முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய வட்ட கணக்குகள்!
ஒரு இடம் சம்பந்தமாக அனைத்து தகவல்களும் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருக்கும் கணக்குகளின் மூலம் நமக்கு கிடைக்கும் , அவையே போதுமானதாக இருக்கும். அதுவே பெரிய அளவில் நில சிக்கல்கள், பழைய கணக்குகளை எல்லாம் தேடி ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள தேவைபட்டால் வட்ட கணக்குகளையும் பார்வையிட வேண்டி இருக்கிறது. அதனால் ஓரளவாவது வட்ட கணக்குகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
A -பதிவேடு ; இப்பதிவேடு இரண்டு பிரதிகள் இருக்கும் , ஒன்று கிராம கணக்கில் இருக்கும். அ –பதிவேடு மற்றொன்று வட்டத்திலும் இருக்கின்ற அ-பதிவேடு இப்பதிவேட்டில் நிலையான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் புல எண், உட்பிரிவு மாறுதல்கள் , நில ஒப்படைப்பு , நிலமாற்றம் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் வட்டாட்சியர் அலுவலக பிரதியிலும் VAO பிரதியிலும் வட்டாட்சியர்அவர்களால் பதியபட வேண்டும்.
B – பதிவேடு; தற்போது பராமரிக்க படவில்லை என்றாலும், பழைய எஸ்டேட் இனாம் நிலங்கள் பற்றிய கணக்குகள் , இதில் இருக்கும் நில விவரங்கள் எல்லாம் தற்போது ரயத்துவாரியாக மாறி விட்டு இருக்கும், மேலும் 1963 க்கு முன் கிராமகணக்கில் நிலங்கள் என்னவாய் இருந்தது என்று அறிய B – பதிவேடு உதவும்.
B1 – பதிவேடு: தேவதாசிகளுக்கு கொடுக்கப்பட்ட இனாம் விவரங்கள் , ஜாமீன் சமய கொடைகள், அறகொடைகள், கிராம பணி கொடைகள் மற்றும் பலவிதமான கொடைகள் இதில் இருக்கும்.
C – பதிவேடு: குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலங்களை பற்றிய பதிவேடு இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
D– பதிவேடு : தாழ்த்தப்பட்ட மக்கள் & பழங்குடியினர் ஏழைகளுக்கு நில ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்களை பதியும் பதிவேடு
F – பதிவேடு: (LAND ALINATION) நில உரிமையை அரசின் ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு மாற்றி இருக்கும் பதிவேடு ஆகும்.
G – பதிவேடு: வாரிசுதாரர்கள் யாரும் இல்லாமல் அரசுக்கே திரும்பி வந்து விடும் நில விவரங்களை காட்டும் பதிவேடு. இன்னும் நிறைய கணக்குகளை வட்டங்களில் பராமரிகின்றனர் .
ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான கணக்குகள் இவைகள் மட்டும் ஒரு மன வரைபடமாக ( MIND MAP) மனதில் வைத்து இருந்தால் போதுமானது.
ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட முக்கியமான கணக்குகள் இவைகள் மட்டும் ஒரு மன வரைபடமாக ( MIND MAP) மனதில் வைத்து இருந்தால் போதுமானது.
No comments:
Post a Comment