எது செய்திருந்தாலும் தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டப்பிரிவு 6(1)ன் கீழ் பறிமுதல் செய்ய கால அளவு நிர்ணயம் செய்வார்கள்.
7 ம் நம்பர் நோட்டீஸ் என்று ஒன்று உண்டு. அதில் குறிப்பிட்ட தேதியில் உங்கள் நிலத்தில் உள்ள அத்தனை பொருட்களையும் பறிமுதல் செய்து அரசே கையகப்படுத்தும் என்று அறிவிப்பு தருவார்கள். அதற்குள் நீங்கள் காலி செய்து கொள்ளலாம்.
கண்டிப்பாக "இன்ன தேதிக்குள் " என்று தான் அறிவிப்பார்கள். ஒரு வாரத்திற்குள், பத்து நாளைக்குள் என்று கால அளவு நிர்ணயம் செய்ய மாட்டார்கள்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைக்கு உட்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் அந்த துறை அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க அதிகாரம் உடையவர்கள்.
தேவையான நேர்வுகளில் வருவாய் துறையை சார்ந்தவர்களின் ஒத்துழைப்பை நாடலாம். பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்கள். நகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் நகராட்சி ஆணையர், பேரூராட்சி ஆணையர் மூலம் நடவடிக்கை எடுப்பார்கள்.
பல பொது இடங்கள் ஆக்ரமணச் சட்டத்திற்கு உட்படாத நிலமாக இருக்கும். இப்படிப்பட்ட நேர்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் முன்னின்று நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றவர்.
நீங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை காலி செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்தவுடன் நீங்கள் அதற்கு உடனடியாக பதில் கொடுக்க வேண்டும். உங்கள் பதிலில் திருப்தி இல்லை என்றால் திரும்பவும் பிரிவு 6(1)ன்படி ஒரு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதனை எதிர்த்து நீங்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பிரிவு 10 ன் கீழ் மேல்முறையீட்டு செய்ய வேண்டும்.
அந்த மேல்முறையீட்டு மனுவில் வட்டாட்சியர் அல்லது துறை சம்மந்தப்பட்ட அலுவலரின் அறிவிப்புக்கு இடைக்கால தடை கோரி சேர்த்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
பின்னர் உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் இடைக்கால மனுவை காரணம் காட்டி தடை உத்தரவு பெற்று ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.
பா.வெ.

பான்கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பான்கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும். அதைத் தெரிந்து கொள்வோம். உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ACHPL456B என்று வைத்துக்கொள்வோம்.
முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும். 4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
C - Company
P - Person
H - HUF(Hindu Undivided Family)
F - Firm
A - Association of Persons (AOP)
T - AOP (Trust)
B - Body of Individuals (BOI)
L - Local Authority
J - Artificial Juridical Person
G - Government
5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.
அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.
மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம். எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.
பா.வெ.

