வருவாய் துறையில் ஆவணங்கள் பெறுவது நமது சட்டபூர்வமான உரிமை!!!
கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் , வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநில நில நிர்வாகம் என்று எல்லா அலுவலகங்களிலும் உங்களுடைய நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், புலபடம், போட்டோ ஸ்கெட்ச், கிராம வரைபடம், SLR நகல், பழைய சிட்டா, பழைய புலபடம், பழைய ஒப்படை பட்டாக்கள், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்களின் உத்தரவுகளின் நகல்களை மனு செய்து நகல்களை பெற முடியும்.
மேற்படி அலுவலகங்களில் கேட்டால் தரமறுக்கிறார்கள் என்றே என்னிடம் பலர் கேட்டால் தரமறுக்கிறார்கள் என்றே சொல்கின்றனர்.ஆமாம் கேட்டால் தரமாட்டேன் என்று தான் சொல்லுவார்கள். அதனால் எழுதி கேளுங்கள், எழுதி கேட்டாலும் தரவில்லை என்றால் பதிவு தபாலில் எழுதி அனுப்புங்கள், நிச்சயம் கேட்ட ஆவணங்களை தருவார்கள்,
வாயால் கேட்பதை விட எழுதி கேட்டு பழகி கொள்ளுங்கள். கேட்கும் ஆவணங்கள் உங்களுக்கு தொடர்புடையதாக மட்டும் இருக்க வேண்டும். அல்லது உங்களுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு தேவைபடுவதாக இருக்க வேண்டும். ரகசிய ஆவணங்களை தவிர மீதி ஆவணங்களை நிச்சயம் கொடுப்பார்கள்.
சில ஆவணங்களை தேடி எடுத்து தர வேண்டிய நிலை இருந்தால் , தேடி கூலி கொடுத்து எடுப்பதற்கு தயாராய் இருக்க வேண்டும். பணத்தை அரசு கருவூலம், பாரத ஸ்டேட் வங்கியிலும் கட்டலாம் . பணம் கட்டும் செல்லானில் அலுவலகத்தோட முத்திரையும், கணக்கு என்றும் பெற்று கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் கடிதத்தில் கேட்கும் போது வருவாய் நிலை ஆணைப்படி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.
இவையெல்லாம் கடிதத்தில் கேட்கும் போது வருவாய் நிலை ஆணைப்படி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்.
உங்களுக்கு தொடர்பில்லாத ஆவணங்கள் , ஆனால் உங்களுக்கு நீதிமன்ற வழக்குகளுக்கு தேவைபடுகிறது என்றால் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி ரூ. 5 நீதிமன்ற விலையை ஒட்டி மனு எழுதி இறுதியில் சாட்சிய சட்டத்தின் கீழ் ஆவணங்களின் நகலை தருமாறு வேண்டுகிறேன் என்று எழுதப்பட வேண்டும்.
அடுத்ததாக தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழும் மனு செய்து ஆவணங்களின் நகல்களை பெறலாம். மூன்று சட்டங்களின் வழியாகவே ஆனால் எதில் வேண்டுமானாலும் நாம் ஆவணத்தின் நகல்களை பெற்றுகொள்ள முடியும். ஆவணத்தின் நகல்கள் பெறுவது நமது சட்டபூர்வமான உரிமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சட்டபூர்வமான உரிமை என்று அரசு எந்திரத்துடன் சண்டையிட்டு கொண்டு நிற்க கூடாது.நல்ல ஆளுமையும் மரியாதையாக பேசும் முறையும்தான் உங்களுக்கான ஆவணங்களை பெறுவதற்கு துணையாக இருக்கும்.
சட்டபூர்வமான உரிமை என்று அரசு எந்திரத்துடன் சண்டையிட்டு கொண்டு நிற்க கூடாது.நல்ல ஆளுமையும் மரியாதையாக பேசும் முறையும்தான் உங்களுக்கான ஆவணங்களை பெறுவதற்கு துணையாக இருக்கும்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு:8110872672
(குறிப்பு:மேற்கண்ட எண்ணுக்கு யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள் பார்த்து தினமும் 50 அழைப்புகளுக்கு மேல் வருவதால் அதனை ஒழுங்கமைத்து பேச அழைப்புகளை வரன்முறை படுத்தி இருக்கிறோம். வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை பேசுங்கள். ஞாயிறு மற்றும் வார நாட்களில் மீதி நேரங்களில் வாஸ்அப்பில் குறுசெய்தி அனுபபுங்கள்.அனைத்து அழைப்புக்களுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் என் குழுவினர் டோக்கன் எண் கொடுத்து அதனை நான் தினமும் இரண்டு மணி நேரம் பேசுகிறேன்.அவசரமாக பேச வேண்டும் என்று எங்களை மிரட்ட வேண்டாம் என்று அன்புடன் கேட்டு கொள்கிறோம்!😃😃)
முழுமையாக படித்தேன். மிகவும் சிறப்பு.
ReplyDelete