லஞ்சம் மற்றும் ஊழலை தடுக்க சட்டம் சொல்வதென்ன?
இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் இறப்பதற்கும், சாலைகள், ஆறுகள், ஏரிகள் அழிந்து போவதற்கும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கும், ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் கீழே வாழ்வை நடத்தும் கோடிக்கணக்கானோர் இருப்பதற்கும் காரணம் ஊழல் என்றால் மிகையாகாது.
அது பற்றி விரிவாக காண்போம்.
II. அரசுப் பணியாளார் என்ற தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்பபடுத்துவதன் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின், அல்லது
ஊழல்களைப் பற்றிய விவாதத்தின் போது, 6,ஜூன்,1962 அன்று திரு.லால்பகதூர் சாஸ்திரி "எல்லா விவகாரங்களும் அதிகாரிகள் கையில் கொடுக்கக் கூடாது. அதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும். அதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டார். அதன்படி அமைக்கப்பட்டது தான் சந்தானம் குழு" . அதன்படி அமைக்கப்பட்ட குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் இருந்தனர்.
DVAC கண்காணிக்க வேண்டியது யார் யாரை?
ஊழல் என்பது என்ன?
ஊழல் தடுப்புச் சட்டம்,1988 பிரிவு - 3 இன் படி ஊழல் என்பது
a) அரசுப் பணியாளர் அ) தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ பணி, சட்டப்படியான பணி ஊதியம் அல்லாத கைக்கூலி எதிலாகிலும் தூண்டுகோலாகவோ வெகுமதியாகவோ எவரிடமிருந்தும் வாடிக்கையாக ஏற்பாராயின் அல்லது கேட்டுப்பெறுவாராயின், ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டு பெறுவதற்கு முயல்வாராயின்,
b) தம்மால் செய்யப்பட்டிருக்கிற அல்லது செய்யப்படவிருக்கிற நடவடிக்கை அல்லது எதனோடும் தொடர்பு கொண்டிருக்கிற அல்லது தொடர்புடையவராக அநேகமாகத தொடர்பு கொண்டிருந்திருக்கக் கூடுமென்று தாம் அறிந்துள்ள அல்லது தம்முடைய அல்லது தாம் எவர் கீழ் பணிபுரிகிறாரோ அந்த அரசுப் பணியாளருடைய அலுவல்முறைப் பதவிப் பணிகளுடன் தொடர்பு எதுவுமுடைய எவரிமிருந்துதேனும் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ மறு பயனுக்காகவோ விலையுயர்ந்த பொருள் எதையேனும் வழக்கமாக தாம் ஏற்பாராயின் அல்லது கேட்டுப் பெறுவாராயின் அல்லது ஏற்க உடன்படுவாராயின் அல்லது கேட்டுப்பெற முயல்வாராயின்
c) அரசுப் பணியாளர் என்ற முறையில் தம்மிடம் அல்லது தம் கட்டாளுகையின் கீழ் ஒப்படைக்கப்பட்ட சொத்து எதனையும் நேர்மையற்ற முறையிலோ அல்லது மோசடியாகவோ தாம் கையாடல் செய்வாராயின் அல்லது பிறவாறு தமது சொந்த பயனுக்காக மாற்றிக் கொள்வாராயின் அல்லது பிறர் எவரையும் அவ்வாறு செய்ய அனுமதிப்பாராயின் அல்லது
d)
I. ஊழலான அல்லது சட்டமுரணான வழிகளின் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின் அல்லது
I. ஊழலான அல்லது சட்டமுரணான வழிகளின் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின் அல்லது
II. அரசுப் பணியாளார் என்ற தமது பதவி நிலையைத் தவறாகப் பயன்பபடுத்துவதன் மூலமாகத் தமக்காகவோ அல்லது வேறு யாருக்காகவோ விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் பெறுவாராயின், அல்லது
III. அரசுப் பணியாளராக பதவி வகிக்கும் போது பொது நலன் ஏதுமின்றி எவருக்காகவும் விலையுயர்ந்த பொருள் அல்லது பணமதிப்புள்ள பயன் எதனையும் கேட்டுப் பெறுவாராயின், அல்லது
அவரோ, அவர் சார்பில் வரும் எவருமோ, அவருடைய வருமானத்தின் தெரிநிலையான வழிவகைகளுக்குப் பொருந்தாத விகிதத்தில் பணம் தொடர்பான வழிவகைகளையோ அல்லது சொத்தையோ உடைமையில் கொண்டிருந்த அல்லது பதவி காலத்தில் கொண்டிருந்து, அதற்கு தெளிவுறக் கணக்கு காட்ட முடியவில்லையாயின் ஊழல் குற்றச் செயலை செய்ததாக சொல்லப்படுவார்.