தமிழ்நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்

“தமிழ்நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்
குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 304-ல் குறிப்பிடப்பட்டுள்ளது....
அதாவது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் வழக்கறிஞர் வைத்து தன் வழக்கை வாதாடுவதற்கு உரிமை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதன் நோக்கம்தான் இலவச சட்டத்தின் அம்சமாகும்...
தனது குடிமக்களுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசின் முக்கிய கடமை...
நீதியைப் பெறுவதற்காக பல குடிமக்களுக்கு வழக்கறிஞரின் உதவி தேவைப்படுகிறது...
ஒரு நாளைக்கு ஐந்து லட்சம் கட்டணம் பெறும் வழக்கறிஞர்கள் முதல் ஐம்பது ரூபாய் வாங்கும் வழக்கறிஞர்கள் வரை இருக்கிறார்கள்...
ஆனால், அந்த ஐம்பது ரூபாயைக் கூட கொடுக்க முடியாத மக்களும் நமது நாட்டில் உண்டு...
அவர்களுக்கும், நீதியை அளிப்பதற்காகவே, அரசு இலவச சட்ட உதவியை அளிக்கிறது...
அதாவது, வழக்கறிஞர் கட்டணத்தை தானே செலுத்த வேண்டிய கட்டாயம்,..
மக்கள் நலம் பேணும் அரசிற்கு உண்டு.
வழக்கறிஞர்கள் வைத்து வழக்கு நடத்த முடியாத ஏழை எளியவர்களுக்கு அரசாங்கமே வழக்கறிஞர் வைத்து வழக்கு நடத்திக் கொள்வதற்கு வழிவகைகள் அந்த சட்டமே வழி செய்து கொடுக்கிறது...
இதற்குண்டான செலவுகளை அரசாங்கமே இவ்வழக்கறிஞர்களுக்கு கொடுக்கிறது...
இதுதான் இலவச சட்ட உதவி மையங்களின் நோக்கம்...
ஆனால் அரசாங்கம் தனக்கு சரியாக கட்டணம் கொடுக்க காலதாமதம் ஆகும் என்று எண்ணி சில வழக்கறிஞர்கள் வழக்கை நடத்த முன்வர மாட்டார்கள் என்பதும் நடைமுறை உண்மை...
ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச சட்ட உதவி மையம் இயங்கிக் கொண்டிருக்கின்றது...
அனைத்து மாநிலத் தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்கள் மற்றும் எங்கெல்லாம் நீதிமன்றங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் சட்ட உதவிக் குழுக்கள் செயல்படுகின்றன...
வசதியற்றவர்கள் தம் வழக்குகளை நடத்த அரசு தரப்பில் வழக்கறிஞர் வைத்துத் தரவேண்டும் என விருப்பப்பட்டால் இந்த இலவச சட்ட மையத்திற்கு இது குறித்து மனு கொடுக்க வேண்டும்...
உங்கள் வழக்குகளை அரசுத்தரப்பில் நடத்தித் தர உடனடி நடவடிக்கை எடுத்துத் தரப்படும்...
பாதிக்கப்பட்ட ஏழ்மையான முதியவர்களும், பெண்களுக்கான வழக்கு, ஜீவனாம்ச வழக்கு, வரதட்சணை வழக்கு, நிலம் பங்கு பிரிப்பு வழக்கு போன்றவைகளை எந்த ஒரு செலவும் இல்லாமல் இலவச சட்ட உதவி மையம் மூலமாக செய்துமுடித்து பயன்பெறலாம்...
மேலும் பொது மக்கள் சட்ட உதவிகளை கேட்டு அணுகும்போது, அவர்கள் விரும்பும், அவர்கள் பிரச்சனை தொடர்பான சட்டத்துறையில் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை தேர்வு செய்து கொள்ளவும் தமிழ்நாடு சட்டஉதவி மற்றும் ஆலோசனைக் கழகம் வாய்ப்பளிக்கிறது...
பணம் உள்ளவர்களால் மட்டுமே நீதித்துறையில் வழக்காட முடியும் என்ற நிலையை மாற்றி எழை எளிய மக்களும் இந்த இலவச சட்ட உதவி மையத்தின் வாயிலாக நீதிமன்றங்களை அணுக வேண்டும் என்பதே சட்ட உதவி மையங்களின் உன்னத நோக்கம்...
பல வழக்கறிஞர்கள் தங்களின் சொந்த செலவிலும் குறைந்த கட்டணத்திலும் ஏழைகளுக்கு வழக்காடுகின்றனர்...
சில ஆண்டுகளுக்கு முன் தனியார் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் செயல்பட்டன..
ஆனால் அவைகளில் சில அமைப்புகள் பணத்திற்காக கட்டப் பஞ்சாயத்து நடத்தும் மையங்களாக செயல்பட்டதால் நீதிமன்றம் தனியார் சட்ட உதவி அமைப்புகளுக்குத் தடை விதித்தது...
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சட்ட உதவிக்கு வகை செய்கின்ற பிரிவு சேர்க்கப்படுவதற்கு முன்னரே தமிழகத்தில் சட்ட உதவிக்கான இயக்கம் ஒரு முன்னோடி இயக்கமாக உருவானது...
19.11.1976 அன்று “தமிழ்நாடு சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம்’ தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
சாமானிய ஏழை எளிய மக்கள்- நீதி மன்றத்தையும் சட்ட நடவடிக்கைகளையும் எண்ணி அஞ்சிடாமல் தங்களுக்குத் தேவையான அனைத்து சட்ட ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் இலவச சட்ட உதவி மையங்களை மக்கள் நாடி பயன் பெற வேண்டும்.
பா.வெ...

சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?

