*வழக்கறிஞர் இல்லாமல், நீங்களே வழக்கு தாக்கல் செய்வது எப்படி?*
*பொது நல வழக்கு போடுவது எப்படி ?*
பொதுவாக இரண்டு இடங்களில் பொது நல வழக்கு போடலாம். ஒன்று, கீழ் நீதிமன்றம். இது, மாவட்ட நீதிமன்றம் ஆகும். இரண்டு, உயர்நீதிமன்றம். இப்போது, கீழ் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு
போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
போடுவது எப்படி என்று பார்க்கலாம்.
பொதுவாக சார்பு நீதிமன்றத்திலேயே, பொது நல வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. பத்து நபர்கள் இணைந்து வழக்கு போடுவது நல்லது. இதற்கு முதலில், லீவ் மனு போட வேண்டும். இது, வழக்குடன் இணைந்தது. முதலில் சிவில் வழக்கு போட, பிராது தயாரிக்க வேண்டும். முதலில், நீதிமன்றத்தின் பெயர், அதன் கீழ், ஊர், அதன் கீழ், முதலேற்பு வழக்கு எண் என போட்டு, இடம் விட்டு, எந்த வருடம் தாக்கல் செய்கிறோமோ, அந்த வருடத்தை போட வேண்டும். அதன் பின்பு, பத்து பேர் வழக்கு போடுவதாக இருந்தால் அவர்கள் பெயரை, ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, வாதிகள் என்று காண்பியுங்கள். அதன் பின்பு, எதிரிடை என்று போட்டு, எதிர் பார்ட்டி நபர்கள் பெயரை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதுங்கள். அதற்கு நேராக, பிரதிவாதிகள் என்று காண்பியுங்கள். இதன் பெயர், short cause title எனப்படும்.சிவில் வழக்கில், பிராதை, ஆர்டர் 7, விதி 1 இன் கீழேயே தாக்கல் செய்ய முடியும். ஆகையால், இப்போது, வாதி தரப்பில் சமர்ப்பிக்கும், பிராது, ஆர்டர் 7, விதி 1 என்று, நடு மையத்தில் எழுதுங்கள். அதன் பின்பு, வாதிகளின் விலாசம் என்று, தலைப்பிட்டு, வாதி வசிக்கும் மாவட்டம், ஊர், தெரு, கதவு இலக்கம், மற்றும், ஹிந்து என்றால், ஹிந்து என்றும், அப்பா பெயர், வயது, அதன் பின்பு, வாதியின் பெயர் என எழுதுங்கள். பல பேர் இருந்தால், வரிசையாக ஒன்று, இரண்டு என எழுதுங்கள். அதன் பின்பு, வாதிக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று எழுதுங்கள். அதன் பின்பு, பிரதிவாதிகளின் விலாசம் என்று தலைப்பிட்டு, மேலே சொன்னது போல, வாதிகளின் முகவரி போலவே, எழுதி கொள்ளுங்கள். அதன் கீழ், பிரதிவாதிகளுக்கு summon, நோட்டீஸ் அனுப்ப மேலே சொன்ன முகவரி போதுமானது என்று குறிப்பிடுங்கள். இதன் பெயர் லாங் cause டைட்டில் ஆகும். இப்போது, அடுத்த பாராவாக, நீதிமன்ற jurisdiction குறிக்க வேண்டும். நீங்கள் வழக்கு போடும் ஊர், தாவா நீதிமன்ற எல்லைக்குட்பட்டதால், இந்த வழக்கு இங்கு தாக்கல் செய்யபடுகிறது என்று எழுதுங்கள்
பா.வெ.
No comments:
Post a Comment