பெரும் ஊழல்கள்
இந்தியாவில் இதுவரை நடந்துள்ள ஊழலில் ரூ.75 லட்சம் கோடிக்கும் மேல் என புள்ளிவிவரம் சொல்லப்படுகிறது.
நரசிம்மநாவ் பிரதமராக இருந்தபோது நடந்த யூரியா இறக்குமதி ஊழல் ரூ.133 கோடி, உர இறக்குமதி ஊழல் ரூ,1300 கோடி, லாலு பிரசாத் யாதவ் செய்த மாட்டு தீவன ஊழல் ரூ.950 கோடி. 1994-ஆம் ஆண்டின் சர்க்கரை இறக்குமதி ஊழல் ரூ.650 கோடி. சுக்ராம் தொலை தொடர்புத் துறை ஊழல் ரூ.1500 கோடி.
லால்லின் மின் உற்பத்தி திட்ட ஊழல் ரூ.374 கோடி. சி.ஆர்.பன்சாலி பங்கு பேர ஊழல் ரூ.1200 கோடி. மேகலயா வன ஊழல் ரூ.650 கோடி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் ரூ.4000 கோடி. யூ.டி.ஐ பங்கு பத்திர ஊழல் ரூ.4800 கோடி. தினேஷ் டால்மியா பங்கு வெளியீட்டு ஊழல் ரூ.595 கோடி.
ராணுவ ரேசன் ஊழல் ரூ.5000 கோடி. போலி முத்திரைத் தாள் ஊழல் ரூ.190 கோடி. சுரங்க ஊழல் ரூ.4000 கோடி. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் ரூ.50000 கோடி., ஜார்கண்ட் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் ரூ.130 கோடி. அரிசி ஏற்றுமதி ஊழல் ரூ.2500 கோடி. ஒரிஸ்ஸா சுரங்க ஊழல் ரூ.7000 கோடி.
சுமார் 35,000 கோடி உணவு தானிய ஊழல்,2003-ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் ஏழைகளுக்கான உணவு தானியத்தை வெளி சந்தையில் விற்றது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை 10 ஆண்டுகளாக விசாரித்து வருகிறது. சுமார் 3,500 கோடி காமன்வெல்த் விளையாட்டு ஊழல், 2010, விளையாட்டு போட்டி ஏற்பாடுகளில் ஊழல் செய்தது. சுமார் 1,76,000 கோடி ஊழல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு 2010-ஆண்டில், தொலை தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை உரிமம் சட்டத்திற்குப் புறம்பாக குறைந்த கட்டணத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது.
சுமார் 10,000 கோடி உத்தரப்பிரதேசம் தேசிய ஊரக சுகாதாரத் திட்டம் 2012ஆம் ஆண்டு இந்த ஊழலைப்பற்றி விசாரணை நடக்கும் போது 6 மருத்துவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். சுமார் 1,85,591 கோடி ஊழல், இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு 2012 ஆம் ஆண்டு ,நிலக்கரி சுரங்கம் ஏலம் விடப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. சுமார் 2,00,000 கோடி ஊழல், வக்பு வாரிய நிலமோசடி 2012 ஆம் ஆண்டு கர்நாடகத்தில், சிறுபான்மை நல வாரியத் தலைவரான மனிப்பாடியால் 7500 பக்க ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் உள்ள பாகல்பூரில் உள்ள ஸ்ரீஜன் தொண்டு நிறுவனம் அரசாங்க நிதி சுமார் ரூ.1000 கோடியை பணப் பரிமாற்றம் மூலம் ஊழல் செய்துள்ளது குறித்து அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கடந்த 2017, ஆகஸ்ட் 17-ம் தேதி சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்து வங்கிகளில் இருக்கும் உத்தேச கருப்புப் பணம்ரூ.71 லட்சம் கோடி என சொல்லப்படுகிறது.