சொத்தின் அசல்பத்திரம் தொலைந்துபோனால், அந்த சொத்து-ஐ எளிதாக விற்பது எப்ப‍டி?
சொத்துப்பத்திரத்தின்
அசல் (Original)ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில்இருக்கும் காவல்நிலையத்தில், தொலைந்த பத்திரங்களின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒருபுகார் கொடுக்க வேண்டும்.
அதில் அந்த பத்திரங்களை கண்டு பிடித்துத் தரும்படி கேட்க வேண்டும்.
காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.
காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டு பிடிக்க முடியவில்லை (Non Traceable Certificate) என சான்றிதழ் தந்து விடுவார்கள்.
அதனைப் பெற்றுக்கொண்டவுடன், அதைக் காண்பித்து தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர் மூலமாக இரண்டு பிரபலமான நாளிதழ்களில் (ஒரு ஆங்கில நாளிதழ், ஒரு தமிழ் நாளிதழ்) பத்திரங்கள் காண வில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டெடுப்பவர் வழக்கறிஞரிடம் தரவேண்டும் என்றும் விளம்பரம் செய்ய வேண்டும்.
தொலைந்த சொத்து பத்திரங்களை யாராவது கண்டெடுத்து, வழக்கறிஞ ரிடம் தந்தால், நாம் அந்த ஆவணங்களை பெற்றுக் கொள்ளலாம்.
அவ்வா று கிடைக்கவில்லை எனில், பத்திரப் பதிவு அலுவலகங்களில் இருந்து பெறப்பட்ட பத்திரங்களின் நகலை (Certified Copies of the Documents) காணாமல் போன அசல் (Original) ஆவணங்களுக்கு பதிலாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
ஆவணங்களை தொலைத்தவர், அவருடைய மனைவி அல்லது மகன் எவருக்காவது அந்த சொத்தினை தான செட்டில்மென்ட் (Settlement Deed) மூலம் எழுதிக் கொடுக்கலாம்.
இதற்கான செலவு என்பது சொத்தின் மதிப்பு 25,00,000- ரூபாய்க்குமேல் இருப்பின் ரூ.33,000வரை செலவாகும் .
அந்த செட்டில்மென்ட் பத்திரத்தில், அந்தசொத்தினை வாங்கிய விவரம், சொத்தின் ஆவணங்கள் விவரம், அவை காணாமல் போன விவரம், காவல் நிலையத்தில் புகார் கொடுத்த விவரம், வழக்கறிஞர் மூலம் பத்தி ரிகைகளில் விளம்பரம் அளித்த விவரம் ஆகியவற்றை முறையாக எழுதிப் பதிவு செய்யலாம்.
இந்த செட்டில்மென்ட் பத்திரத்தை கொண்டு, வீடாக இருந்தால் பட்டா, வீட்டு வரி ரசீது, மின் வாரிய ரசீது ஆகியவற்றை சொத்து செட்டில்மென்ட் செய்தவர் மேல்மாற்றம் செய்துவிடலாம்.
இதனால் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தில் உங்கள் புகைப்படத்துடன், தற்போதைய விலாசம், அதற்குறிய சான்றுகள் ஆகியவை மூலம் நீங்கள்தான் அந்த சொத்தின் உரிமை யாளர் எனவும், நீங்கள் அதை மனைவிக்கோ, மகனுக்கோ செட்டில் மென்ட் செய்துவிட்டீர்கள் எனவும் வில்லங்க சான்றிதழ் மூலம் தெரிய வரும்.
பின்பு உங்கள் மனைவியோ அல்லது மகனோ இந்த சொத்தினை மேற்கூறிய ஆவணங்களைக் காட்டி சுலபமாக விற்கலாம்.
தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ..

