பரோலுக்கான விதிமுறைகள்!
கர்நாடக மாநிலத்தில் சிறையில் இருக்கும் ஒருவர் பரோலில் வெளியே செல்ல வேண்டுமானால், கடந்த 2015-ம் ஆண்டுவரை டெபாசிட் தொகையாக 6,000 ரூபாயும், இருநபர் ஜாமீனும் அளிக்கப்பட வேண்டும்.
ஆனால், தற்போது பரோலில் வெளியே வருபவர்கள் டெபாசிட் தொகையாக 1,000 ரூபாயும், ஒருநபர் ஜாமீனும் போதுமானது.
கர்நாடகச் சிறைகள் சட்டம் 1963 பிரிவு 56-ன் கீழ், மாநில அரசோ, மாநில அரசாங்கத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்கள் மூலமாகவோ பரோல் அளிக்கப்படலாம்.
கர்நாடகச் சிறைகள் சட்டம் 1963 பிரிவு 58-ன் கீழ் பரோல் வழங்கப்பட்ட காலத்துக்குள் வரவில்லை என்றால் 2 வருடம் சிறைத் தண்டனை அல்லது அபராதம், இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும்.
பா.வெ.
No comments:
Post a Comment