ஊழல் கருத்துக் குறியீடு (Corruption Perceptions Index)
ஊழல் கருத்துக் குறியீடு என்பது ஜெர்மன் நாட்டில் பெர்லினில் இயங்கி வரும் Transparency International என்னும் அமைப்பால் உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. 2003 இல் இருந்து இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. பொதுவாக வளர்ச்சி கூடிய நாடுகளான வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நிப்பான் ஊழல் குறைவாகவும், வளர்ச்சி குன்றிய நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா ஊழல் அதிகமாக இருப்பதையும் குறிப்பிடுகிறது.
இந்தியாவில் ஊழலுக்கான காரணங்கள்
இந்தியாவில் ஊழலை ஊக்குவிக்க பல காரணங்கள் இருப்பதாக சர்வதேச பண நிதியம் (international monetary fund) நடத்திய ஆய்வு ஒன்றில் வீட்டோ டான்சி (Vito Tanzi), ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு உலகின் மிகப்பெரிய தணிக்கை மற்றும் இணக்கம் நிறுவனங்களில் ஒன்றான KPMG அதன் 2011 ஆம் அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

அதிக வரிகளும், மிக அதிக அதிகாரத்துவ கட்டுப்பாடுகளும் முக்கிய காரணங்கள் ஆகும். இந்தியாவில் நிறைய ஒழுங்குமுறை அமைப்புகள் இருக்கின்றன.
இலஞ்சம் கொடுக்காமல் இருந்தால் காரியம் தாமதமடைந்து பாதிக்கப்படும். இதற்கு இலஞ்சம் செலுத்துவதே மேல் என்று மக்கள் முடிவெடுக்கிறார்கள்.
சில சமயங்களில் அதிக வரி கட்டுவதற்கு பதிலாக ஊழல்வாதிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது மிகவும் மலிவாக இருக்கிறது.
உலகின் பிற நாடுகள் போல, அதிக கட்டுப்பாடுகள் மற்றும் அங்கீகார தேவைகள், சிக்கலான வரிகள் மற்றும் உரிமம் வாங்கும் முறைகள், கட்டாய செலவு திட்டங்கள், ஊழல்வாதிகளுக்கு அபராதம் இல்லாமை, வெளிப்படையான சட்டம் மற்றும் நடைமுறைகள் இல்லாமை இவை அனைத்தும் இந்தியாவில் ஊழலுக்கான காரணங்களாகின்றன.
ஊழலுக்காக சிறை சென்ற/குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகள்
லாலு பிரசாத் யாதவ், சுரேஷ் கல்மாடி, சுக்ராம்,ஓம்பிரகாஷ் சௌதாலா, மது கோடா, ஜெயலலிதா, பி. எஸ். எடியூரப்பா, ஜெகன் மோகன் ரெட்டி, தொழிலதிபர்கள் ராமலிங்கராஜூ ஆவர். ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒத்தோவியோ குவாத்ரோச்சி, ஆ.ராசா, தயாநிதி மாறன், கனிமொழி.
சந்தானம் குழு (Santhanam Committee Report)

ஊழல்களைப் பற்றிய விவாதத்தின் போது, 6,ஜூன்,1962 அன்று திரு.லால்பகதூர் சாஸ்திரி "எல்லா விவகாரங்களும் அதிகாரிகள் கையில் கொடுக்கக் கூடாது. அதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையே கருத்து பரிமாற்றம் இருக்க வேண்டும். அதற்கு ஒரு குழுவை அமைக்க வேண்டும் என குறிப்பிட்டார். அதன்படி அமைக்கப்பட்டது தான் சந்தானம் குழு" . அதன்படி அமைக்கப்பட்ட குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் இருந்தனர்.
திரு.K. சந்தானம், M.P. .
திரு. திகாராம் பலிவால், M.P.
திரு.R. K.காதில்கர், M.P.
திரு. நாத் பாய், M.P.
திரு.சம்பு நாத் சதுர்வேதி, M.P.