வக்கீல் நோட்டீஸ் அனுப்ப வழக்கறிஞர் தேவையில்லை

வக்கீல் நோட்டீஸ்
அனுப்ப வழக்கறிஞர் தேவையில்லை...
சட்டப்படிஅறிவிப்பு
வழக்கறிவிப்பு
சட்டபூர்வ அறிவிப்பு
லீகல் நோட்டீஸ்
நோட்டீஸ்
அனுப்ப வழக்கறிஞர் உதவி தேவையில்லை..
நீங்களே அதை அனுப்பலாம்
அதற்கு தேவை
வழக்கு பற்றிய தேவையான விபரங்களை சுருக்கமாக தெளிவாக தயாரித்து கொண்டு
எதிர்தரப்பிடம் நீங்கள் கோரும் பரிகாரம், தீர்வு பற்றி தெளிவாக குறிப்பிட்டு அனுப வேண்டும்..
மிரட்டலாக இருக்க கூடாது
சமரசத்திற்க்கு அழைக்க கூடிய வாய்ப்பை வழங்கும் விசயம் இருக்க வேண்டும்..
(நண்பருக்கு கடிதம் எழுதுவது போல் தான் சாதாரமாக ஆனால் சுருக்கமாக் தேவைப்படின் விரிவாக எழுத வேண்டும்)
வழக்கு போட்டால் வழக்கில் உங்களை பாதிக்குகின்ற உங்களுக்கு எதிரான தகவல்களை தவிர்க்க வேண்டும்..
கடித தலைப்பில் "சட்டப்படி வழக்கறிவிப்பு அல்லது சட்டபூர்வ அறிவிப்பு அல்லது லீகல் நோட்டீஸ் " என்று ஏதாவது குறிப்பிடுவது பயண்தரும்..
அஞ்சல் அவருக்கு போய் சேர்ந்தமைக்கு ஆதராவாக ஒப்புகை கிடைக்கும் வகையில் ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அல்லது விரைவு அஞ்சலில் அனுப்புவது பாதுகாப்பானது..
ஒப்புகை சீட்டு வழக்கிற்கு அவசியம் தேவை..
இமெயில் அனுப்பலாம் சரியானதுதான் சட்ட பூர்வ தடையேதும் இல்லை பல வழக்குக்ளில் நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது ஆனால் அதை அவர் பெறவில்லை பார்க்க வில்லை என்னடனுடைய மின்னஞ்சல் முகவரி அது இல்லை என்று வாதம் செய்து தப்பிக்க வழியுள்ளது..
தனியார் கூரியரில் அனுப்பலாம் எதிர்தரப்பு பெற்றமைக்கு உரிய ஆதாரத்தை பெற்று வைத்துக்கொள்ள வேண்டும்..
மேலும் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்..
தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ..

வீடு, நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டிய விவரங்கள்:-

வீடு, நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி அறிய வேண்டிய விவரங்கள்:-
1.அறிமுகம்
2.புல எண் (Survey Number)
3.பதிவுத்துறை
4.வருவாய்த்துறை
5.பதிவு செய்யும் முறை
1.அறிமுகம்.
நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.
2.புல எண் (Survey Number)
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்..
நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
A.பதிவுத்துறை, B.வருவாய்த்துறை
A.பதிவுத்துறை:-
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office) அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
B.வருவாய்த்துறை:-
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
1.பட்டா (Patta)
2.சிட்டா (Chitta)
3.அடங்கல் (Adangal)
4.அ' பதிவேடு ('A' Register)
5.நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
1.பட்டா (Patta)
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
பட்டா எண்
உரிமையாளர் பெயர்
புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை
2.சிட்டா (Chitta)
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
3.அடங்கல் (Adangal)
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
4.அ' பதிவேடு ('A' Register)
இப்பதிவேட்டில் பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision) ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு, பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.
5.நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .
கிரயப் பத்திரம் (Sale Deed)
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
எவ்வளவு அளவு எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
சொத்து விவரம் சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.
கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
பதிவு எண் மற்றும் வருடம்
சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
மொத்தம் எத்தனை பக்கங்கள்
மொத்தம் எத்தனை தாள்கள்
தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர். 01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது.
18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம் இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது.
அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.
நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.
சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.
பதிவு செய்யும் முறை
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில் அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது மைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.
இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம்.
அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.
பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.
முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையெழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.
சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும்.
புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.
பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.
பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க வேண்டும்.
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.
Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும்.
அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்...
மேலும் கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு சம்மந்தமான நீதிமன்ற சட்ட சேவைக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்..
தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ..

ஆன்லைனில் லைசென்ஸ் பெறுவது எப்படி...

