Thursday, January 10, 2019

இந்திரா காந்தி தேசிய விதவை ஓய்வூதியத் திட்டம்

பயன்கள்

மாதத்திற்கு ரூ.1000

1. தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்கு நபருக்கு ஒரு இலவச வேட்டி மற்றும் சேலை (அரசாணை 459, ச.ந.(ம)ச.தி.நாள்.25.10.1991)

2. மதிய உணவுத் திட்டத்தில் பங்கெடுப்போருக்கு மாதத்திற்கு 2 கிலோ இலவச அரிசி அல்லது மதிய உணவுத் திட்டத்தில் பங்கெடுக்காதவர்களுக்கு மாதத்திற்கு 4 கிலோ இலவச அரிசி (அரசாணை (நிலை) 288, ச.தி.நாள்.26.09.1997)

தகுதிகள்

1. மறுமணம் செய்திருக்க கூடாது

2. வருமானம் ஏதுமின்றி வயது வந்த மகன்கள் இருந்தாலும் ஓய்வூதியம் வழங்கலாம் (அரசாணை (நிலை) 92, ச.ந.(ம)ச.தி. நாள்.02.06.1998)

3. பிச்சை எடுப்பது தொழிலாக இருத்தல் கூடாது

4. வருமானம் ஆதாரம் இல்லாதவராக இருத்தல் வேண்டும்

5. ரூ.5000-க்கு மேல் சொத்து இல்லாதவராக இருத்தல் வேண்டும் அரசாணை (நிலை) 79, ச.ந.(ம)ச.தி. நாள்.25.07.2006)

இணைக்க வேண்டிய சான்றுகள்

1. வெள்ளை தாளில் மனு

2. புகைப்படம்

3. குடும்ப அட்டை நகல்

4. வருமானச் சான்று

5. இருப்பிடச்சான்று

தொடர்பு அலுவலர், துறை

வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) (எஸ்.எஸ்.எஸ்)

No comments:

Post a Comment