திரு.L. P.சிங், இயக்குனர், நிர்வாக கண்காணிப்புக் பிரிவு
திரு.சந்தோஷ் குமார் பாசு, M.P. கண்காணிப்புக் பிரிவு
திரு. D. P.கோஃலி

சந்தானம் குழுவின் பரிந்துரைகளின் படி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குனரம் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் ஊழலுக்கு எதிரான சட்டங்கள்
1. ஊழல் தடுப்புச் சட்டம், 1988 (Prevention of Corruption Act, 1988)
2. வருமான வரி சட்டம்,1961ன் படி வருமானவரி ஏய்ப்பு வழக்கு தொடரலாம் (Prosecution section of Income Tax Act,1961)
3. பினாமி பெயரில் சொத்து பரிமாற்றங்கள் தடுப்புச் சட்டம், 1988
The Benami Transactions (Prohibition) Act, 1988
4. பணச்சலவை தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, 2002)
5. அன்னிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டம்
6. மருந்துகள் மற்றும் உணவு கலப்படத் தடைச் சட்டம்
7. இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986

ஊழல் தடுப்பை கையாளுதல் (Handling of Corruption)
ஊழல் தடுப்பு, துப்பறிதல் என்ற இரு அம்சங்களில் கையாளப்படுகிறது. அதன்படி
ஊழல் தடுப்பு, துப்பறிதல் என்ற இரு அம்சங்களில் கையாளப்படுகிறது. அதன்படி
I. பாதிக்கப்பட்டவரின் புகார்
II. வருமானவரி அறிக்கை
III. அசையாச் சொத்து அறிக்கை
IV. செல்வ வரி, கொடைவரி, மறைமுகவரி,
II. வருமானவரி அறிக்கை
III. அசையாச் சொத்து அறிக்கை
IV. செல்வ வரி, கொடைவரி, மறைமுகவரி,
போன்றவைகள் பெரிதும் உதவும். ஒவ்வொரு நிறுவனமும் உள் - தணிக்கைக்கு மற்றும் சட்ட நீதியான தணிக்கைக்கு உட்பட்டது. மேலும் அரசியலமைப்பு உறுப்புகளான இந்திய கட்டுப்பாட்டு மற்றும் தணிக்கை அலுவலர் (Comptroller and Auditor General of India) மற்றும் சட்டமியற்றும் குழுக்களான மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, போன்றவை செயல்பாடுகளை கண்காணிக்கும். இக்குழுக்களின் அறிக்கை ஊழல் வழக்குகளுக்கு அடிகோளும். வருமானத்திற்கு அதிகமான சொத்து / குற்ற நடத்தை (Disproportionate Assets/ Criminal Misconduct) ஊழல் என்பது ஒரு வஞ்சக் கூட்டு(Collision) என்பதால் பெரும்பான்மை மக்கள் பொது ஊழியர்கள் / அரசு ஊழியர்கள் லஞ்ச கோரிக்கை மேல் புகார் கொடுக்க முன்வருவதில்லை. ஆகையால் அவர்களின் சொத்துக்களை வைத்தே புகார் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இது பெரும்பாலும் மூத்த அரசு ஊழியர்கள் மேல் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏனென்றால் இவர்கள் லஞ்சத்தை பணமாக பெருவதில்லை. ஆனால் தவறாக பெற்ற பணத்தை (Ill-gotten) அசையும், அசையா சொத்தை முதலீடு செய்கிறார்கள், அதை சுலபமாக அடையாளம் காணலாம்.
விசாரணையானது சந்தேகப்படும் அரசு ஊழியரின் சொத்துக்கள், சம்பாதித்த பணம், வருமானம் போன்றவை சொத்து குவிப்பை கணக்கிட உதவும். பெருஞ்சொத்து வழக்குகளில் நீதிமன்றத்தின் மூலம் சொத்துகள் அரசு எடுத்துக் கொள்ளும்.