ஆன்லைனில் லைசென்ஸ் பெறுவது எப்படி...
இணையத்தின் மூலமாக எத்தனையோ வேலைகளை வீட்டில் இருந்தபடியே நம்மால் சிரமம் இல்லாமல் செய்ய முடிகிறது. வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக நாம் ஓட்டுநர் உரிமம் பெறவும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் டிஜிலாக்கர் (DigiLocker). பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள்.
டிஜிலாக்கர் என்றால் என்ன?
நமது மத்திய அரசாங்கம் நாம் ஒவ்வொருவருடைய சான்றிதழ்கள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும், தேவைப்படுகின்ற போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ள லாக்கரின் பெயர்தான் டிஜிலாக்கர். இதனை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஆதார் எண்ணும், செல்போன் எண்ணும் சொந்தமாக இருக்க வேண்டும். அவைகளை பயன்படுத்திதான் இந்த லாக்கரை நாம் பெறவும், பயன்படுத்தவும் முடியும். ஒவ்வொருவருக்கும் 1 GB சேமிப்பகமானது டிஜிலாக்கரில் வழங்கப்படுகிறது.
டிஜிலாக்கரை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
முதலில் https://digilocker.gov.in/ இணையதளத்தினுள் சென்று உங்களது பெயர் மற்றும் ஆதார் எண்ணை அதற்குரிய இடத்தில் டைப் செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password அனுப்பி வைக்கப்படும்.
அதனை பயன்படுத்தி நீங்கள் ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு ஒரு அக்கவுண்டுதான் ஓப்பன் செய்ய முடியும். உங்களுக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் கூகுளில் அக்கவுண்ட் இருந்தால் அதனை வைத்தும் உங்களது பாஸ்வேர்டை அமைத்துக் கொள்ளலாம்.
தற்போது நமது நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதற்கு சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது, டிஜிலாகர் உடன்இணைந்து வழிவகுத்துள்ளது.
டிஜிலாக்கரின் பயனர்கள் தங்கள் மொபைல்சாதனங்களிலும், கணினிகளிலும் ஆர்.சி. (RC)இன் டிஜிட்டல் வடிவத்தைஎளிதாக தற்போது அணுகமுடியும்.
டிஜிட்டல் ஓட்டுனர் உரிமத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
டிஜிலாக்கர் படி, டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம், அசல் ஆவணங்களைப்பயன்படுத்துவதைக் குறைக்கும்.
⧭குடிமக்கள் தரவு மூலத்தில் (Database) இருந்து நேரடியாகநம்பகமான டிஜிட்டல் ஓட்டுநர் உரிமையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை முகவரியின் அடையாளமாகவும்,அடையாளத்தின் ஆதாரமாகவும் மற்ற துறைகளோடு பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் உங்களது சிரமங்கள் குறையும்.
டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் ஆவணத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன்செய்வதன் மூலம் அல்லது மொபைலில் டிஜிலாகர் பயன்பாட்டில் உள்ளQR ஸ்கேன் வசதி மூலம் டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸின் நம்பகத்தன்மையை சோதித்துப்பார்க்க முடியும்.
டிஜிலாக்கர் மூலம் டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் தங்கள் ஆதார் அட்டை எண்ணை டிஜிலாகர் கணக்குடன் நீங்கள் இணைக்க வேண்டும்.
⧭அது முடிந்தவுடன், அவர்கள் Pull Partner Documents பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
வழங்குபவர் & ஆவண வகைகளைத் தேர்ந்தெடுத்து ஆவணம்தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.
ஆவணம் தரவுத்தளத்தில் (Database) இருந்து பெறப்படும்.
⧭இப்போது டிஜிட்டல் ஆவணத்திற்கு ஒரு "நிரந்தர இணைப்பு" (URL)கிடைக்கும்.
இதனை,"Issued Documents" பிரிவின் கீழ் சேமித்துக் கொள்ள வேண்டும்.
தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய
தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்.

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்.
----------------------------------------------------------------------------------
வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன்
பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.
சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப்
பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?
============================================
பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
•விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life
Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
-------------------------------------------
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ்
இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில்
ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி
அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் -
===========================================
தமிழ்நாட்டில் வசிப்பதற்கு
ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/
வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட
நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்
========
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை:
-----------------------------
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00
மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை
ஆணையரகம், சென்னை-600 002 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
------------------------------------------------------------------------
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும்
எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை
உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
------------------------
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது?
================
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
இது போன்ற
நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி
அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
-------------------------------------
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852
0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச்
சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை
தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
============================================
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள்
பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்,
பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்
தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ.

அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்

*அரசு அலுவலகங்களில் அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கும் வழி முறைகள்*

அரசு ஆணை எண்: 114
அரசு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களை கையாள வேண்டிய வழிமுறைகளை பற்றி 2.8.2006 தேதியிட்ட பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையினரின் அரசாணை எண்.114, 66, 89, பற்றி தெரிந்து கொள்வோம்.
அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கடிதம் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் உடனே வாங்கி கொண்டதற்கான ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) மனுதாரருக்கு கொடுக்க வேண்டும்.
அரசு அலுவலர் கொடுக்கும் ஏற்பு ரசீதில் மனுதாரரின் பெயர், முகவரி, யாருக்கு என்ன விசயமாக அனுப்பபட்டுள்ளது என்ற விவரமும், கடிதம் வாங்கும் அலுவலரின் கையெழுத்தும், அவர் வகிக்கும் பதவியின் பெயரும், அலுவலக முத்திரையும் தேதியுடன் இருக்க வேண்டும்.
தபால் மூலம் கடிதம் அனுப்பும் போதும் அதற்கான ஏற்பு ரசீது மனுதாரர்க்கு அதிக பட்சம் 3 நாட்களுக்குள் அனுப்பி வைக்கபட வேண்டும்.
அனுப்பும் புகாரின் மீது அதிகபட்சம் 60 தினங்களுக்குள் நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க 60 தினத்திற்கு மேல் ஆகும் என்றால் இடைக்கால பதிலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையும், மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் அதற்கான காரணத்தை எழுத்து மூலம் 60 தின்ங்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
மேற்கண்ட வழிமுறைகள்படி கடிதங்களை கையாள அரசு, ஆணை 114 வலியுறுத்துகிறது.
[அரசு ஆணை 114 என்பது அரசு ஆணை 66(23.02.1983) அரசு ஆணை 89(13/05/1999) மற்றும் மத்திய அரசு ஆணை 13013/1/2006(5.5.2006) ஆகியவற்றின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது] எனவே, இனி நீங்கள் அரசு அலுவலகங்களுக்கு கடிதம் கொடுத்தால் அரசாணை எண்கள்: 114, 66, 89-ன் படி ஏற்பு ரசீது கேட்டு வாங்குங்கள்.
இதுவே நமக்கு இறுதி நிவாரணம் கிடைக்க வழி வகுக்கும். அரசு அலுவலகங்களில் அரசாணைப்படி ஏற்பு ரசீது கொடுக்க மறுத்தால், அந்த அதிகாரியிடம் ஏற்பு ரசீது கொடுக்க இயலாது என கூறுவதனை எழுதி வாங்குங்கள் அல்லது அவரது கூற்றினை பதிவு செய்து கொண்டு மாவட்ட அல்லது மாநில அளவிலான துறை சார்ந்த மேலதிகாரிகளுக்கு புகாராக அனுப்புங்கள்.

தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ.

ஆன்லைனில் லைசென்ஸ் பெறுவது எப்படி...