ஊழலுக்கு எதிரான அரசு அமைப்புகள்
1. நடுவண் புலனாய்வுச் செயலகம் (Central Bureau of Investigation) (CBI)
2. தேசிய புலனாய்வு முகமை (இந்தியா) (National Inteligence Agency}
3. நடுவன் விழிப்புணர்வு ஆணையம்(Central Vigilance Commission) (CVC)
4. இந்திய தலைமை கணக்காயர் ( Controller and Auditor General of India) (CAG)
5. மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் புலனாய்வு அமைப்பு (Central Board of Direct Taxes (CBDT)
6. தமிழ்நாடு மாநில அரசு விழிப்புணர்வு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம்
7. இந்திய ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி நிர்வாக அமைப்பு

லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை (Directorate of Vigilance and Anti-Corruption) [DVAC]
DVAC-இன் முக்கிய பணிகள்
அரசு ஊழியர்களிடையே ஊழல் கண்காணித்து, ஊழலுக்கு எதிரான தொடக்கங்களை செயல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியர்கள் பணிகளில், அரசின் திட்டங்கள் செயல்படுத்தும் பொது கண்காணிப்பில் முறையற்ற செயல்கள்/ஒழுங்கற்ற செயல்கள், குற்ற நடவடிக்கைகள், ஊழல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஊழியரானவர் சட்டபூர்வமாக செய்யவேண்டிய கடமைகளை செய்வதற்கோ, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாலோ லஞ்ச கோரினாலோ, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாலோ குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகவல் திரட்டுதல்: ஒவ்வொரு துறையின் ஊழல் நடவடிக்கைகளை இயக்குநரத்தின் முக்கிய பொறுப்பாகும்.
ஒவ்வொரு துறை மற்றும் நிறுவனத்தின் தலைவர்கள் ரூ. 10 லட்சத்திற்கு அதிகமான அனைத்து திட்டங்கள் (Schemes & Projects) மற்றும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் DVAC-க்கு தெரிவிக்க வேண்டும். இயக்குனரம் அப்படியான திட்டங்களை தவறான நடவடிக்கைகள், ஊழலின்றி நடக்கிறதா என கண்காணிக்க வேண்டும். திட்ட விவரங்களை துறையிலிருந்து பெற்றவுடன் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மற்ற துறைகளிலிருந்து பெறப்பட்ட குறிப்புகள் DVAC இன் தொடர் செயலுக்கு(Follow-up) அனுப்பப்படும்.

DVAC கண்காணிக்க வேண்டியது யார் யாரை?
மாநில அரசின் அனைத்து விவகாரங்களிலும் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு நிறுவன ஊழியர்கள், பல்கலைகழக ஊழியர்கள் ஆவர். இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க G.O..(D)(1) No.1 P&AR (Per-N) நாள் 28, ஜனவரி, 1992 அதிகாரமளிக்கிறது. இயக்குனர் குரூப்-A,B,C மற்றும் D ஊழியர்கள் மீதான ஆரம்பகட்ட விசாரணைக்கு உத்தரவிடலாம். குரூப்-A,B,C மற்றும் D தவிர மற்ற ஊழியர்களை பிடிக்க (Trap) கண்காணிப்பு ஆணையரின் அனுமதி தேவை.
அகில இந்திய பணிகள், மாவட்ட ஆட்சியர், துறைத் தலைவர்கள், மேலாண்மை இயக்குனர்கள், அரசின் நிறுவனத்தின் தலைமை செயலர்கள் போன்றோரைப் பிடிக்க அரசின் முன்னனுமதி தேவை.
அகில இந்திய பணிகள், மாவட்ட ஆட்சியர், துறைத் தலைவர்கள், மேலாண்மை இயக்குனர்கள், அரசின் நிறுவனத்தின் தலைமை செயலர்கள் போன்றோரைப் பிடிக்க அரசின் முன்னனுமதி தேவை.
திடீர் ஆய்வு (Surprise Check)
அரசு அலுவலகங்களில் நம்பத் தகுந்த புகாரோ, தகவலோ பெற்றவுடன் DVAC துறைத் தலைவர்கள், மாவட்ட ஆய்வு அலுவலர்கள் ஆய்வுக்கு செல்ல வேண்டும். இருப்பு கணக்கை திடீர் ஆய்வு செய்வதன் மூலம், இருப்பு குறை இருப்பின் அது ஊழலுக்கான துப்பை கொடுக்கும்.