ஆன்லைனில் லைசென்ஸ் பெறுவது எப்படி...
இணையத்தின் மூலமாக எத்தனையோ வேலைகளை வீட்டில் இருந்தபடியே நம்மால் சிரமம் இல்லாமல் செய்ய முடிகிறது. வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக நாம் ஓட்டுநர் உரிமம் பெறவும் வழிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் டிஜிலாக்கர் (DigiLocker). பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். வாருங்கள்.
டிஜிலாக்கர் என்றால் என்ன?
நமது மத்திய அரசாங்கம் நாம் ஒவ்வொருவருடைய சான்றிதழ்கள், ஆவணங்கள், போட்டோக்கள் ஆகியவற்றை சேமித்து வைத்துக் கொள்ளவும், தேவைப்படுகின்ற போது அதனை எடுத்து பயன்படுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்துள்ள லாக்கரின் பெயர்தான் டிஜிலாக்கர். இதனை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஆதார் எண்ணும், செல்போன் எண்ணும் சொந்தமாக இருக்க வேண்டும். அவைகளை பயன்படுத்திதான் இந்த லாக்கரை நாம் பெறவும், பயன்படுத்தவும் முடியும். ஒவ்வொருவருக்கும் 1 GB சேமிப்பகமானது டிஜிலாக்கரில் வழங்கப்படுகிறது.
டிஜிலாக்கரை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்?
முதலில் https://digilocker.gov.in/ இணையதளத்தினுள் சென்று உங்களது பெயர் மற்றும் ஆதார் எண்ணை அதற்குரிய இடத்தில் டைப் செய்ய வேண்டும். ஆதார் எண்ணுடன் தாங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள உங்களது செல்போன் எண்ணுக்கு ஒரு One Time Password அனுப்பி வைக்கப்படும்.
அதனை பயன்படுத்தி நீங்கள் ஒரு அக்கவுண்டை உருவாக்கிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு ஒரு அக்கவுண்டுதான் ஓப்பன் செய்ய முடியும். உங்களுக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் கூகுளில் அக்கவுண்ட் இருந்தால் அதனை வைத்தும் உங்களது பாஸ்வேர்டை அமைத்துக் கொள்ளலாம்.
தற்போது நமது நாட்டு மக்களுக்கு டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் கிடைப்பதற்கு சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது, டிஜிலாகர் உடன்இணைந்து வழிவகுத்துள்ளது.
டிஜிலாக்கரின் பயனர்கள் தங்கள் மொபைல்சாதனங்களிலும், கணினிகளிலும் ஆர்.சி. (RC)இன் டிஜிட்டல் வடிவத்தைஎளிதாக தற்போது அணுகமுடியும்.
டிஜிட்டல் ஓட்டுனர் உரிமத்தினால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
டிஜிலாக்கர் படி, டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம், அசல் ஆவணங்களைப்பயன்படுத்துவதைக் குறைக்கும்.
⧭குடிமக்கள் தரவு மூலத்தில் (Database) இருந்து நேரடியாகநம்பகமான டிஜிட்டல் ஓட்டுநர் உரிமையைப் பகிர்ந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை முகவரியின் அடையாளமாகவும்,அடையாளத்தின் ஆதாரமாகவும் மற்ற துறைகளோடு பகிர்ந்து கொள்ள முடியும். இதனால் உங்களது சிரமங்கள் குறையும்.
டிஜிட்டல் ஓட்டுனர் உரிமம் ஆவணத்தில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன்செய்வதன் மூலம் அல்லது மொபைலில் டிஜிலாகர் பயன்பாட்டில் உள்ளQR ஸ்கேன் வசதி மூலம் டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸின் நம்பகத்தன்மையை சோதித்துப்பார்க்க முடியும்.
டிஜிலாக்கர் மூலம் டிஜிட்டல் டிரைவிங் லைசன்ஸை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் தங்கள் ஆதார் அட்டை எண்ணை டிஜிலாகர் கணக்குடன் நீங்கள் இணைக்க வேண்டும்.
⧭அது முடிந்தவுடன், அவர்கள் Pull Partner Documents பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.
வழங்குபவர் & ஆவண வகைகளைத் தேர்ந்தெடுத்து ஆவணம்தொடர்பான விவரங்களை உள்ளிட வேண்டும்.
ஆவணம் தரவுத்தளத்தில் (Database) இருந்து பெறப்படும்.
⧭இப்போது டிஜிட்டல் ஆவணத்திற்கு ஒரு "நிரந்தர இணைப்பு" (URL)கிடைக்கும்.
இதனை,"Issued Documents" பிரிவின் கீழ் சேமித்துக் கொள்ள வேண்டும்.
தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய
தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ.

ரேஷன் கார்டு கிடைக்க தாமதமானால், என்ன செய்வது ? தகவல் சட்டத்தை பயன்படுத்தி எப்படி கேட்கலாம்?

ரேஷன் கார்டு கிடைக்க தாமதமானால், என்ன செய்வது ? தகவல் சட்டத்தை பயன்படுத்தி எப்படி கேட்கலாம்?
=========================================
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெரும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.
ஆர்.டி.ஐ. சட்டத்தில் தகவலை கேட்டு வாங்க எதுவாக ஒவ்வொரு துறையிலும் பொது தகவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் யார் என்ற விவரம் அந்தந்த அலுவகங்களில் தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
அந்தந்த துரையின் இணைய தளம் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம்.
பொது தகவல் அதிகாரியின் முகவரி குறித்து நம்மால் அறிய முடியவில்லை என்றால், மாநில அரசாக இருந்தால், நாம் தகவலை கேட்கும் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியருக்கும், மத்திய அரசாக இருந்தால், தலைமை தபால் அலுவலருக்கும் மனுவை அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பம் செய்வதற்கு ஒரு வெள்ளை காகிதம் போதும். எழுதுவதை தெளிவாக எழுதினால் போதும்.
ஒரு மனுவில் எத்தனை தகவல்களை கேட்க முடியுமோ, அத்தனை தகவல்களையும் கேட்கலாம். கேள்வி நீளமாக இருந்தால், ஒரே கேள்வியோடு மனுவை முடித்து கொள்வது நல்லது.
மாநில அரசின் கீழ் வரும் துறைகளுக்கு டிமாண்ட் டிராப்ட், பேங்கர்ஸ் செக், அஞ்சலக தபால் ஆணை, கோர்ட் ஸ்டாம்புகள், வரையறுக்கப்பட்ட வங்கி கணக்குகள் மூலம் பணத்தை செலுத்தலாம்.
மத்திய அரசின் கீழ் வரும் துறைகளுக்கு, மத்திய அஞ்சலக துறை, “Accounts officer” என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட், கேட்பு காசோலை, அஞ்சலக தபால் ஆணை எடுத்து அனுப்பலாம். முதன்முறை விண்ணப்பம் அனுப்ப, கட்டணம் 1௦ ரூபாய்.
நாம் விண்ணப்பித்து பெறும் தகவல் நகலின் பக்கம் ஒவ்வொன்றுக்கும் கட்டணமாக 2 ரூபாய் செலுத்த வேண்டும்.
குறுந்தகடுகள் வழியில் தகவலை பெற கட்டணம் 5௦ ரூபாய். வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு எந்த வித கட்டணமும் இல்லை. ஆனால், இதற்கான சான்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
நீங்கள் தயார் செய்த விண்ணப்ப மனுவை நகல் எடுத்து வைத்து கொள்ள வேண்டும். மேலும் தபாலை அனுப்பும்போது, பதிவு தபாலில் ஒப்புகை சீட்டு RPAD அனுப்ப வேண்டும்.
தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?
தகவல் அளிப்பதில் இருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை, தகவல் பெரும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவை இல்லை.
நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், லஞ்ச ஒழிப்பு துரையின் தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை.
தகவல் அறியும் உரிமை சட்ட மாதிரி விண்ணப்பம் இதோ உங்களுக்காக....
=================================
எடுத்துக்காட்டாக குடும்ப அட்டை பெறுவதற்கான விவரத்தை கேட்பது எப்படி?
===========================================
அனுப்புனர் :
தங்கள் முழு முகவரி
பெறுனர் :
பொது தகவல் அலுவலர் அவர்கள்,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவகம்,
மாவட்டம்.
வணக்கம்,
பொருள் : தகவல் பெரும் உரிமை சட்டம் 2௦௦5 ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக...
1. புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
2. குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவ்வளவு என்று தெரிவிக்கவும்.
3. குடும்ப அட்டை பெற விண்ணப்பிகும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
4. குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால், எத்தனை நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் ? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்றால், அதற்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
5. குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவகத்திற்கு வந்திருப்பதை வின்னபதாரருக்கு எவ்வாறு தெரிவிக்கப்படும் (எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.
6. குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.
7. ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்து விட்டால், (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்ப அட்டை பெற எந்த அலுவகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் ? அப்படி விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.
8. ஒரு ஆண் அல்லது பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையில் இருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் ?
9. ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால், எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும் ? அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.
10. எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
11. நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றல் எந்த பிரிவின் கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.
12. எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமாரத்தின் அடிப்படையில் உள்ளனவா அல்லது மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.
மேலும் உங்கள் பகுதியிலுள்ள ரேஷன் கடையின் கார்டுதாரர்கள் எத்தனை பேர்?
பருப்பு, சர்க்கரை எத்தனை மூட்டைகள் வந்துள்ளன என்பதையும், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்து தகவலை அறிந்து கொள்ளலாம்.
இது போன்ற நீங்கள் எந்த துறையில் இருந்து தகவல்களை பெற விரும்புகிறீர்களோ, அங்கு நீங்கள் விரும்பும் கேள்விகளை கேட்கலாம்.
உங்களுடைய விண்ணப்பத்திற்கு 3௦ நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். தகவல் கிடைக்காத பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறையில் உள்ள மேல்முறையீட்டு அலுவலரிடம், நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்த நகல், மனுவை பெற்று கொண்டதற்கான ஒப்புகை சீட்டுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேல்முறையீட்டு அலுவலரிடம் பதில் கிடைக்காத பட்சத்தில் மாநில தகவல் ஆணையத்திடம், எனக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளிக்கவில்லை என புகார் செய்யலாம்.
உங்களுடைய ஆவணங்களை ஆய்வு செய்து, அவை உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் வழக்கு பதிவு செய்து தகவல் அளிக்காத அலுவலருக்கு தண்டனை விதிக்கலாம்.
தங்களுக்கு மேலும் சட்டம் பற்றிய தகவல்கள் மற்றும் விவரங்கள் அறிய எனது பக்கமான
"சட்டம் பற்றிய விளக்கம் மற்றும் ஆலோசனைகள்"
https://www.facebook.com/Rbvadvocate/
பக்கத்தை லைக் செய்யவும்
பா.வெ.