உள்-கண்காணிப்பு (Internal-Vigilance)
பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள், நிறுவன ஊழியர்களை கண்காணிக்க உள்-கண்காணிப்பு இயந்திரம் வைத்துள்ளனர். ஊழலுக்கான சாத்திய கூறுகள் அல்லது முதல்நிலை ஆதாரங்கள் கிடைக்கப்பட்டநிலையில் மேற்படி உள்-கண்காணிப்பு அமைப்பு DVAC க்கு வழக்கை பரிந்துரை செய்ய வேண்டும்.
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை முகவரிகள்
அலுவலகம்
|
தொடர்பு எண்கள்
|
இயக்குனர்,
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை , எண். 293, MKN ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016.
E-mail: dvac@nic.in
|
044-22311049 (நேரடி)
044-22321090 044- 22321085 044-22310989 044-22342142 Fax:044-22311080 |
இணை இயக்குனர்,
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை , எண். 293, MKN ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016. |
044-22311052 (Direct)
044-22321090 044-22321085 044-22310989 044-22342142 Fax: 044- |
துணை இயக்குனர்,
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை , எண். 293, MKN ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016. |
044-22311042 (Direct)
044-22321090 044-22321085 044-22310989 044-22342142 |
சிறப்பு விசாரணை பிரிவு
காவல்துறைத் தலைவர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை , எண். 293, MKN ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016. |
044-22321099 (Direct)
044-22321090 044-22321085 044-22310989 044-22342142
Fax:044-22321025
|
காவல் கண்காணிப்பாளர்,
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை , எண். 293, MKN ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016 | |
காவல் கூடுதல் கண்காணிப்பாளர்,
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை , எண். 293, MKN ரோடு, ஆலந்தூர், சென்னை - 600 016 |
044-22311056
|
சென்னை CSU - I கண்காணிப்பு அலுவலர்
காவல் கூடுதல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை , மாநகர சிறப்புப் பிரிவு- I, தபால் பெட்டி எண்.487, NCB 28, P.S.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028. |
044-24613020 (Direct)
044-24615929 044- 24615949 044-24615989 044-24954142 |
சென்னை CSU - III கண்காணிப்பு அலுவலர்
காவல் கூடுதல் கண்காணிப்பாளர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 485,TNHB கட்டிடம் II-ம் தளம்,
அண்ணா சாலை,நந்தனம், சென்னை - 600 035. |
044-24326020
|
மாவட்ட அலுவலகங்கள்
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
ராகவேந்திரா நகர்,
திருபருத்தி குன்றம் ரோடு
காஞ்சீபுரம்- 631 501.
|
044-27237139
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# No.:4,ராமசாமி நகர் விரிவாக்கம்,
கவுண்டம்பாளையம், கோயமுத்தூர் - 641 040. |
0422-238647 (off),
0422-2222250 (Res) 0422-2447550 Cell : 94450-48882 |
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 1/2, காமாட்சி அம்மன் கோயில் தெரு,
கருங்கல்பாளையம், ஈரோடு - 638 003. |
0424-2210898
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
ஸ்டோன் ஹவுஸ் ஹில், மடுவானா சந்திப்பு
கோத்தகிரி ரோடு
நீலகிரி- 643 001.
|
0423-2443962
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# B-3, ராஜாஜி தெரு, ஸ்வர்ணபுரி,
Stand.புதிய பேருந்து நிலையம் அருகில் சேலம் - 636 004. |
0427-2448735
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 1/7-1, திருச்செங்கோடு மெயின் ரோடு
தபால் அலுவலகம் அருகில்,
நல்லிபாளையம் Post, நாமக்கல் - 637 003. |
04286-281331
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
எண்.11, கமலா லக்ஷ்மி காலனி, ராமசாமி கவுண்டர் தெரு தருமபுரி - 636 701. |
04342-260042
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
எண் H-90,Tamilnadu Housing Board Phase-I, கிருஷ்ணகிரி - 635 001. |
04343- 292275
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 24, நீலி குடோன் தெரு, (மம்மி மருத்துவமனை அருகில்) வேலூர் - 632 001. |
0416-2220893
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 16, பவழ சாலை, அண்ணா நகர், S.P அலுவலகம் பின்புறம் கடலூர் - 607 001 |
04142-233816
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 92A, ராதாகிருஷ்ணன் சாலை, VGP நகர், கிழக்கு சால மேடு, விழுப்புரம் - 605401 |
04146-259216
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 1164, மெயின் ரோடு, தென்றல் நகர், வெங்கிகல், திருவண்ணாமலை. |
04175-232619
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 45/1, ஆஷா நகர், 2-வது அவன்யூ, 40 அடிரோடு, காந்தி நகர் Post, திருப்பூர் - 641603 |
0421-2482816
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
ரேஸ் கோர்ஸ் ரோடு, அண்ணா ஸ்டேடியம் எதிரில், திருச்சிராப்பள்ளி - 620 023 |
,
. 0431-2420166
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
3/922, C1 கயர்லபாத், சாஸ்திரி நகர், கல்லன்குறிச்சி சாலை, அரியலூர். |
04329-228442
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
SF No.6089/8, ஆலன்குளம் ஹவுசிங் யூனிட், கலக்டரேட் அருகில் புதுக்கோட்டை - 622 005. |
04322-222355
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
தமிழ்ப்பல்கலைக்கழக வளாகம் அஞ்சல், தஞ்சாவூர் - 613 010 |
04362-227100
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
சூர்யா நகர், கடம்படி, நாகப்பட்டினம்- 611 001. |
04365-248460
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 165/G, அழகர் கோயில் ரோடு, மதுரை - 625 002. |
0452-2531395
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 576/4, EB காலனி, செட்டிநாயக்கன்பட்டி, திருச்சி பைபாஸ் ரோடு, திண்டுக்கல்- 624 004. |
0451-2461828
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# W-4-21, Block-8-106/1, சேர்மேன் ரத்தினம் நகர் கிழக்கு, பெரியகுளம் மெயின் ரோடு, தேனி - 625 531. |
04546-255477
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
D-ப்ளாக், ராமேஸ்வரம் மெயின் ரோடு கஸ்டம்ஸ் அலுவலகம் அருகில்
ராமநாதபுரம்- 623 503.
|
04567-230036
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 3/391, திருப்பத்தூர் ரோடு, சிவகங்கை - 630 561 |
04575-240222
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
குமரசாமி ராஜ நகர், கலக்டரேட் வளாகம், விருதுநகர் - 626002 |
04562-252678
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
எண்:16/53A/1, மரிலமணி நகர், மத்திய சிறை அருகில், பாளையம்கோட்டை, திருநெல்வேலி- 627 002. |
0462-2580908
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
# 2/175, பாளையம்கோட்டை மெயின் ரோடு மறவன் மடம், தூத்துக்குடி- 628 101. |
0461-2310243
|
காவல் துணை கண்காணிப்பாளர்
லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை
#210/1A, லூர்து அன்னை சாலை, SP கேம்ப் ஆபீஸ் ரோடு, தளவாய்புரம், புன்னை நகர்r,கோரம் அஞ்சல், நாகர்கோயில் - 629 004 |
.
04652-227339
|
மத்திய புலனாய்வுத் துறை (Central bureau of Investigation)
மத்திய புலனாய்வுத் துறை மத்திட அரசு ஊழியர்கள் மற்றும் காரியங்களில் புலனாய்வு செய்யும். மாநில அரசு சம்மந்தப்பட்ட புலனாய்விலும் ஈடுபட அதிகாரமுண்டு.
Central Bureau of Investigation
Joint Director and Head of Zone, III Floor, E.V.K., Sampath Building,
College Road, Chennai 600006.
044-28232756 (Direct), 044-28272358(General), 044-28232755 (FAX)
e-Mail: hozchn@cbi.dot.gov.in
Joint Director and Head of Zone, III Floor, E.V.K., Sampath Building,
College Road, Chennai 600006.
044-28232756 (Direct), 044-28272358(General), 044-28232755 (FAX)
e-Mail: hozchn@cbi.dot.gov.in
Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475
Resources:
Report of the Committee on Prevention of Corruption, Government of India
www.cbi.nic.in
www.dvac.tn.gov.in
www.cvc.nic.in
www.transparency.org
www.tnpolice.gov.in Official Website of Tamilnadu Police
|
No comments:
Post a Comment